மணமான பின் தனது வாழ்க்கையையே மாற்றிக்கொண்ட ஒரு ஆசிரியையின் கதை ! # நான் கடந்து வந்த பாதை #4

By: Peveena
Subscribe to Boldsky

நமது எண்ணங்கள் தீவிரமானால் அது நன்றாகவே நடக்கும் என்பது ஒரு ஆசிரியரின் வாக்கை எடுத்துக்கட்டாகும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது தனது வாழ்க்கையை உய்ரத்திக் கொள்ள நினைக்கும் பல லட்ச பெண்களில் எத்தனை பேர் அதனை செயல்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.

அப்படி டாக்டர்களையும்,என்ஜினீயர்களையும்,பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும்,சமூதாயத்தில் நல்ல மனிதர்களையும் உருவாக்கிய ஒரு ஆசிரியையின் கதை இது. இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

இன்று இந்த காலத்தில் "நாம் இருவர் நமக்கு இருவர்" மற்றும் "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்று தான் குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கிறது.ஆனால் 40-50 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் தெற்கே உள்ள கிராமங்களில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 5 குழந்தைகள் இருப்பர்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

அந்த மாதிரி குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் அன்பான குடும்பம்,அண்ணன் தம்பிகளின் அரவணைப்பில் வளர்ந்த பெண் தனது 19 ஆம் வயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையை படித்து முடித்தவுடன் கல்யாணம் செய்து கொண்டார் ஆனால் அவருக்கும் ஆசை உண்டு நிறைய படித்து வங்கியில் ஒரு நல்ல பதவிக்கு வர வேண்டும் என்று.

ஆனால் பெண் என்பவள் தனது விருப்பத்தை மட்டுமின்றி பெற்றோர்களின் விருப்பத்திற்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் வளர்ந்த பெண் தனது ஆசையை மறைத்தார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

ஆனால் பெற்றோர் பார்த்த மாப்பிளையோ மிகவும் அன்பானவர்.யாரையும் புண்பட பேசி அறியாதவர்,தன்னை நம்பி வந்த பெண்ணை தாயை விட மேலாக மதித்தவர்,அவரும் இதே போன்ற குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.தனக்கென ஒரு எளிமையான குடும்பத்தை உருவாக்கி கொண்டார் அழகான குடும்பம் ஒரு மகன் ஒரு மகளென.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

மிகவும் சிறு வயதிலேயே குழந்தை பிறந்ததாலோ என்னவோ உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டது.இதே நேரத்தில் தனது சிறு தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களால் நிறைய கடன் ஏற்பட்டுவிட்டது என்பதை மனைவி மேல் உள்ள அதிகமான அன்பின் காரணமாக மனைவியின் கவனத்திற்கு கொண்டு செல்ல தவறினார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

இதே அன்பின் காரணமாக கணவரை புரிந்து கொண்ட மனைவியாக கடன் விவரங்களை தெரிந்து கொண்டு,தனது உடல் கோளாறுகளை மறந்து ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக சேர்ந்தார்.மேலும் படிக்க ஆரம்பித்தார்.நிறைய அரசு சார்ந்த வேலைகளுக்கு முயற்சித்தார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

அவரது விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கை காரணமாக அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் வேலையும் கிடைத்தது.கணவரின் தொழிலுக்கு கை கொடுத்தார்.தனது குழந்தைகளுக்கு நல்ல படிப்பைக் கொடுத்தார்.இவருக்கு உதவி செய்ய தனது அண்ணன் தம்பிகளின் ஆதரவு நிச்சயமாக கிடைத்திருக்கும் ஏனெனில் அவர்களின் அன்பு அத்தகையது.ஆனால் அந்த அன்பை மட்டும் பெற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறினார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

தனது விடா முயற்சியால் இன்றும் அவர் படித்து கொண்டிருக்கிறார். தனது மகனை டெக்னிக்கல் மானேஜராகவும்,மகளை ஒரு எஞ்சினீயர் பட்டதாரியாகவும் உயர்த்தி இருக்கிறார். இவரது ஆசையை நிறைவேற்ற இன்று அவரது மகள் வங்கி பணிகளுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.அதுமட்டுமின்றி தனது கணவரின் படிப்பையும் ஊக்குவித்து மற்ற செல்வங்களை விட கல்வி செல்வதை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

அவர்களின் வீடு மாட மாளிகையாகவும்,கூட கோபுரங்களாகவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எளிமையான அமைப்பில் அன்பும்,பண்பும்,கல்வியும் நிறைந்த இடமாக இருக்கிறது.தனது குழந்தைகளுக்கு அன்பையும்,பண்பையும்,கல்வியையும்,மரியாதையையும் அள்ளிக் கொடுத்திருப்பதை போலவே எந்தவித பாகுபாடுமின்றி தனது மாணவர்களுக்கும் இவை அனைத்தையும் கொடுத்திருக்கிறார், கொடுத்து கொண்டிருக்கிறார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

இன்றும் அவருடைய மாணவர்கள் இவரது பெயரை கேட்டாலோ (அ) பள்ளிக்கு சென்றாலோ இவரை சென்று பார்க்காமல் திரும்ப மாட்டார்கள்.எளிய காட்டன் புடவையில் இருக்கும் இவர் மிகவும் எளிமையானவர்.இவர் குறைகளை தனது தன்னம்பிக்கையால் நிறைகளாக மாற்றக் கூடியவர். இவரிடம் பேசினாலே புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் பெறலாம்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதாக சரியான தீர்வை தரக் கூடியவர்,முத்துநகரம் என்றழைக்கக்கூடிய தூத்துக்குடியில் பிறந்தவர் இவர் பெயர் புனிதராணி ஜெயக்குமார்.அவர் படிப்பு தகுதி D.Ted,MA,B.lit,B.Ed,BA ஆகும்.தனது குடும்பத்திற்கு மட்டுமின்றி பல்வேறு மாணவர்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறார்.

 கடந்து வந்த பாதை :

கடந்து வந்த பாதை :

இவரை போன்றே பல பெண்மணிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்கின்றனர் மற்றும் வேலைக்கு செல்லாமல் குடும்பப் பொறுப்பை மட்டும் ஏற்று கொண்டிருக்கும் அனைத்து பெண்களுமே தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவே இருக்கின்றனர்.இன்று பெண்களை பல்வேறு ஆபத்துகள் சுற்றி இருந்தாலும் தனது தன்னம்பிக்கையால் அவற்றை உடைத்து எறிந்து பெரும் சக்திகளாக உருவெடுக்கின்றனர்.அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A story of a Teacher who started her new life as she wished after her marriage

A story of a Teacher who started her new life as she wished after her marriage
Please Wait while comments are loading...
Subscribe Newsletter