Latest Updates
-
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும்
நடிகர் தனுஷை வெகுஜன மக்களுக்கு பிடிக்க என்ன காரணம்? - "மாரி" ஸ்பெஷல்!!!
"துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் கதாநாயகனாக தனுஷ் களம் இறங்கிய போது, "கேமராவும், ட்ரைபாடும் இருந்துட்டா போதுமே, எல்லாரும் படம் எடுக்குறேன், நடிக்கிறேன்னு கிளம்பிருவாங்க.." என்று கோலிவுட்டின் முக்கிய புள்ளிகள் தனுஷை விமர்சித்தனர். ஆனால் இன்று, அவர்களே தனுஷ் தமிழ் திரையுலகின் சொத்து, அடுத்த தலைமுறையின் முக்கிய நடிகர் என்று பாராட்டுகிறார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
அதே போல, சுள்ளான் திரைப்படத்தின் ரிலீஸின் போது தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது. ஆகையால், சுமாராக ஓடிக்கொண்டிருந்த படத்தை ரஜினி ரசிகர்கள், தலைவரின் மருமகன் என்று கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக ஓட வைத்தனர். சில தோல்வி படங்கள் தந்து தத்தளித்து வந்த தனுஷ் இனி ரஜினி புண்ணியத்தில் கரையேறிவிடுவார் என்றும் சிலர் ஏளனம் பேசினர்.
நடிகர் "இளையதளபதி" விஜய் பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
ஆனால், இன்று அதையும் தகர்த்து தனது சொந்த உழைப்பால் பாலிவுட் வரை வளர்ந்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் தனுஷ். 30 வயதில் ஓர் நடிகர் இவ்வளவு உச்சம் அடைவது லேசுப்பட்ட காரியமல்ல. சமீபத்தில் கூட தனுஷின் "ஷமித்தாப்" படத்தை கண்டு, ஓர் ஆங்கிலேயே பெண் இயக்குனர் ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கார்மென்ட்ஸில் வேலை செய்த "தல" அஜீத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
இனி, வெகுஜன மக்கள் தனுஷை அதிகமாக விரும்புவதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.....
அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்ட நடிகர் நடிகைகள்!!!

பலவீனத்தை பலமாக மாற்றியவர்
ஆரம்ப காலகட்டத்தில் தனுஷின் உடல் மொழியை கண்டு, இவருக்கு ஹீரோக்கான உடல் வாகு இல்லை. இவரால் தொடர்ந்து திரையுலகில் நிலைக்க முடியாது என்று பலர் கூறினார். இது, இவருடைய பலவீனமாக இருந்தது. ஆனால், இதையே பக்கத்து வீட்டு பையன் போல இருக்கிறார், நம்முள் ஒருவர் போல இயல்பாக இருக்கிறார் என்ற எண்ணம் எழும் வகையில், தனது பலமாக மாற்றிக்கொண்டார் தனுஷ்.

பாலிவுட்டிலும் தடம் பதித்தார்
கோலிவுட் டூ பாலிவுட் சென்று வெற்றியை ருசித்த நடிகர்கள் மிகவும் சிலர் தான். அந்த பட்டியலில், கமல், ரஜினிக்கு அடுத்து பாலிவுட்டில் நட்சித்திர அந்தஸ்துடன் ஜொலிப்பவர் தனுஷ். ரசிகர்கள், விமர்சகர்கள், இயக்குனர்கள் என அனைவரும் தனுஷை பாலிவுட்டில் வரவேற்றனர்.

பன்முக கலைஞர்
இவர் வெறும் நடிகராக மட்டும் வெற்றிபெறவில்லை, ஓர் பாடகராக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக, திறமை சாலியை ஏற்றுவிடும் நல்ல மனிதராக என அனைத்திலும் சிறந்து விளங்கியுள்ளார். வளர்ந்துவரும் நடிகர்களுக்கு ஓர் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார் தனுஷ்.

இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு
இவரது "வண்டர்பார்" தயாரிப்பு நிறுவனம், அடுத்தடுத்து இளம் திறமைசாலியான இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது. துறை செந்தில், மணிக்கண்டன், விக்னேஷ் என இந்த பட்டியல் நீள்கிறது.

பண்பும், குணமும்
ரீல் வாழ்க்கையில் மட்டுமின்றி, ரியல் வாழ்க்கையிலும் கூட மிகவும் பண்பாக நடந்துக்கொள்ளும் இவரது குணம், திரை பிரபலங்களில் இருந்து விசிலடிக்கும் ரசிகர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இவர், திரையை தவிர வேறு எங்கும் புகைப்பதும் இல்லை, மது அருந்துவதும் இல்லை.

விருதுகள்
பிலிம்ஃபேர் விருதுகளில் தங்களது பெயர் இடம்பெறவே அனைவரும் தட்டி தடுமாற, ஏற்கனவே ஆறு பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும் இரண்டு தேசிய விருதுகள் வாங்கி தனது பாக்கெட்டில் வைத்திருக்கிறார் தனுஷ்.

திரைப்படம் தேர்ந்தெடுக்கும் முறை
திரையுலகில் இரண்டு பாதைகள் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றில் நடிகர்கள் பயணிப்பது வழக்கம். அது தான் கிளாஸ் மற்றும் மாஸ். ஆனால், தனுஷ் கிளாஸ் மற்றும் மாஸ் இரண்டிலும் தூள் கிளப்புகிறார். இவரது, "3", "மயக்கம் என்ன", "மரியான்" மற்றும் வேலையில்ல பட்டதாரி, "புதுப் பேட்டை, "திருவிளையாடல் ஆரம்பம்" தற்போது "மாரி" போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

ரஜினி இவருக்கு முன்மாதிரி
ரஜினியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பயணித்து வருகிறார் தனுஷ். தனக்கென ஓர் தனி ஸ்டைல், நடிபற்றால், உடல் மொழி என அனைத்திலும் தனித்து விளங்குகிறார் தனுஷ். சில சமயங்களில் தனுஷ் நடிக்கும் போது, ரஜினியின் சாயல் தெரிவதை நாமும், திரையில் கண்டுருக்கிறோம்.

பெரியவர்களை மதிக்கும் குணம்
தன்னை விட பெரியவர்கள் இருக்கும் இடத்தில அவர்களுக்கு இடம் கொடுத்து, மதிப்பளித்து திகழும் தனுஷின் குணம் தான் அவரை வெற்றிப்படியில் ஏற வைக்கிறது. அதே போல புகழ்ச்சியை விரும்பாதவர் தனுஷ்.

இயக்குனர்களின் நடிகர்
தனுஷ் இன்று இவ்வளவு உச்சத்தில் இருப்பதற்கு காரணம் இது தான். இவர் இயக்குனரின் நாயகன். இயக்குனர் இவரி எவ்வாறு வடிக்க விரும்புகிறார்களோ, அவ்வாறு உருமாற முழு ஒத்துழைப்பும் தருபவர். இயக்குனரின் வேலையில் மூக்கை நுழைக்கும் குணம் இவருக்கு கிடையாது. செல்வா, வெற்றி மாறன், ஆனந்த் .எல். ராய், வேல்ராஜ் போன்ற சிற்பிகளால் இப்போது இவர் பெரும் உருவெடுத்து நிற்கிறார்.



Click it and Unblock the Notifications