Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Leo Movie: லியோ படத்தில் வரும் கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயம் தெரிஞ்சா.. அசந்து போவீங்க...
Leo Movie Hyena: நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. லியோ திரைப்படத்தை பார்த்தவர்கள் இது ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர்.
அதுவும் இந்த திரைப்படத்தில் கழுதைப்புலியுடன் விஜய் போடும் சண்டை காட்சி இடம் பெற்றுள்ளது. லியோ திரைப்படத்தில் கழுதைப்புலி இடம் பெற்றதும், இந்த கழுதைப்புலியின் குணங்கள் லியோ திரைப்படத்தின் கதைக்கருவா இருக்குமோ என்று பலரும் நினைக்கலாம்.

எதுவாயினும், கழுதைப்புலிகளின் உண்மைகளின் குணங்களைப் பற்றி பலருக்கும் நிச்சயம் தெரிந்திருக்காது. இப்போது லியோ படத்தில் வரும் கழுதைப்புலியின் உண்மையான குணாதிசயங்களைக் காண்போம்.
நான்கு வகைகள்
கழுதைப்புலியில் 4 வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை கழுதைப்புலி இந்தியாவில் அதுவும் நம் தமிழ்நாட்டில் உள்ளது. முதல் வகை புள்ளிகள் கொண்ட கழுதைப்புலி, இரண்டாவது வரிகள் கொண்ட கழுதைப்புலி, மூன்றாவது வகை கிரே கழுதைப்புலி, நான்காவது வகை ஓநாய் மாதிரியான தோற்றத்தைக் கொண்ட கழுதைப்புலி. இந்த கழுதைப்புலிகள் ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் வரிகள் கொண்ட கழுதைப்புலிகள் உள்ளன.
கழுதைப்புலியின் சுவாரஸ்யமான பண்புகள்
* மற்ற மிருகங்களை விட, கழுதைப்புலிகள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பைப் கொண்டது. அதாவது இந்த கழுதைப்புலிகளில் பெண்கள் தான் வலிமையானது. பெண் கழுதைப்புலிக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும்.
* கழுதைப்புலிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் இரைத் தேடும். அதுவும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வேட்டையாடி சாப்பிட்டு மீதமுள்ளதை பெரும்பாலும் இந்த கழுதைப்புலி தான் உட்கொள்ளும்.
* கழுதைப்புலியின் தாடைகள் மற்ற விலங்குகளை விட வலிமையானவை. அதுவும் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள், பற்கள், கொம்புகள் போன்ற கடினமான பகுதிகளையும் சாப்பிடும் அளவில் மிகவும் வலிமையானவை.
* முக்கியமாக கழுதைப்புலிகள் நல்ல நட்பு எண்ணம் கொண்டவை. சொல்லப்போனால் நட்பிற்கு உதாரணமாக கழுதைப்புலியைக் கூறலாம்.
* பலரும் பாம்பை சீண்டினால் அது பழிவாங்கும் என்று சொல்வார்கள். உண்மையில் அது தவறு. ஆனால் கழுதைப்புலிகள் பழிவாங்கும் புத்திக்கூர்மை கொண்டவை. தன்னை யாரேனும் சீண்டினால், எரிச்சலூட்டினால் அல்லது இடையூறு செய்தால், அது அவர்களை குறி வைத்து தாக்கும்.



Click it and Unblock the Notifications
