'பார்பி டால்' போல் உடையணிந்து வந்த இலியானா!

By: Babu
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் கலக்கி வந்த நடிகை இலியானா தற்போது பாலிவுட்டில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அதிலும் பாலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அத்தகையவர் சமீபத்தில் தான் நடித்து வெளிவரவிருக்கும் படமான 'ஹேப்பி என்டிங்' என்னும் இந்தி திரைப்படத்தினை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக உள்ளார்.

Ileana D'cruz's Craze Over Sensual Styles

அப்படி இரண்டு இடங்களில் இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் அவர் பார்பி டால் போன்று சிக்கென்று க்யூட்டாக காணப்படுமாறான உடையில் வந்திருந்தார். மேலும் அந்த இரண்டு உடைகளுமே இலியானாவை அழகாக வெளிக்காட்டியது.

Ileana D'cruz's Craze Over Sensual Styles

மேலே கொடுக்கப்பட்டுள்ள, நடிகை இலியானா அணிந்துள்ள இந்த கருப்பு நிற கிராப் டாப்பானது டிசைனர் H&M என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த உடைக்கு பொருத்தமாக அணிந்து வந்த கருப்பு நிற பேண்ட்டைப் பார்த்தால் பழங்கால நடிகைகளை ஞாபகப்படுத்துமாறு இருந்தது. இருப்பினும் இந்த உடைக்கு இலியானா மேற்கொண்ட மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் அவரை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

Ileana D'cruz's Craze Over Sensual Styles

இது இலியானா மற்றொரு இடத்தில் அணிந்து வந்த ஸ்கர்ட் மற்றும் டாப். இந்த உடையை வடிவமைத்தவர் துருவ் கபூர் என்னும் டிசைனர். இந்த க்ரே நிற மிடி ஸ்கர்ட் இலியான அணிந்திருந்த பூப்போட்ட ப்ரௌன் நிற டாப் செம அழகாக இருந்தது. மேலும் இந்த உடையில் இவர் மிகவும் ஒல்லியாக காணப்படுவதுடன், பார்பி டால் போன்றும் காணப்பட்டார்.

Ileana D'cruz's Craze Over Sensual Styles

அதுமட்டுமின்றி இந்த உடைக்கு இலியானா மேற்கொண்டு வந்த மேக்கப், ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள் இவரது தோற்றத்தை இன்னும் வித்தியாசப்படுத்தி காட்டியது. உங்களுக்கு இவற்றில் இலியானாவின் எந்த லுக் பிடித்துள்ளது?

English summary

Ileana D'cruz's Craze Over Sensual Styles

Ileana D'Cruz is on a fashion roll. The beauty who is busy with her movie promotions of Happy Ending was seen in two desirable outfits.
Subscribe Newsletter