Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
வக்ர நிவர்த்தி அடைந்த குரு: மே மாதம் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப் போகுது...
Jupiter Direct In Aries: நவகிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். மேலும் குரு பகவான் ராசியை மாற்றுவதற்கு 1 வருட காலம் ஆகும். தற்போது மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான், டிசம்பர் 31 ஆம் தேதி தான் வக்ர நிவர்த்தி அடைந்தார்.
வக்ர நிலையில் கிரகங்களால் கிடைக்கவிருக்கும் நல்ல பலன்கள் தாமதமாகும். குரு வக்ர நிவர்த்தி அடைந்ததால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இப்போது மே மாதம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும். இருப்பினும் அலட்சியமாக இருக்காதீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தை மற்றும் குருவின் முழு ஆதரவு இனிமேல் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சில பண பிரச்சனைகளை சந்தித்தாலும், புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் கனவு நனவாகும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுவடையும். நீண்ட நாட்களாக உறவினர்களுடன் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார். அதிர்ஷ்ட வீட்டில் குரு இருப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் போராட்டங்கள் முடிவுக்கு வரும். உங்கள் பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுப காரியங்களில் பங்கு பெறுவீர்கள். முக்கியமாக மன தைரியம் அதிகரிக்கும். இந்த தைரியத்தால் எப்பேற்பட்ட சூழ்நிலைகளையும் திறம்பட கையாள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
