For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014 ஆம் ஆண்டு இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர் சப்யசாச்சியின் ஆடைகள்!

By Babu
|

2014 ஆம் ஆண்டின் இந்தியா கவுச்சர் வீக்கானது ஆரம்பமாகிவிட்டது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த ஃபேஷன் ஷோவில் பல்வேறு டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடையை வெளியிடுவார்கள். அந்த வகையில் கவுச்சர் வீக்கின் முதல் நாளில் மிகவும் பிரபல டிசைனரான சப்யசாச்சி முகர்ஜியின் ஆடையானது வெளியிடப்பட்டது.

இந்த இந்தியா கவுச்சர் வீக்கில் அவர் வெளியிட்ட கலெக்ஷனின் பெயர் 'பெஃரோபேட்'. மேலும் இந்த கலெக்ஷன்களில் நியூட் மற்றும் பீச் நிற ஆடைகளுடன், அதிகப்படியான எம்பிராய்டரியும் இருக்கும். இதனால் இந்த ஆடைகளானது திருமண விழாவின் போதோ அல்லது ஏதேனும் பார்ட்டியின் போதோ அணியக்கூடியவாறு இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் டிசைனர் சப்யசாச்சியின் ஆடைகளை வெளியிடும் போது, பிரபல நடிகை ராணி முகர்ஜி வெண்மை கலந்த பழுப்பு நிற புடவையில் வந்திருந்தார். இங்கு இந்தியா கவுச்சர் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த சப்யசாச்சியின் உடையானது உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பனாரசி புடவைகள் மற்றும் பல

பனாரசி புடவைகள் மற்றும் பல

இந்த முறை சப்யசாச்சி பனாரசி புடவையில் பல்வேறு டிசைன்களை டிசைன் செய்து வெளியிட்டார். மேலும் அவர் மெரூன் நிறத்திலேயே அதிக புடவைகளை வெளியிட்டார்.

இந்தியன் சில்ஹோட்டே

இந்தியன் சில்ஹோட்டே

மேலும் சப்யசாச்சி இந்தியன் சில்ஹோட்டே உடைகளையும் வெளியிட்டார். இவர் வடிவமைத்த சில்ஹோட்டே கலெக்ஷன்கள் அனைத்தும் லைட் நிறங்களுடன், டீப் நெக் கொண்டிருக்கும். அதுமட்டுமின்றி, அவை அனைத்தும் ஒற்றை பக்கம் துப்பாட்டா அணியக்கூடியவாறும் இருக்கும்.

பந்த்கலா மற்றும் பார்ஸி கோட்

பந்த்கலா மற்றும் பார்ஸி கோட்

ஆண்களுக்கும் சப்யசாச்சி பந்த்கலா மற்றும் பார்ஸி கோட் ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார்.

நியூட் ஷிப்பான்

நியூட் ஷிப்பான்

இது சப்யசாச்சி வெளியிட்ட அதிக எம்பிராய்டரி செய்யப்பட்ட நியூட் ஷிப்பான் புடவை. இது பார்ட்டிகளின் போது அணிந்து செல்ல ஏற்றது.

பந்த்கலா சில்ஹோட்டே

பந்த்கலா சில்ஹோட்டே

சப்யசாச்சி வடிவமைத்த இந்த பந்த்கலா சில்ஹோட்டேவானது அதிகப்படியான எம்பிராய்டரியுடன், கண்ணாடி வேலைப்பாடுகளும், பூக்களின் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளை நிற பந்த்கலா ஜாக்கெட்

வெள்ளை நிற பந்த்கலா ஜாக்கெட்

இதுவும் சப்யசாச்சி வெளியிட்டதே. அதிலும் வெள்ளை நிற ஷிப்பான் புடவையின் இரண்டு முனைகளிலும் சிவப்பு நிற பார்டருடன், முந்தானையில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புடவைக்கு முழங்கை அளவுள்ள பந்த்கலா ஜாக்கெட்டை டிசைன் செய்துள்ளார்.

டீப் நெக் கொண்ட சில்ஹோட்டே

டீப் நெக் கொண்ட சில்ஹோட்டே

இது சப்யசாச்சி வடிவமைத்த டீப் நெக் கொண்ட சிவப்பு நிற பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட சில்ஹோட்டே.

துப்பட்டாவுடன் கூடிய சில்ஹோட்டே

துப்பட்டாவுடன் கூடிய சில்ஹோட்டே

இது டிசைனர் சப்யசாச்சி வடிவமைத்த துப்பட்டாவுடன், எம்பிராய்டரி செய்யப்பட்ட சில்ஹோட்டே.

சப்யசாச்சியின் லேட்டஸ்ட்

சப்யசாச்சியின் லேட்டஸ்ட்

இது சப்யசாச்சி வடிவமைத்த லேட்டஸ்ட் டிசைன். இந்த புடவையின் ஸ்பெஷலானது, இதில் ஆங்காங்கு புள்ளி வடிவ எம்பிராய்டரியுடன், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் கொண்டிருப்பது தான்.

ஆரஞ்சு நிற லெஹெங்கா

ஆரஞ்சு நிற லெஹெங்கா

இது சப்யசாச்சி புள்ளி வடிவ எம்பிராய்டரியுடன் வெளியிட்ட ஆரஞ்சு நிற லெஹெங்கா.

மின்னும் ஆர்கான்சா புடவை

மின்னும் ஆர்கான்சா புடவை

இவை சப்யசாச்சி வடிவமைத்த மின்னும் ஷீர் புடவையுடன், ஃபுல் ஸ்லீவ் ஜாக்கெட் கொண்டது.

ஜாக்கெட்டின் பின்புறம்

ஜாக்கெட்டின் பின்புறம்

பெரும்பாலான டிசைனர் புடவைகளில் ஜாக்கெட்டிலும் டிசைன்களானது இருக்கும். அந்த வகையில் சப்யசாச்சியின் இந்த புடவையின் ஜாக்கெட்டிலும் ஜரிகை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சகாரா

சகாரா

இது சப்யசாச்சி வடிவமைத்து வெளியிட்ட சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சகாரா உடை.

பூப்போட்ட புடவை

பூப்போட்ட புடவை

இது நியூட் நிற புடவையில் வெளிர் நீல நிற பூப்போட்ட எம்பிராய்டரி செய்யப்பட்ட சப்யசாச்சி டிசைன் செய்தது.

பிரிண்ட்டட் ஸ்கர்ட்டுடன் பார்சி கோட்

பிரிண்ட்டட் ஸ்கர்ட்டுடன் பார்சி கோட்

இது சப்யசாச்சி வெளியிட்ட பிரிண்ட்டட் ஸ்கர்ட்டுடன் பார்சி கோட்.

ராணி முகர்ஜி

ராணி முகர்ஜி

சப்யசாச்சியின் ஆடை வெளியீட்டின் போது, அவரது நண்பரான ராணி முகர்ஜி வந்திருந்தார். அவர் வெண்மை கலந்த பழுப்பு நிற புடவையில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

ICW 2014: Sabyasachi Presents ‘Ferozabad’

The first day first show of India Couture Week 2014 was given to veteran fashion designer Sabyasachi. He presented his collection titled ‘ Ferozabad' in the form of a vintage dream.
Desktop Bottom Promotion