For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெஞ்சு சளியை கரைத்து நுரையீரலை சுத்தமாக்கும் சிறந்த ஆயுர்வேத சிகிச்சைகள்!!

By Bala Karthik
|

தொண்டையில் குளிர்ச்சி சேர்வதனாலே இந்த சளி தொல்லை ஒருவருக்கு உண்டாகிறது. மேலும் சுவாச கோளாறுகளாலும், தொற்றினாலும் கூட இந்த சளி பிரச்சனை ஒருவனுக்கு உண்டாவது வழக்கம். இதனை சரியான நேரத்தில் நாம் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால்... அது உறைதல் மற்றும் எரிச்சல் காரணமாக மூச்சுக் குழாய்களுக்கும் வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த சளி ஏற்படுவதற்கு சில அலர்ஜி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் காரணமாக இருக்கிறது. சில வகை மகரந்தங்களின் வாசனைகளாளும், புகைபிடிப்பவர்கள் அருகில் நிற்பதாலும், புகை பிடிப்பதாலும் நம்முடைய குரல்வளை பாதிக்கப்பட்டு சளியென்னும் ஒன்றால் சிரமத்தில் அது நம்மை தள்ளுகிறது.

Ayurvedic Tips On How To Get Rid Of Phlegm In The Throat Naturally

சளியை சமாளிப்பது என்பது மிகவும் எரிச்சலைடைய வைக்ககூடிய ஒரு பணியாக இருந்து கடைசிவரை தொந்தரவினை நமக்கு தருகிறது. அதற்காக நீங்கள் கவலை அடைய தேவையில்லை. பழங்காலத்து வைத்தியமான ஆயுர்வேதத்தின் வழிமுறைகளால் இந்த தொண்டையில் ஏற்படும் சளியிடமிருந்து எப்படி நாம் தப்பிப்பது என்பதனை பற்றி நாம் பார்க்கலாம்.

ஆயுர்வேதம் அளிக்கும் சில சிறந்த வைத்தியங்களை கொண்டு இந்த தொண்டையில் ஏற்படும் சளியை எப்படி போக்குவது? என நாம் இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி தேன் சாறு :

இஞ்சி தேன் சாறு :

அரைக்கப்பட்ட இஞ்சினை ஒரு ஸ்பூன் எடுத்துகொண்டு அத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட நீரையும் சேர்த்துகொள்ள வேண்டும்.

பின், அதனை 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து, அத்துடன் இரண்டு ஸ்பூன் தேனை சேர்க்க வேண்டும். இதனை ஒரு நாளைக்கு பல முறை குடித்து வர, தொண்டையில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு..இதனைவிட ஒரு சிறந்து மருந்து இல்லை என அடித்து கூறுகிறது ஆயுர்வேத குறிப்புகள்.

எழுமிச்சை ஜூஸ்:

எழுமிச்சை ஜூஸ்:

இரண்டு ஸ்பூன் எழுமிச்சை ஜூஸை தேனுடன் கலந்து சுடுதண்ணீரையும் சேர்த்து கொள்ள வேண்டும். அந்த கலவையை, ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்துவர, சளி மற்றும் தொண்டை வலியிலிருந்து உடனடி நிவாரணத்தை நீங்கள் பெறலாம்.

 சிவப்பு மிளகாய், ஆப்பிள் சைடர் சாறு:

சிவப்பு மிளகாய், ஆப்பிள் சைடர் சாறு:

சிவப்பு மிளகாய் ¼ ஸ்பூன் அரைத்ததனை எடுத்துகொண்டு, நறுக்கிய இஞ்சி, ஒரு ஸ்பூன் தேன், ஆப்பிள் சைடர் வினிகர், ஆகியவற்றையும் சேர்த்து அத்துடன் இரண்டு ஸ்பூன் தண்ணீரும் சேர்த்துகொள்ள வேண்டும்.

இந்த கலவையை தினமும் இரண்டு முறை பருகிவர...சளி நம்மைவிட்டு நீங்கும். இதுவும் சளியிலிருந்து விடுபட்டு நாம் வெளியே வர, ஆயுர்வேதம் அளிக்கும் அருமையான வழிமுறையாக அமைகிறது.

கேரட்:

கேரட்:

கேரட்டை ஜூஸாக்கிகொண்டு, அத்துடன் தண்ணீரை ஊற்றிகொள்ளவேண்டும். மேலும் இரண்டு ஸ்பூன்கள் தேன் சேர்க்க வேண்டும். அந்த கலவையை நாம் தினமும் குடித்துவர...கபம் கரைந்து விடுதலை கிடைக்கும்.

