Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
அனுமன் ஜெயந்தி 2024 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ..!
அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள்தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?
அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனை வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ் நாட்காட்டியின் படி, ஏப்ரல் 23ஆம் தேதி அன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

அனுமனை பூஜிக்கும் முறை
ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.
சில பக்தர்கள் வீட்டிலேயே அனுமனுக்கு பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை ஆகியவற்றை படைப்பார்கள். அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாடினால் சிறப்பு.
மேலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடைகள் நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.
அனுமனுக்கு உகந்த வழிபாட்டு தினங்கள் என்னென்ன?
வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும். தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.
அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
இரு வேறு மாதங்களில் அனுமன் ஜெயந்தி
தெய்வங்கள் மற்றும் அவதார புருஷர்களின் அவதார தினத்தை ஜெயந்தி என கொண்டாடுவது வழக்கம். அப்படி அனுமனண் அவதரித்த தினத்தை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். மற்ற எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பாக அனுமனுக்கு மட்டும் வருடத்திற்கு இரண்டு முறை ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் மார்கழி மாத அமாவாசையுடன் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமான் அவதரித்ததாக கூறி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் வட மாநிலங்களில் சித்திரை மாதம் பெளர்ணமியில் அனுமான் அவதரித்ததாக கருதி, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். இது தவிர ஆந்திராவில் சில பகுதிகளில் வைகாசி மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். இதனால் இவற்றில் எதை கணக்கில் எடுத்துக் கொண்டு அனுமன் வழிபாட்டினை மேற்கொள்வது என பக்தர்களுக்கு வெகு காலமாக குழப்பம் உள்ளது.
இரண்டு அனுமன் ஜெயந்தி கொண்டாட காரணம்
இந்து புராணங்களின் படி, அனுமன் அவதரித்தது மார்கழி மாத அமாவாசையில் தான். இதனால் இதை அவரது ஜெயந்தி நாளாக கொண்டாடுகிறோம். பிறக்கும் போது அற்புதமான சக்திகளைக் கொண்ட அனுமன், குழந்தையாக இருந்த போது பயங்கர பசியில், சூரியனை பழம் என கருதி அதை பிடித்து சாப்பிட, வானில் பறந்து சென்றார். சூரியனை பிடிக்க அனுமன் அருகில் சென்றதால், அவரின் நிழலால் பூமியை இருள் சூழ்ந்தது. இதை அறிந்த இந்திரன், அனுமன், சூரியனை சாப்பிடுவதை தடுப்பதற்காக தன்னுடைய கதாயுதத்தால் அனுமனை தாக்கியதில், அனுமன் மயக்கமடைந்தார்.
தன்னுடைய மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியதால் கோமடைந்த வாயு பகவான் காற்றை நிறுத்தினார். அவரை அமைதிப்படுத்திய பிரம்மா, அனுமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, பல வரங்களையும் அளித்தார். இது நடந்தது சித்திரை மாத பெளர்ணமியில் என்பதால் இதுவும் அனுமனின் அவதார தினமாக கருதப்படுகிறது. இதனால் தான் அனுமனுக்கு மட்டும் வருடத்தில் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாப்படுகிறது.



Click it and Unblock the Notifications