குதிரை பந்தயத்தைக் காண கலக்கலாக வந்த ஏமி ஜாக்சன்!

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அதிகம் பங்கு கொள்ளாத 'ஐ' படத்தின் நாயகியான ஏமி ஜாக்சன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பெற்ற குதிரைப் பந்தயத்தைக் காண வந்திருந்தார். அப்போது அவர் அழகான கருப்பு நிற ஸ்ட்ராப் கொண்ட வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஏமி ஜாக்சன் தமிழில் மிகவும் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார். இவர் தனது பால் போன்ற நிறத்தாலேயே பல ரசிகர்களை கவர்ந்தார் என்று கூட சொல்லலாம். இத்தகைய பால் போல் நிறம் கொண்ட ஏமி ஜாக்சன், மிட்-டே டிராபி 2015 நிகழ்ச்சிக்கு வெள்ளை நிற உடையில் வந்தது இன்னும் அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

Actress Amy Jackson At Mid-Day Trophy 2015

அதிலும் ஏமி ஜாக்சன் இந்த வெள்ளை நிற உடைக்கு ஏற்றவாறு கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார். மேலும் இங்கிலாந்தில் எப்படி பெண்களுக்கு வித்தியாசமான தொப்பி போடும் பழக்கம் உள்ளதோ, அதேப் போல் ஏமி ஜாக்சன் தலையில் கருப்பு நிற பூவை சொருகிக் கொண்டு, கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக வந்திருந்தார்.

Actress Amy Jackson At Mid-Day Trophy 2015

மொத்தத்தில் ஏமி ஜாக்சன் தேவதை போன்று மிட்-டே டிராபி 2015 நிகழ்ச்சிக்கு வந்திருந்திருந்தார் என்று சொல்லலாம். என்ன நண்பர்களே உங்களுக்கு ஏமி ஜாக்சனின இந்த லுக் பிடித்துள்ளதா?

English summary

Actress Amy Jackson At Mid-Day Trophy 2015

Wearing white separates, Amy attended race day in Mumbai. Black accessories that included a fascinator, Tom Ford bag and ankle-strap sandals finished out her look. Ms. Jackson did good! 
Please Wait while comments are loading...
Subscribe Newsletter