Latest Updates
-
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
உடலுறவு மூலம் துணையை தேர்ந்தெடுக்கும் பெண்கள் முதல் வயதான பெண்ணுடன் உறவு வரை வினோத பாலியல் சடங்கு உள்ள நாடுகள் -
அஞ்சப்பர் ஹோட்டல் வெஜ் பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை
இன்று ஆடி மாதம் கடைசி நாள், வரலட்சுமி விரதம்.. இவங்கெல்லாம் கண்டிப்பாக விரதத்தை கடைப்பிடிக்கணுமாம்..!
ஆடி மாதத்தில் வரக் கூடிய வளர்பிறையில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை தான் நாம் வரலட்சுமி விரதம் என்கிறோம். நாம் கேட்கும் அனைத்து வரங்களையும் அள்ளித் தரும் லட்சுமிதான் வரலட்சுமி. வாழ்வில் தீராத கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டி, பல விதமான வரங்களை தந்து, அவர்களை வளமாக வாழ வைக்கக் கூடியவள்தான் வரலட்சுமி.
வரலட்சுமி விரதம் உருவானதற்கு பல புராண கதைகள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் வரலட்சுமி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் பார்வதி தேவி, முருகப் பெருமானை பெற்றெடுத்ததாகவும், விக்ரமாதித்தயன் இழந்த ராஜ்ஜியம், செல்வம் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

விரதங்களுள் சிறந்தது வரலட்சுமி விரதம் என்கிறது சாஸ்திரங்கள்.. அந்த வகையில் இன்று வரலட்சுமி விரதம்.. ஆகஸ்ட் 16ஆம் தேதி 2024 இன்று மிக சிறப்பான நாள்.. காரணம் இன்று ஆடி மாதம் கடைசிநாள் அத்துடன் ஆடி கடைசி வெள்ளியும் இணைந்து வருகிறது.. குடும்பத்தின் வறுமை ஒழிந்து செல்வம் பெருகவும், கணவரின் ஆயுள் நலனைப் பெருக்கவும் சுமங்கலி பெண்களால் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த விரதத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
வரலட்சுமி விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம்..
ஜாதகத்தில் சுக்கிரனுடன் ராகு, கேது, சேர்ந்து இருந்தால் அவர்கள் கண்டிப்பாக இந்த வரலட்சுமி விரதத்தை இருக்க வேண்டும். வியாபாரத்தில் பெரும் பண இழப்பு, தொடர்ந்து நஷ்டங்கள் ஏற்ப்பட்டுக் கொண்டிருந்தாலும் சுக்கிரன் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்... திருமணம் ஆனது முதலே கணவன்-மனைவி பிரச்சனையாக உள்ளவர்கள், விவாகரத்து, நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என்பவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள் வரலட்சுமி விரதத்தை இருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு காரணமானவர் சுக்கிர பகவான் ஆவார்.. தீராத நோய், நீண்ட காலமாக நோயால் துன்பப்படுபவர்கள் மேலும் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க, அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவமனைக்கு செல்லும் நிலை, மருத்துவ செலவுகளை அதிகம் செய்துக் கொண்டே இருப்பர்கள் என அனைவருமே இந்த விரதம் இருக்கலாம். மேலும் தொடர்ந்து கடன்பட்டுக் கொண்டே இருப்பவர்கள், நகையை அடமானத்தில் வைப்பவர்கள், வறுமையில் சிக்கி தவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட மகாலட்சுமியின் அருள் தேவை. அப்படி லட்சுமியின் அருள் யாருக்கெல்லாம் தேவையோ அவர்கள் இந்த விரதத்தை இருக்கலாம்.
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க உகந்த நேரம்:
16 ஆகஸ்ட் 2024 - காலை 6 மணி முதல் 7:20 வரை
வரலட்சுமி பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
16 ஆகஸ்ட் 2024 - காலை 9 மணி முதல் 10:20 மணி வரை. அது போல அன்று மாலை 6 மணிக்கு மேல்
புனர்பூஜை செய்வதற்கான உகந்த நேரம்:
17 ஆகஸ்ட் 2024 - காலை 7:35 மணி முதல் 8:55 மணி வரை. அதுபோல் அன்று காலை 10:35 மணி முதல் 12 மணி வரை
18 ஆகஸ்ட் 2024 - காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை. அதுபோல அன்று காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை
இன்று கண்டிப்பாக வேங்க வேண்டிய பொருட்கள்..
இன்று அரிசி, துவரம் பருப்பு போன்ற பொருட்களை வாங்கலாம்.. அப்படி வாங்கினால் அதனை வரலட்சுமி நோம்பு பூஜை அறையில் வைத்து வழிபட்ட பிறகு, மறுநாள் சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எதுவும் வாங்க முடியவில்லை என்கிறவர்கள், எளிமையாக மஞ்சள், உப்பு ஆகிய இரண்டையும் வாங்கி, பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.



Click it and Unblock the Notifications