நள்ளிரவில் பப்பிலிருந்து குடிபோதையில் டாக்ஸி ஏறிய பெண், அடுத்து நடந்தது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

ஒரு டாக்ஸி டிரைவரின் வாழ்க்கையை மாற்றியமைத்த உண்மை சம்பவம் இது. நம் நாட்டிலேயே டாக்ஸி-ல் பயணம் செய்த பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற எத்தனையோ செய்திகளை நாம் படித்திருக்கிறோம்.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் பார்ட்டி பப் என்ற பெயரில், மிகுதியான குடிபோதையில் டாக்ஸி ஏறிய எத்தனையோ பெண்கள் கசப்பான சம்பவங்களை கடந்து வந்துள்ளனர். எண்ணிலடங்கா எந்த பட்டியலில் இருந்து சற்று மாறுப்பட்டது இந்த சம்பவம்.

மிகுதியான போதையில் தான் புக் செய்த டாக்ஸியில் ஏறிய பெண்...., அடுத்து நடந்தது டிரைவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக மாறியது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காட்சி #1

காட்சி #1

அந்த புகழ் பெற்ற பப்பின் முன் டாக்ஸி டிரைவர் புக் காரை செய்த பெண்ணை ஏற்றி செல்ல வந்து நின்றார். போதையின் உச்சத்தில் இருந்த பெண்மணி மிகவும் தடுமாறிய நிலையில் இருந்தார். நிற்பதற்கே மிகவும் சிரமப்பட்டு தான் வந்தார் அந்த பெண்.

காட்சி #2

காட்சி #2

அந்த பெண் இருந்த போதை நிலையை உணர்ந்த டிரைவர் எப்படியும் இன்று காரை கழுவ வேண்டிய நிலை ஏற்படும் என எண்ணினார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி ஒரு நிலை உண்டாகவில்லை.

காட்சி #3

காட்சி #3

மிகவும் அதிக போதையில் இருந்த பெண்மணி, டிரைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மேலும், டிரைவரை வேகமாக ஓட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

காட்சி #4

காட்சி #4

காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு, மெலிசாக சிரித்தப்படியே வந்தார். டாக்ஸியை ஒட்டிக் கொண்டிருந்த டிரைவர் அவ்வப்போது அந்த பெண்மணியின் நிலையை கவனித்துக் கொண்டே இருந்தார்.

காட்சி #5

காட்சி #5

திடீரென அந்த பெண்மணி டிரைவரிடம் , நீங்கள் என்றேனும் மரணத்தை எண்ணி அஞ்சியதுண்டா என வினாவினார். அதற்கு அந்த டிரைவர் ஒவ்வொரு நாளும் அந்த அச்சம் என்னை தொற்றியதுண்டு என பதிலளித்தார்.

காட்சி #6

காட்சி #6

சற்றே சோகமான முகத்துடன், தனக்கு புற்றுநோய் போதிப்பு ஏற்பட்டுள்ளதை அந்த பெண் டிரைவரிடம் கூறினார். டிரைவருக்கு ஒரு நொடி இதயத்துடிப்பு நின்றது போன்ற உணர்வு.

அவர் கூடிய விரைவில் இறந்துவிடுவார் என்பதை உணர்ந்த டிரைவருக்கு கார் ஓட்டுவதில் தடுமாற்றம் ஏற்பட்டது.

காட்சி #7

காட்சி #7

இன்று தான் எனது கடைசி நாள். வேலையை நான் விட்டுவிட்டேன், என் அலுவலக நண்பர்களுடன் பார்ட்டி, கொண்டாட்டம் என இன்று இனிதே முடிவடைந்தது. வெளிநாட்டில் எனக்கு வேறு நல்ல ஆஃபர் கிடைத்துள்ளது என கூறினார்.

காட்சி #8

காட்சி #8

அந்த பெண்மணியின் நண்பர்கள், அலுவலக தோழர்கள் எல்லாம் வெளிநாட்டு பயணம், திட்டம் என அறியாமல் இருந்தனர். அந்த பெண் எல்லாம் இனிமையான முடிவு தான் என கூறி பிரிந்திருந்தார். டாக்ஸி அந்த பெண்மணியின் இடத்தை அடைந்தது, டிரைவர் காரை நிறுத்தினார்.

காட்சி #9

காட்சி #9

முகத்தில் புன்னைகையோடும், மனதில் வருத்ததோடும் தன்னை கடந்து சென்ற காரை ஒரு முறை பார்த்துவிட்டு, தனது திரும்ப முடியாத வெளிநாட்டு ஆஃபரை நினைத்து சிரித்தப்படியே வீட்டுக்குள் நுழைந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She Was Drunk And Took A Cab... What Happened Next?

She Was Drunk And Took A Cab... What Happened Next?
Story first published: Friday, September 2, 2016, 11:27 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter