Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
இதுவரை ஆஸ்கர் விருதைப் பெறாத மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள்!!!
மிகவும் பிரபலமான 86 ஆவது ஆஸ்கர் விருது விழாவானது வரப்போகிறது. இந்த விருதை அனைத்து சினிமா நட்சத்திரங்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பெற வேண்டும் என்று ஆசைப்படும் வகையில், இது ஒரு பெரிய விதுதாகும். இந்த விருதுக்கு, உலகில் உள்ள அனைத்து மொழிகளில் உள்ள சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகளும், இயக்குநர்கள் என்று பலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள், இந்த விருதினைப் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு, பல ஆபத்தான சீன்களையும் தாமே முன்வந்து நடிப்பார்கள். அந்த வகையில் பலருக்கும் தெரிந்த மிகவும் சிறப்பான, நடிப்பில் நம்மை அசர வைத்த பல ஹாலிவுட் நடிகர்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டாலும், ஒருமுறை கூட ஆஸ்கர் விருதினைப் பெற்றதில்லை.
சுவாரஸ்யமான வேறு: 2013 ஆஸ்கரில் நடந்த சில சிறந்த தருணங்கள்!!!
இங்கு தமிழ் போல்ட் ஸ்கை இதுவரை ஆஸ்கர் விருதினைப் பெறாத சில ஹாலிவுட் நடிகர்களை பட்டியலிட்டுள்ளது. மேலும் இவர்களுள் சிலர் இந்த வருடம் நடக்கும் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த வருடமாவது அவர்கள் விருதை தட்டிச் செல்வார்களா என்று பார்ப்போம்.

லியோனார்டோ டிகாப்ரியோ
மிகவும் பிரபலமான ஹாலிவுட் படமான டைட்டானிக் படத்தின் கதாநாயகனான லியோனார்டோ டிகாப்ரியோ ஒருமுறை கூட ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை. மேலும் இந்த வருட ஆஸ்கர் விருதிற்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது விருதைப் பெறுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிராட் பிட்
1991 இல் வெளிவந்த மிகவும் பிரபலமான 'தெல்மா & லூயிஸ்' என்னும் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய பிராட் பிட்டும் இன்னும் ஒருமுறை கூட ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.

டாம் குரூஸ்
ஒருமுறை கூட ஆஸ்கர் விருதைப் பெறாத நடிகர்களின் பட்டியலில் ஒருவர் தான் டாம் குரூஸ்.

ஜானி டெப்
பிரபலமான ஹாலிவுட் படமான 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் நடிகர் ஜானி டெப் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தும், ஒருமுறை கூட ஆஸ்கரினை பெற்றதில்லை.

ராபர்ட் டவுனி ஜூனியர்
கோடீஸ்வரர், மேதை, பிளேபாய், கொடையாளி என இந்த நடிகரை விவரிக்க பல உரிச்சொற்கள் உள்ளன. இருப்பினும், இவர் ஒருமுறை கூட ஆஸ்கரைப் பெற்றதில்லை.

வில் ஸ்மித்
'மென் இன் ப்ளாக்' என்னும் படத்தின் நடிகரான வில் ஸ்மித் கூட இன்னும் ஒருமுறை கூட ஆஸ்கர் விருதைப் பெற்றதில்லை.



Click it and Unblock the Notifications