வெங்காயம்:

வெங்காயம்:

ஒரு வெங்காயத்தை சிறியதாக வெட்டிகொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை (சுகர்) சேர்த்து அரை மணி நேரம் வைத்துகொள்ள வேண்டும்.

இந்த திரவம் போன்ற அமைப்பினை ஒரு ஸ்பூன் எடுத்துகொண்டு, டானிக் போல் 2 அல்லது 3 மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வர...சளியை போக்க ஆயுர்வேதம் அளிக்கும் சிறந்த மருந்து இது என்பதனை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

மிளகுத்தூள் தேயிலை:

மிளகுத்தூள் தேயிலை:

இது உங்கள் தொண்டை வலியை போக்குவதுடன் சளிக்கும் சிறந்த வைத்தியமாக அமைகிறது. சூடான தேனீரில் மிளகுத்தூளை சேர்த்துகொள்ள வேண்டும்.

இவற்றுள் மெத்தனால் இருக்க, சைனஸ் அடைப்புகளுக்கு ஆயுர்வேதமாக பயன்படுகிறது. மேலும் இது, உடம்பில் இருக்கும் தேவையற்ற திரவங்களை நீக்கவும், சுவாச பிரச்சனைகளுக்கு முடிவுகட்டவும் நாம் பயன்படுத்துகிறோம்.

புதினா மற்றும் யூகலிப்டஸ் இலைகள்:

புதினா மற்றும் யூகலிப்டஸ் இலைகள்:

ஒரு கை நிறைய யூகலிப்டஸ் மற்றும் புதினா இலைகளை எடுத்துகொண்டு, தண்ணீருடன் சேர்த்து அதனை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும். பத்து நிமிடத்திற்கு பிறகு... சுடு நீரை தவிர மற்றவற்றை வடிகட்டி நீக்க வேண்டும். இப்பொழுது உங்கள் முகத்தை அந்த நீராவியை கொண்டு உள் இழுக்க வேண்டும். இது சைனஸினை திறக்க வழிவகை செய்து...உங்கள் சளியை வெளியேற்றுகிறது.

மஞ்சள்:

மஞ்சள்:

மஞ்சள் ஒரு ஸ்பூன் எடுத்துகொண்டு அத்துடன் ஒரு டம்ளர் பாலையும் சேர்த்துகொள்ள வேண்டும். தினமும் காலை மற்றும் இரவு தூங்கசெல்லும் முன், இதனை பருகிவர...சளி பிரச்சனை உங்களை விட்டு பறந்துசெல்லும்.

உப்பு நீரில் கொப்பளிப்பது :

உப்பு நீரில் கொப்பளிப்பது :

சூடான உப்பு நீரை கொண்டு கொப்பளிப்பது மற்றுமொரு அருமையான வழியாக சளியை விரட்ட இருக்கிறது. தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணமாக இந்த சுடு நீர் அமைகிறது. அத்துடன் பாக்டீரியாவை அழித்து தொற்றுகளிடமிருந்தும் நம்மை இந்த சுடு நீர் காப்பாற்றுகிறது.

நீராவி:

நீராவி:

இந்த நீராவியை நாம் உள் இழுப்பதன் மூலம் நம்மால் சளிக்கு டாட்டா காட்டமுடிகிறது. இந்த நீராவி என்ன செய்யுமென்றால்...சளியினை திரவமாக மாற்றி, நம் உடலை விட்டு வெளியேற செய்கிறது.

 நாசல் ட்ராப்ஸ் ;

நாசல் ட்ராப்ஸ் ;

சுத்தமான தண்ணீர் மற்றும் உப்பினை கொண்டு சைனஸை துடைக்க, தொண்டையில் இருக்கும் சளி வெளியாகிறது. இதுவும் ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் தொண்டையில் ஏற்படும் சளிக்கும் சிறந்த வைத்தியமாக அமைகிறது.

மேலும் இந்த சலைன் நாசல் ரின்ஸ்..கடைகளிலும் கிடைக்கிறது என்று கூறுகின்றனர். நெட்டிபாட் எனப்படும் ஒன்றினை கொண்டு நம்மால் மூக்கு மற்றும் சைனஸினை சுத்தம் செய்ய முடிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Tips On How To Get Rid Of Phlegm In The Throat Naturally

Ayurvedic Tips On How To Get Rid Of Phlegm In The Throat Naturally
Story first published: Monday, June 5, 2017, 16:05 [IST]
Desktop Bottom Promotion