தலையணையை முதலில் யார் கண்டுபிடித்து உபயோகப்படுத்தினார்கள் தெரியுமா?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

தலையணை, நாம் அதன் மீது தலை வைத்து படுக்கும் போது அது நமது தலைக்கு ஒரு நல்ல உதவியாக இருக்கும். நமது தோல்பட்டையையும், கழுத்தின் இயற்கையான வளைவையும் அஃது பாதுகாக்கிறது. நாம் நமது வயிற்றை பிரதானமாக வைத்து தூங்கினால், நமது தலைக்கு ஒரு தட்டையான தலையணை இருத்தல் நன்று அல்லது தலையணை இல்லாமல் தூங்கலாம்.

ஒரு தலையணை மீது எப்படி தூங்க வேண்டும்?

முழங்கால்களுக்கும் இடுப்புகளுக்கும் இடையில் ஒரு தலையணை வைக்கலாம். நாம் முதுகை பிரதாணப் படுத்தி தூங்கினால், நமது முதுகின் சாதாரண வளைவை பராமரிக்க உதவுவதற்கு நமது முழங்கால்களில் ஒரு தலையணையை வைக்கவும். கூடுதலாக நமக்கு பின்னால் ஒரு சிறிய, சுருட்டப்பட்ட துண்டை நமது முதுகின் கீழ் வைத்து தூங்கலாம். பிறகு ஒரு தலையணையை நமது கழுத்தின் கீழ் வைத்து தூங்கலாம்.

History of ancestral pillow and its evolution

நமது தோற்றத்தை மேம்படுத்த எப்படி தூங்க வேண்டும்?

நமது பின் புற வளைவை சரியான அளவில் பராமரிக்கும் நிலையை கண்டு உணர்ந்து நாம் தூங்கலாம். பொதுவான பரிந்துரை, நமக்கு வசதியாக இருந்தால், மேலே சொல்லப் பட்ட முழங்கால்களுக்கும் இடுப்புகளுக்கும் இடையில் ஒரு தலையணை வைத்து நமது முதுகை பிரதானப் படுத்தி உறங்கலாம்.

தலையணை வரலாறு:

கி.மு. 7000 ஆண்டிற்கு முந்தைய காலங்களில் மெசொப்பொடேமியா (Mesopotamia) வில் தலையணையின் முதல் பயன்பாடடு இருந்ததற்கான தடயங்கள் ஆய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இந்த பண்டைய தலையணைகள் வழக்கமாக கல்லால் செய்யப்பட்டன மற்றும் எகிப்தியர்களால் பயன்படுத்தப்பட்டன.

History of ancestral pillow and its evolution

தாங்கள் உறங்கும் போது, பூச்சிகள் அவர்களின் காதுகள், வாய், மூக்கு துவாரங்களுக்கு நுழைய தடுப்பதத்திற்காகவே அவர்கள் தலையணை பெரிதும் பயன் படுத்தி வந்திருக்கிறன்றனர். ஆரம்ப காலங்களில் ஆசியாவில், தலையணைகள் செல்வந்தர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

சமகால மேற்கத்திய கலாச்சாரத்தில் தலையணைகள், துணி பை போன்ற ஒன்றில் மென்மையான திணிப்புகளை உள்ளடக்கி அந்த மென்மையான திணிப்புகள் வெளிவராத வகையில் அனைத்து இடங்களிலும் தைக்க பட்டு இருக்கும். சில தலையணைகளில், இறக்கைகள் அல்லது செயற்கை நுரை கொண்டும் நிரப்பப் பட்டு இருக்கும். மற்ற கலாச்சாரங்கள், தலையணைகளை மரம் அல்லது கல்லால் செய்யப்பட்டு அந்தப் படுக்கை தலையணைகளை வழக்கமாக ஒரு துணி கொண்டு மூடப்பட்டிருக்கும்.

History of ancestral pillow and its evolution

பொதுவாக நாம் இலவம் பஞ்சை கொண்டு தலையணைகளை நிரப்புவோம். சில தலையணைகள் காற்றை கொண்டு நிரப்பப் படும் ஒரு பை போலவும் இருக்கும், இவை பெரும்பாலும் நாம் வெளியில் பயணம் செல்லும் வேளையில், குறிப்பாக இரவு இரயில் பயணங்களில் பயன் படுத்தப் படுகிறது.

மேலும் , சிறிய பாலிஸ்டர் ஃபைபர் (polyester fiber) கொண்டு தலையணைகளை நிரப்பலாம். இந்த இறுக்கமான சிறிய "பாலியஸ்டர் ஃபைபர்" பந்துகளால் சிறந்த தலையணை திணிப்பு செய்ய முடியும். தலையணைகள் செய்ய பயன் படும் மேலும் ஒரு தளர்வான இழை, "ஃபேக் ஸ்னோ" (fake snow), எனப்படும் மற்றோரு பொருள். இது உள்ளே மற்றும் வெளியே பயன்படுத்த நன்றாக இருக்கும். இவை 1 பவுண்டுக்கு 1 கன அடி வரை நிரப்புகிறது.

English summary

History of ancestral pillow and its evolution

History of ancestral pillow and its evolution
Story first published: Tuesday, August 22, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter