For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!

டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் அறிவுரை அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.

|

இந்தியாவின் 11 ஆவது ஜனாதிபதியாக இருந்த டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் மறைந்தாலும், இன்னும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார். அப்துல் கலாம் அவர்கள் மிகவும் எளிமையானவர் மற்றும் பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்தவர். இதற்கு இவரது குணம் மட்டுமின்றி, பேச்சாற்றலையும் காரணமாக சொல்லலாம்.

டாக்டர். அப்துல் கலாம் அவர்கள் ஏழ்மை குடும்பத்தில் இருந்து வந்தாலும், தன் அயராத உழைப்பினால், பலவற்றை சாதித்து, உலக அளவில் மிகவும் பிரபலமான மனிதரானதோடு, மிகச்சிறந்த பேராசிரியராகவும் விளங்கினார். மாணவர்கள் எளிதில் புரியும் வண்ணம் பல அறிவுரைகளை வழங்கினார். இவரது அறிவுரை அனைத்துமே மாணவர்களை சிந்திக்கச் செய்ததோடு, அதற்கேற்ப நடக்கவும் வைத்தது. மேலும் இவர் தன்னம்பிக்கையூட்டும் பல பொன்மொழிகளை எழுதியுள்ளார்.

இங்கு டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் சில ஊக்கமூட்டும் மற்றும் எழுச்சியூட்டும் பொன்மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொன்மொழி 1

பொன்மொழி 1

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.

ஆனால்,

இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

பொன்மொழி 2

பொன்மொழி 2

கனவு காணுங்கள்!

ஆனால் கனவு என்பது

நீ தூக்கத்தில் காண்பது அல்ல..

உன்னை தூங்க விடாமல்

செய்வதே (இலட்சிய) கனவு

பொன்மொழி 3

பொன்மொழி 3

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,

எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

பொன்மொழி 4

பொன்மொழி 4

நாம் அனைவருக்கும்

ஒரே மாதிரி திறமை

இல்லாமல் இருக்கலாம்.

ஆனால்,

அனைவருக்கும் திறமையை

வளர்த்துக் கொள்ள ஒரே

மாதிரி வாய்ப்புகள்

உள்ளன.

பொன்மொழி 5

பொன்மொழி 5

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...

உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...

பொன்மொழி 6

பொன்மொழி 6

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,

அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.

கடமையை பற்றி கனவு காணுங்கள்,

அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

பொன்மொழி 7

பொன்மொழி 7

ஒரு முட்டாள் தன்னை முட்டாள்

என்று உணரும் தருணத்தில்

புத்திசாலியாகின்றான்.

ஆனால்,

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி

என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்

முட்டாளாகின்றான்

பொன்மொழி 8

பொன்மொழி 8

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,

கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.

பொன்மொழி 9

பொன்மொழி 9

கஷ்டம் வரும் போது

கண்ணை மூடாதே,

அது உன்னை கொன்றுவிடும்.

கண்ணை திறந்து பார்,

அதை வென்றுவிடலாம்.

பொன்மொழி 10

பொன்மொழி 10

உன் கை ரேகையைப் பார்த்து

எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...

ஏனென்றால்,

கையே இல்லாதவனுக்கு கூட

எதிர்காலம் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Most Famous Motivational and Inspiring APJ Abdul Kalam Quotes

Here are 10 most famous motivational and Inspiring APJ Abdul Kalam Quotes. Take a look...
Desktop Bottom Promotion