"கிக் கிக்" உடையில் "சிக் சிக்" சோனாக்ஷி!

Posted By: Babu
Subscribe to Boldsky

பாலிவுட்டில் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் சோனாக்ஷி சின்ஹா, சமீபத்தில் தனது படமான 'ஆக்சன் ஜாக்சன்' என்னும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்துவதில் மிகவும் பிஸியாக உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அந்த படத்தை விளம்பரப்படுத்தும் போது பேண்ட் சட்டை அணிந்து அவர் பையன் போன்று ஸ்டைலாக வந்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அவர் தனது அழகான மற்றும் நீளமான கூந்தலை வெட்டி குட்டையாக்கிக் கொண்டதால், அவர் பேண்ட் சட்டையில் அட்டகாசமாக இருந்தார். அதுவும் அந்த இறுக்கமான நீல நிற ஜீன்ஸிற்கு, வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து மேலே கட்டம் போட்ட சட்டை போட்டு வந்திருந்தது அற்புதமாக இருந்தது.

LOVE IT? Sonakshi Sinha Gets A Tomboyish Look
LOVE IT? Sonakshi Sinha Gets A Tomboyish Look

மேலும் மற்ற நடிகைகளை விட சோனாக்ஷிக்கு தான் பேண்ட் சட்டை பொருத்தமாக உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவில் அவர் இந்த உடையில் கிக் ஏறும் வகையில் சிக்கென்று காணப்பட்டார்.

LOVE IT? Sonakshi Sinha Gets A Tomboyish Look
LOVE IT? Sonakshi Sinha Gets A Tomboyish Look

அதுமட்டுமல்லாமல் சோனாக்ஷி இந்த உடைக்கு ஏற்றவாறு அளவான மேக்கப் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு, கால்களுக்கு அழகான வெள்ளை நிற ஷூ அணிந்து வந்திருந்தார்.

என்ன நண்பர்களே! உங்களுக்கு சோனாக்ஷியின் இந்த லுக் பிடித்துள்ளதா?

மேலும் படங்களுக்கு...

English summary

LOVE IT? Sonakshi Sinha Gets A Tomboyish Look

At one of the promotions, Sonakshi Sinha opted for a boyish style - tight blue jeans, checkered buttoned shirt, white camisole and white shoes!