For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணரின் ராசலீலை பற்றிய அதிர்ச்சியூட்டும் தொன்மங்கள்!!!

By Ashok CR
|

கிருஷ்ண ஜெயந்தி என்பது கிருஷ்ணா பரமாத்மாவின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். மதுராவில் பிறந்த கிருஷ்ணர் யமுனை நதியில் இழுத்துச் செல்லப்பட்டு கோகுலம் என்ற சிறிய கிராமத்தை வந்தடைந்தார். கோகுலத்திலும் பிருந்தாவனம் போன்ற அதனை சுற்றியுள்ள இடங்களிலும் தான் தன் ராசலீலைகளை கிருஷ்ணர் புரிந்திருக்கிறார். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாக விளங்கியது பிருந்தாவனம். அங்கே தான் ராதையுடனும் கோகுலத்தை சேர்ந்த பிற கொபியர்களுடனும் அவர் ராசலீலை புரிந்துள்ளார்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணா பரமாத்மாவை ஸ்ரீ பங்கே பிஹாரி என்ற பெயரில் அழைத்துள்ளனர். இந்த இடத்திற்கு வரும் ஸ்ரீ பங்கே பிஹாரி கோபியர்களுடன் ராசலீலை புரிவார் என இது நாள் வரை நம்பப்பட்டு வருகிறது. பிருந்தாவனத்தில் உள்ள ஒரு சிறிய சோலையை நிதிவன் என அழைத்தனர். இந்த இடத்திற்கு ஒவ்வொரு இரவும் கிருஷ்ணர் வந்து தன் தெய்வீக புல்லாங்குழலை வாசிப்பார் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். அந்த இசையில் அந்த சோலையில் உள்ள மரங்கள் மனிதர்களாக மாறி நடனம் ஆட தொடங்கி விடுமாம். காலையில் மீண்டும் மரங்களின் தோற்றத்தை பெற்று விடுவார்கள்.

கிருஷ்ண பரமாத்மாவின் பிறப்பு பற்றிய கதை!

அந்த இடத்தில் கிருஷ்ண பரமாத்மா இருப்பதை மிக நன்றாக உணர முடியும் என்பது மிகவும் சுவாரசியமான தகவல்ககும். சொல்லப்போனால் பிருந்தாவனம் முழுவதும் இதனை உணர முடியுமாம். மேலும் நிதிவன் சோலைக்கு வந்து வணங்குபவர்களுக்கு வேண்டியது எல்லாம் நடைபெறும் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் கிருஷ்ண பரமாத்மா உண்மையிலேயே நிதிவனுக்கு தினமும் இரவு வருகிறாரா? அதற்கு என்ன சாட்சி?

நிதிவன் பற்றியும் கிருஷ்ணரின் ராசலீலை பற்றியும் அதிர்ச்சியூட்டும் மர்மங்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். படித்த பிறகு அப்படியே ஆடி போவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Krishna Jayanthi Special: Shocking Myths About Krishna's Raas Leela

Read on to find out some of the shocking mysteries about Nidhivan and Krishna's raas leela which will leave you spellbound.
Desktop Bottom Promotion