மகாத்மா காந்தியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

சுலபமாக வந்ததல்ல நம் சுதந்திரம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னால் போர், ரத்தம் சிந்துதல், கடுமையான அரசியல்கள் மற்றும் பல வீர தியாகிகளின் வரலாறு அடங்கியுள்ளது. வன்முறை புரட்சிகளின் மத்தியில், அதிலிருந்து விலகி, அகிம்சை என்ற ஜோதியை உயர ஏந்தியது நமது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி ஆவார். சுதந்திர இந்தியாவின் தனித்த காரணகர்த்தாவாக இருந்த பலரின் தலைவராக திகழ்ந்தவர் இவர்.

ஒவ்வொரு இந்தியனும் தலை வணங்க வேண்டிய இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனைகள்!

ஆனால் மகாத்மா காந்தியை வெறுமனே ஒரு சுதந்திர போராட்ட தியாகியாக மட்டுமே பார்க்க முடியாது. இந்த முழு நாட்டையே வளர்த்தவர் என அவரை கூறலாம். நம் தேச பிதாவானவர், ஆங்கிலேய காலனித்துவத்தை எதிர்த்து போரிட்டது மட்டுமல்லாது, லட்சக்கணக்கான மக்களுக்கு அகிம்சை என்ற மந்திரத்தை கற்றுக் கொடுத்தார். மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பிரிவிலும், அது அரசியலாகட்டும் அல்லது சமூகமாகட்டும், சரியான பாதையை காட்ட மகாத்மா காந்தி ஒரு நிறுவனமாக நிற்பார். மகாத்மா காந்தியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் பல உள்ளது.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

மகாத்மா காந்தியிடம் இருந்து கற்க வேண்டியவைகளை வெறும் எட்டு விஷயங்களாக மட்டும் கட்டுப்படுத்தி விட முடியாது. வெள்ளையர்களின் ஆட்சியின் அடித்தளத்தை கலக்குகின்ற அளவிற்கு அவருடைய அகிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. இன்று, இனவாதம் மற்றும் தீவிரவாதம் என்ற பெயரில் நம் உலகம் பிரிந்து கிடக்கும் நிலையில், மனித நேயம் என்பது மக்களை விட்டு பிரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் "இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் பற்றிய சில அரிய தகவல்கள்!!!

மனித இனத்திற்கு நம்பிக்கையின் ஒளியை கொடுக்க அவருடைய போதனைகள் பெரிதும் உதவும். சரி, மகாத்மா காந்தியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் என்னவென்று தெரியுமா? அவருடைய மொத்த வாழ்க்கையே இந்தியர்களுக்கும் உலக மக்களுக்கும் மிகப்பெரிய பாடமாக அமையும். மகாத்மா காந்தியிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொருட்கள் மற்றும் உடைமைகளின் பின்னால் ஓடாதீர்கள்

பொருட்கள் மற்றும் உடைமைகளின் பின்னால் ஓடாதீர்கள்

இந்த மனிதர் தன் வாழ்க்கையை ஒரு எளிய ஆடை மற்றும் கம்பை மட்டுமே கொண்டு கழித்தார். உயர்ந்த சிந்தனை மற்றும் எளிமையான வாழ்வு முறையை இது எடுத்துரைக்கிறது. அதனால், பொருட்களின் மீதான நம் ஆசைகளை கட்டுப்படுத்தி, எளிமையான வாழ்க்கையை வாழ, அவரது வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

உங்கள் எண்ணங்களே உங்கள் வேலையைத் தீர்மானிக்கும்

உங்கள் எண்ணங்களே உங்கள் வேலையைத் தீர்மானிக்கும்

மகாத்மா காந்தியிடம் நீங்கள் கற்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். மனிதன் எதனை சிந்திக்கிறானோ அதை தான் எப்போதும் செய்கிறான். ஒருவனுடைய ஆளுமையை தீர்மானிப்பது அவனது சிந்தனை செயல்முறை தான். அதனால் நேர்மறையாக சிந்திப்பவர்கள் தங்களின் இலக்குகளை சுலபமாக அடைவார்கள். இதுவே எதிர்மறையாக சிந்திப்பவன் என்றால் தன் தோல்வியை எண்ணி துவண்டுவிடுவான்.

