ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை பற்றிய பகிர்வு!

Posted By:
Subscribe to Boldsky

ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. சில சமயங்களில், சில காலத்திற்கு பிறகு அவரது சொந்த குடும்பத்தாராலேயே கைவிடப்படும் அவலநிலையில் வாழ்ந்து வரும் ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

Acid Victim Who Survived Her Attack Shares Her Story !

வெகு சிலர் மட்டுமே அன்பும், உதவியும் கிடைத்து தங்கள் வாழ்க்கை பயணத்திற்கு மீண்டு வருகிறார்கள். அதில் ரேஷ்மாவும் ஒருவர். ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, இப்போது மீண்டும் தனது பழைய இயல்பு அழகு நிலைக்கு திரும்பியுள்ளார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பிறந்தநாள் அன்று!

அன்று ரேஷ்மாவின் 21வது பிறந்தநாள். வெளியே பிறந்தநாளை கொண்டாடிவிட்டு தனது சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. சிலர் அவர்கள் மீது ஆசிட் வீசி சென்றனர். ரேஷ்மாவின் சருமமும், உடையும் ஒன்றாக உருக துவங்கியது, அவர் வலி தாங்காமல் கதறினார்.

மறுப்பு!

ரேஷ்மாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ரேஷ்மாவிற்கு தனது முகத்தை தானே கண்ணாடியில் காண மிகவும் அச்சமாக இருந்தது. இதனால் மனமுடைந்து சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடுவோமோ என எண்ண துவங்கினார் ரேஷ்மா.

ஆனால், அவருக்கு மிகவும் அட்வான்சுடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஸ்கின் கிராப்ட் எனப்படும் முறையை கையாண்டு அவரது முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நிலையில் தான் ரேஷ்மா இருந்தார்.

சமூக ஊடகம்!

ரேஷ்மா எப்போதுமே சமூக ஊடகத்தில் ஆக்டிவாக இருப்பவர்.தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனது நிலையை பகிர துவங்கினார். கடினமான சூழல்களை கூட அவர் சமூக ஊடகம் மூல கையாள துவங்கினார். தனது சமூக ஊடக முகவரிகள், ப்ளாக், இணையம் என அனைத்திலும் பதிவுகள் இட்டுக் கொண்டே இருந்தார். அந்த சர்ஜரி கொஞ்சம் வலி மிகுந்தது தான். அதையும் கடந்து வந்தார் ரேஷ்மா.

முழுமையாக குணம்!

அந்நாள் ரேஷ்மாவின் வாழ்வில் ஒரு விழாவாக மாறியது. முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது அழகு நிலைக்கு திரும்பினார் ரேஷ்மா. முன்பு இருந்ததை காட்டிலும் அழகாக மாறினார் ரேஷ்மா.

வாழ்த்துக்கள்!

ரேஷ்மாவின் மன தைரியம் மற்றும் ஆசிட் வீச்சில் இருந்து மீண்டு வந்ததை கண்டு, சமூக ஊடகங்களில் இவரை பின்தொடர்ந்து வரும் நபர்கள் அனவைரும் இவரை பாராட்டு மழையில் நனைத்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Acid Victim Who Survived Her Attack Shares Her Story !

Acid Victim Who Survived Her Attack Shares Her Story !
Story first published: Saturday, September 9, 2017, 10:00 [IST]
Subscribe Newsletter