Latest Updates
-
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்..
பலரையும் கவர்ந்த மிகவும் ஸ்டைலான இந்திய கிரிக்கெட் வீரர்கள்!!!
இந்தியாவில் கிரிக்கெட் பிரியர்கள் அதிகம். இந்த கிரிக்கெட் மோகத்தால், பல ஆண்கள் தங்கள் பெற்றோரிடம் அசிங்கமாக திட்டு வாங்கியிருப்பார்கள். அதிலும் வீட்டில் புத்தகங்களை வாங்கி படிக்கிறோமோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்களின் போட்டோக்களை வாங்கி வீட்டுச் சுவர்களில் ஒட்டுவோம். இதனாலேயே பலர் பல அடிகளை வாங்கியிருப்பார்கள். இதற்கு நம் இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டம் மட்டுமின்றி, அவர்களின் ஸ்டைலும் தான் காரணம்.
அதிலும் நாளை 2015 உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டி நடைபெறவிருக்கிறது. அதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதவிருப்பதை முன்னிட்டு, பலரும் அந்த ஆட்டத்தைக் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு பலரையும் கவர்ந்த மிகவும் ஸ்டைலான இந்திய கிரிக்கெட் வீரர்களை பட்டியலிட்டுள்ளோம். இவர்கள் ஆட்டத்தில் மட்டுமின்றி, ஸ்டைலிலும் பல ரசிகர்களைக் கவர்ந்தவர்கள்.

விராத் கோஹ்லி
விராத் கோஹ்லிக்கு ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம் என்று சொல்லலாம். ஏனெனில் இவர் பல்வேறு ஸ்டைலில் பல போட்டிகளில் கலந்துள்ளார்.

ஜடேஜா
ஜடேஜா இதுவரை எவ்வித ஸ்டைலையும் பின்பற்றியதில்லை. ஆனால் தற்போதைய உலக கோப்பைக்காக இவர் வைத்துள்ள தாடியும், இவரது ஆட்டமும் இவருக்கு பல ரசிகர்களை குவித்துள்ளது.

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா எவ்வித ஸ்டைலில் இல்லாவிட்டாலும், அவரது ஆட்டம் அட்டகாசமாக இருக்கும்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். இதனாலேயே இவர் பலரது ஆட்ட நாயகனாக உள்ளார்.

டோனி
இந்திய கேப்டன் டோனிக்கு ரசிகர்கள் அதிகம் குவிந்ததற்கு காரணம் அவரது 'ஹெலிகாப்பர் ஷாட்', அவரது ஹேர் ஸ்டைலும் தான்.

ரெய்னா
ரெய்னா எப்போதும் மிகவும் சிம்பிளாகவும், அமைதியாகவும் இருப்பார்கள். இதனாலேயே இவருக்கு பல ரசிகர்களும், ரசிகைகளும் உள்ளனர்.

முரளி விஜய்
சென்னையைச் சேர்ந்த முரளி விஜய் க்யூட்டான முகத்தாலும், அட்டகாசமான ஆட்டத்தாலும் பல ரசிகர்களைப் பெற்றவர்.

ஷிகர் தவான்
ஷிகர் தவான் அற்புதமான ஆட்டத்துடன், அழகான முறுக்கு மீசை வைத்தே பல ஆட்டங்களை ஆடியுள்ளார். அதிலும் தற்போதைய உலக கோப்பையில் பின்னி பிடலெடுப்பவர் ஷிகர் தவான் தான்.

ரோஹித் சர்மா
உலக கோப்பையில் ஓபனராக வரும் ரோஹித் சர்மாவிற்கு கூட நிறைய ரசிகர்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications
