For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமான்: மனிதனா, புராணமா அல்லது இறைவனா?

By Ashok CR
|

இந்து மதத்தில் உள்ள மும்மூர்த்திகளில் மிகவும் முரணான கடவுளாக விளங்குபவர் சிவபெருமானே. மூவரில் அழிக்கும் கடவுளாக விளங்குபவர் சிவபெருமான். பிறப்பின் முக்கியத்துவத்தை இறப்பின் மூலமே ஒருவர் உணர்வதால், அழிப்பவர் முக்கிய பங்கை வகிக்கிறார்.

புகழ்பெற்ற பண்பாட்டில், சிவபெருமானை நீள நிற கடவுளாக, உடல் முழுவதும் சாம்பல் பூசியவராக, காட்டில் வாழ்பவராக, கழுத்தில் பாம்பை உடையவராக, சூலாயுதத்தை கையில் கொண்டவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் நாம் சித்தரித்தததை தாண்டியும் அவர் மிகவும் பெரியவர்.

சுவாரஸ்யமான வேறு: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

சிலர் சிவபெருமானை புராண பாத்திரம் என கூறுகின்றனர். சொல்லப்போனால், மேற்கு பகுதியில் உள்ள சில இடங்களில் சிவபெருமானை அரக்கானாக பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் சில பண்பாடுகாளில், அவரை இமயமலையில் வாழ்ந்த மனிதனாக நம்புகின்றனர். இது போக அண்டசராசரத்தை ஆளும் கடவுளாகவும் அவரை பார்க்கின்றனர். சரி, இதில் எந்த சிவபெருமானை உண்மை என எடுத்துக் கொள்வது? என வாங்க பார்க்கலாம்.

சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபெருமான் -

சிவபெருமான் - "இல்லாத ஒன்று"

சிவா என்றால் அதற்கு "இல்லாத ஒன்று" என்று அர்த்தமாகும். நாம் எதிலிருந்தும் பிறக்கவில்லை; அதே போல் இறந்த பின்பும் எதுவுமில்லாமல் போகிறோம் என விஞ்ஞானம் சொல்கிறது. காரணம் இருப்பு மற்றும் அண்டத்தின் அடிப்படையும் வெறுமையே. இந்த மிகப்பெரிய வெறுமைக்கு முன் பெரிய விண்மீன் மண்டலங்கள் அனைத்தும் சிறியதே. இந்த வெறுமையை நாம் சிவபெருமான் என சித்தரிக்கிறோம். அதனால் வருவது அனைத்தும் செல்வது அனைத்தும் அவரிடமே.

இருளிய இறை

இருளிய இறை

சிவபெருமான் என்பவர் அழிப்பவர். அதனால் அவர் வெளிச்சம் இல்லை; இருள். இங்கே இருளின் அர்த்தத்தை தவறாக நினைக்காதீர்கள். வெளிச்சம் என்பது ஒரு எல்லையே. அது முடிவற்றது அல்ல. வெளிச்சம் அளிக்கும் எந்த ஒரு மூலமும் மெதுவாக இருளை கொடுத்து மறையும். இருள் என்பது மிகவும் பெரியதாகும். இந்த இறைதன்மை மிக்க இருளே சிவபெருமான். அவர் எங்கும் இருக்கிறார். வெளிச்சம் போனாலும் கூட, இருள் நீடிக்கும் அல்லவா?

சிவபெருமான் - ஆதி யோகி

சிவபெருமான் - ஆதி யோகி

சிவபெருமானை ஆதி யோகி அல்லது முதல் யோகி என்றும் கருதுகின்றனர். அதாவது இந்த அண்டசராசரத்திற்கு அவரே முதல் குரு. யோகா மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து ஞானத்திற்கும் அடிப்படை அவரே. இங்கே யோகா என்றால் அதே நிலையில் மூச்சை அடக்குவது அல்ல. யோகா என்பது வாழ்க்கை எப்படி உருவானது மற்றும் அதனை எப்படி எடுத்துக் கொள்வது என்பதன் இயற்கையை பற்றி புரிந்து கொள்ளும் விஞ்ஞானம் ஆகும்.

சிவபெருமான் - மனிதன்

சிவபெருமான் - மனிதன்

யோகி பண்பாட்டில் சிவபெருமான் என்பவர் இமயமலை வட்டாரத்தில் வாழ்ந்து, யோக பண்பாடுகளை பரப்பிய மனிதனாக நம்பப்படுகிறார். மனித இயக்க அமைப்பின் ஒவ்வொரு புள்ளிகளை வைத்து என்ன செய்யலாம் என்ற இயல்தன்மையின் அர்த்தத்தை தந்தவர் சிவபெருமான். தன் இறை அறிவை சப்த ரிதிகள் என அழைக்கப்பட்ட 7 ரிஷிகளுக்கு அவர் கற்றுத் தந்தார். எப்படி தன் இயல்தன்மைகளை மனிதன் நீட்டிக்கலாம் என்றும், அதனை கொண்டு தனக்கு விதிக்கப்பட்ட வட்டத்தை விட்டு அவன் எப்படி வெளியேறலாம் என்றும் அவர் கற்றுத் தந்தார். இதுவே மனித பிறப்பின் அதிமுக்கிய இலக்காகும்.

சிவபெருமான் - சிறப்புரிமை அற்றவர்களின் கடவுள்?

சிவபெருமான் - சிறப்புரிமை அற்றவர்களின் கடவுள்?

மும்மூர்த்திகளில் ஒருவராக சிவபெருமான் பின்னாளில் தான் சேர்க்கப்பட்டார் என்ற விஷயம் அனைவரும் அறிந்ததே. இதனால் நாம் அறிந்து கொள்வது, மனிதனாக இருந்த அவரை, அவரின் படிப்பினைகளால் புகலிடம் அடைந்த சிறப்புரிமை அற்றவர்கள் அவரை கடவுளாக வழிப்பட்டார்கள்.

புராணமா உண்மையா?

புராணமா உண்மையா?

அதனால் சிவபெருமான் உண்மையா என்பதை கடைசி வரை நாம் தேடி கொண்டு தான் இருக்க முடியுமா? ஆனால் அவர் மனிதனாகவோ அல்லது புராணமாகவோ அல்லது இறைவனாகவோ இருந்தால், நமக்கு என்ன தான் கிடைக்க போகிறது? ஒருவேளை நம் வரம்பிற்கு அப்பாற்பட்டு எப்போது நம்மால் செயலாற்ற முடிகிறதோ, சிவபெருமானின் உண்மை வடிவத்தை அன்று தான் நம்மால் புரிந்து கொள்ள முடியுமோ என்னமோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shiva: A Man, A Myth Or The Divine Reality?

Some call Shiva a mythical character. Some cultures also believe that Shiva was a human who lived in the Himalayas. Which version of Shiva stands true?
Desktop Bottom Promotion