Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு பாரம்பரிய தோற்றத்தில் வந்த நடிகைகள்!!!
சமீபத்தில் 62 ஆவது தென்னிந்திய பிலிம்பேர் விருது விழா நடைபெற்றது. இந்த பெரிய விருது விழாவிற்கு எண்ணற்ற நடிகைகள் பல அழகான உடையணிந்து வந்து கலக்கினார்கள். அதில் சிலர் கவுன், புடவை, அனார்கலி, லெஹெங்கா என்று பலவிதமான உடைகளை அணிந்து வந்திருந்தனர்.
2015 தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு செக்ஸியாக வந்த பிரபலங்கள்!!!
அவர்களுள் அழகாக பாரம்பரிய உடையான புடவையில் நடிகை ஸ்ரேயா, நதியா, சுமலதா, பூனம் பாஜ்வா போன்றோர் வந்திருந்தனர். திருமணத்திற்கு பின் நடிகை ஜோதிகா எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவ்வளவாக பங்கு பெறவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அழகாக தோதி பேண்ட் மற்றும் குர்தா அணிந்து வந்திருந்தார்.
சரி, இப்போது 2015 தென்னிந்திய பிலிம்பேர் விருது விழாவிற்கு பாரம்பரிய தோற்றத்தில் அழகாக வந்த நடிகைகளின் போட்டோக்களைப் பார்ப்போமா!!!

ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா மோனிஷா ஜெய்சிங் டிசைன் செய்த பச்சை நிற ஃபியூஷன் புடசை அணிந்து, ஸ்டைலாகவும், அழகாகவும் வந்திருந்தார்.

சுமலதா
நடிகை சுமலதா கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த காஞ்சிபுர பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

சஞ்சனா
சஞ்சனா கருப்பு நிற லெஹெங்காவுடன், அதிகப்படியான எம்பிராய்டரி பார்டர் கொண்ட சிவப்பு மற்றும் கோல்டன் கலந்த ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற துப்பட்டா அணிந்து வந்திருந்தார்.

ஸ்ரேயா கோஷல்
பாடகி ஸ்ரேயா கோஷல் பிங்க் நிற நீளமான அனார்கலி அணிந்து, க்யூட்டாக வந்திருந்தார்.

பிரியாமணி
நடிகை பிரியாமணி கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ஃபுல் ஸ்லீவ் கொண்ட நீளமான ஜாக்கெட் மற்றும் நெட்டட் லெஹெங்கா ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

நதியா
நடிகை நதியா சிம்பிளாக பிங்க் நிற காட்டர் புடவை மற்றும் இண்டிகோ நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட சில்க் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

பூனம் பாஜ்வா
நடிகை பூனம் பாஜ்வா ப்ளைன் கருப்பு நிற லேஸ் புடவை அணிந்து சற்று கவர்ச்சியாக வந்திருந்தார்.

ஜெயப்பிரதா
நடிகை ஜெயப்பிரதா, அதிகமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட நீளமான அனார்கலி அணிந்து அழகாக வந்திருந்தார்.

ஜோதிகா
நடிகை ஜோதிகா பிரிண்ட்டட் குர்தா மற்றும் தோதி ஸ்டைல் பேண்ட் அணிந்து, அழகாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