மனிதநேயம் மீது எப்போதுமே நம்பிக்கையை இழக்காமல் இருத்தல்

மனிதநேயம் மீது எப்போதுமே நம்பிக்கையை இழக்காமல் இருத்தல்

மகாத்மா காந்தியிடம் கற்க வேண்டிய 8 முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். மனித நேயம் என்பது ஒரு கடலை போன்றது என்பதால் அதன் மீது விழும் சிறிய கரும்புள்ளி அதனை அழித்து விடாது என அவர் கூறுவார். அதனால் நீங்கள் வாழ்க்கையில் துன்பத்தை சந்திக்க நேரிட்டாலும், மனித நேயத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது.

குறைவான அளவில் உணவருந்துதல்

குறைவான அளவில் உணவருந்துதல்

அவர் எப்போதுமே சைவ உணவையே விரும்பினார். அதேப்போல் குறைந்த அளவிலான உணவினை மட்டுமே உட்கொண்டு வந்தார். ஜங்க் வகை உணவுகள் உண்ணுவதில் ஈடுபடுவதை அவர் முழுமையாக எதிர்த்தார். அது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கை தான் விளைவிக்கும் என வலியுறுத்தினார்.

மன அழுத்தம் கூடாது

மன அழுத்தம் கூடாது

இதைப் பற்றி நீங்கள் பல செய்திகள் படித்திருப்பீர்கள். அதேப்போல் மருத்துவர்களும் கூட இதைப் பற்றி பரிந்துரைத்திருப்பார்கள். நவீன வாழ்வு முறையை பற்றிய இந்த மந்திரத்தைப் பற்றி காந்தி நன்றாக அறிந்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? தன்னை அமைதியாகவும், மனதை கவனத்துடனும் வைத்துக் கொள்ள அவர் யோகா பயிற்சியிலும், தியானத்திலும் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளார்.

எப்போதும் தொடர் முயற்சி தேவை, கை விடுதல் கூடாது

எப்போதும் தொடர் முயற்சி தேவை, கை விடுதல் கூடாது

எவ்வளவு சோதனைகளை சந்தித்த போதிலும் கூட எப்படி உடைந்து போகாமல் தைரியத்துடன் எப்படி வாழ்வது என்பதை தெரிந்து கொள்ள அவருடைய வாழ்க்கைக்கு செல்ல வேண்டும். தொடர்ச்சியான சிறைவாசம் அவருடைய வெல்ல முடியாத மனநிலையை அடக்க முடியவில்லை. அதனால் உங்கள் இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, வெற்றியை நோக்கி தொடர்ச்சியாக பாடுபடுங்கள்.

நிம்மதியை தேடிடுங்கள்

நிம்மதியை தேடிடுங்கள்

காந்தியடிகளின் மிக உன்னதமான போதனை இது. நிம்மதியின் உண்மையான அர்த்தத்தை இது வரையறுக்கும். நிம்மதி என்பது வெளியே கிடைக்கும் என்று பலரும் நம்பி வருகின்றனர். வெளி தலையீட்டினால் அது பாதிக்கப்படும் என்றும் நினைக்கின்றனர். ஆனால் நிம்மதி என்பது நமக்குள்ளேயே தான் உள்ளது என்றும், அதனை வெளி சக்தி ஒன்றும் செய்ய முடியாது என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

மன்னிப்பது உங்களை வலிமையாக்கும்

மன்னிப்பது உங்களை வலிமையாக்கும்

மகாத்மா காந்தியிடம் இருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய 8 விஷயங்களில் இது கடைசியாக இருந்தாலும் மற்றைவைகளுடன் ஒப்பிடுகையில் இது சளைத்தது அல்ல. பலி உணர்வை வளர்த்துக் கொள்பவர்களை விட, மன்னிக்கும் குணத்தை கொண்டவர்களே வலிமையானவர்களாக இருப்பார்கள் என அவர் கூறியுள்ளார். நீங்கள் மன்னிக்க வேண்டுமென்றால், வலுவான மதிப்புகளைக் கொண்ட மனிதனாக நீங்கள் இருக்க வேண்டும். அதுவே உங்களை முழுமையான மனிதனாக மாற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Eight Things To Learn From Mahatma Gandhi

What are the eight things you can learn from Mahatma Gandhi? His whole life is a lesson to Indians as well as people of the world. Here are certain things you can learn from Mahatma Gandhi-
Story first published: Thursday, August 20, 2015, 11:33 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter