Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
உங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..!
ஜோதிடங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் கை ரேகை ஜோதிடம். பல வகையான முக்கிய ரேகைகள் வைத்து இது கணிக்கப்படுகிறது. நமது கையில் உள்ள சில முக்கிய ரேகைகள் நாம் எவ்வளவு நாள் வாழ போகிறோம் என்பதை கூட சொல்லுமாம். குறிப்பாக இந்த ஆரோக்கிய ரேகை எண்ணற்ற விதத்தில் உங்களை எச்சரிக்கிறது.

உடலில் உள்ள ஒவ்வொரு பக்கங்களிலும் என்னென்ன கோளாறுகள் உள்ளன என்பதை இந்த ரேகையை வைத்தே நம்மால் அறிந்து கொள்ள முடியுமாம். இந்த ரேகை எந்த அளவுக்கு நமது கையில் ஆழமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு நம் ஆயுள் நீளும். அப்படி இந்த ரேகையில் என்ன புதுசா இருக்குனு தெரிஞ்சிக்க இத படிங்க மக்களே..!

முக்கிய ரேகைகள்..!
கைரேகை ஜோதிடத்தில் ஆரோக்கிய ரேகை, ஆயுள் ரேகை, தலை ரேகை, இதய ரேகை ஆகியவற்றை மிக முக்கிய ரேகையாக குறிப்பிடுவர். இவை தான் உங்களின் வாழ்வை தீர்மானிக்கும் ரேகைகளாகும். இந்த ரேகைகள் உங்கள் கையில் தெளிவாக இருந்தாக வேண்டும். இல்லையேல் பலவித அபாயங்கள் உள்ளது என அர்த்தம்.

இந்த ரேகை புதுசுங்க..!
இது வரை நாம் கேள்விப்பட்ட ரேகைகளை காட்டிலும் இந்த ஆரோக்கிய ரேகை மிக முக்கியமானதாகும். இது உங்கள் கல்லீரல், செரிமான் மண்டலம், இதயம் போன்ற பல உறுப்புகளின் செயல்திறனை உணர்த்தும். மேலும், இதில் ஏதாவது கோளாறு வர போகிறதென்றால் அதையும் இந்த ரேகை குறிப்பிடும்.

அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!
ஆயுள் ரேகையும், தலை ரேகையும், ஆரோக்கிய ரேகையும் சேர்ந்து முக்கோண வடிவத்தை கையில் உருவாக்கினால் உங்களுக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் காத்துள்ளது என்பதை குறிக்கிறது. இது போன்ற ரேகை அம்சம் மிக சிலருக்கே இருக்கும்.

மெலிசான ரேகையா..?
யாருக்கெல்லாம் இந்த ரேகை மெலிசாகவும், விரிசல் விட்டும் இருக்குகிறதோ, அவர்களுக்கு பல கோளாறுகள் உடலில் ஏற்படும். முக்கியமாக குடல் நோய், மோசமான உடல் நிலை, கல்லீரல் பிரச்சினை உண்டாகும். பெண்களுக்கு இது போன்று இருந்தால் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் வர கூடும்.

சதுரங்க வடிவிலான..?
உங்கள் கையில் இது போன்று சதுரங்க வடிவில் ரேகை இருந்தால் அது உங்களை எல்லாவித பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என அர்த்தம். இந்த ரேகை கிராஸ் வடிவில் இருந்தால் ஏதாவது விபத்து நேர போகிறது என அர்த்தம். இதுவே குறுகலாக இருந்தால் மருத்துவமனைக்கு போகும் அளவிற்கு ஆபத்துகள் நேரலாம்.

உங்கள் ரேகை எப்படி..?
இந்த ரேகை கையில் ஆழமாக பதிந்தும், எந்தவித பிரிவும் இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு மிக பலமான உடல் நலம் இருக்கும். அத்துடன் எந்தவித செரிமான பிரச்சினைகளும் இந்த ரேகை காரர்களுக்கு வராதாம். இவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருப்பார்களாம்.

இப்படியெல்லாமா இருக்கும்..!
இந்த ஆரோக்கிய ரேகை வளைந்து நெளிந்து சரி சமமாக இல்லாமல் இருந்தால் உங்களுக்கு சில பிரச்சினைகள் உடலில் உள்ளது என அர்த்தம். குறிப்பாக கல்லீரல் பிரச்சினை உங்களுக்கு ஏற்படும் என்பதை இது குறிக்கிறது.

மன உளைச்சல்...
ஆரோக்கிய ரேகை தலை ரேகை மற்றும் இதய ரேகையை தாண்டி சென்றால் உங்களுக்கு மன உளைச்சல் அடிக்கடி ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள் என்று அர்த்தமாம். இதுவே ஆரோக்கிய ரேகை தலை ரேகையை கடந்து இருந்தால் நரம்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

கிளை ரேகை எதற்கு..?
நமது கையில் இந்த கிளை ரேகை முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஆரோக்கிய ரேகையில் இருந்து, கிளை போல பிரிந்தால் உங்கள் வயோதிக பருவத்தில் மோசமான ஆபத்துகள் ஏற்படும் என் அர்த்தமாம்.

எதிர்மறையான தாக்கம்..!
உங்களின் ஆரோக்கிய ரேகை இதய ரேகையை கடந்து இருந்தால் உங்களின் வாழ்வில் எதிர்மறையான தாக்கங்கள் அதிகரிக்கும். மேலும், இல்லற வாழ்வில் பலவித பிரச்சினைகளும் உண்டாகுமாம்.

ரேகையே இல்லையா..?
இந்த ஆரோக்கிய ரேகை உங்களுக்கு இல்லையென்றால், நோய்களின் தாக்கம் அதிகம் என உணர்ந்து கொள்ளலாம். உடல்நல குறைபாடுகள் அடிக்கடி இவர்களுக்கு உண்டாகும். ரேகையின் அழுத்தம் தான் உங்களுக்கு பலமே.



Click it and Unblock the Notifications