Latest Updates
-
வீட்டில் செல்வம் பெருகணுமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் இந்த செடிகளை சரியான திசையில் வையுங்கள்! -
சாணக்கிய நீதி படி பெண்களின் கூடவே பிறக்கும் 5 தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
Guru Peyarchi 2026: உச்சம் பெறும் குருவால் இந்த 6 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ஓட்ஸ் இட்லியும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 02 ஜூன் 2026: இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா -
புதன்-சுக்கிரன் ஒரே நாளில் நட்சத்திரத்தை மாற்றுவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/4 கப் வேர்க்கடலையும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - இட்லி,தோசைக்கு செமயா இருக்கும் -
குரு-சனி இணைந்து உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க மூட்ட மூட்டையா பணத்தை அள்ளப்போறாங்க.. -
பிரைட் மாதம் கொண்டாடும் எல்ஜிபிடிகியூ இணையர்களே! பொது இடங்களில் பாதுகாப்பாக இருக்க இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க! -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க? ஜூன் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்
12 ராசியினரும் சென்று வணங்க வேண்டிய குரு பவானின் ஸ்தலங்கள்..!
சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வது முக்கியமானதாகும். அதிலும் குருப் பெயர்ச்சியன்று குரு பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பானாது. ஒருவரது ராசிக்கு, 1,4,6,8,10,12 ஆகிய இடங்களில் குரு சஞ்சரிக்கும்போது , குருபகவானை வழிபட்டு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பார்கள்.
குரு பகவான் மே 1ஆம் தேதி, புதன்கிழமை மதியம் 12.59 மணிக்கு மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆனார். ஜோதிடத்தில் முழு சுபர் என குறிப்பிடப்படுபவர் குருபகவான். இவர் மற்றொரு சுப கிரகமான சித்திர பகவான் ஆட்சி செய்யக்கூடிய ரிஷப ராசியில் அடுத்த ஒரு ஆண்டு காலம் வந்திருக்க உள்ளார். இதனால் கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், தன பாக்கியம், சொத்து சேர்த்தல் என பல நற்பலன்களை 12 ராசிகளுக்கு தர உள்ளார். ஆனாலும் குருப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசியினரும் உள்ளனர். ஒரு கிரகம் மாறும் போது சிலருக்கு நல்ல பலனும் சிலருக்கு அசுப பலனையும் தரும்... அதனால் அனைவருக்கும் குரு பலன் கிடைக்க இந்த தலங்களுக்கு சென்று வருவது நல்லது.. 12 ராசியினரும் சென்று வணங்க வேண்டிய குரு ஸ்தலங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஆலங்குடி திருத்தலத்திற்குச் சென்று குரு பகவானை தரிசிக்கலாம். குருபகவானுக்குரிய விஷேஷத் தலமாக ஆலங்குடி விளங்குகிறது. கோவில் பிரகாரத்தின் இடது புறம் தட்சிணாமூர்த்தியாக இங்கு குரு பகவான் அருள் புரிகிறார். தமது சீடர்களுக்கு 24 அட்சரங்கள் உள்ள மந்திரத்தை உபதேசித்தார் என்பதால், இவரை 24 முறை வலம் வந்து, 24 தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள். வியாழக்கிழமகளில் மஞ்சள் நிற ஆடை அணிவித்து முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து இந்தக் குரு பகவானை வழிபடுவது சிறப்பு.
ரிஷபம்
ரிஷப ராசியினர் தென் குடித் திட்டைக்கு சென்று குரு பகவானை தரிசிக்கலாம். திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.
கடகம்
கடக ராசியினர் இலம்பயங்கோட்டூர் தலத்திற்கு சென்று குரு பகவானை தரிசனம் செய்யலாம்.இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, சிவன் யோக தெட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் இளமையாக இருக்கும்படியாக அருளினார். இவர், கோஷ்டத்தில் சின்முத்திரையுடனான வலக்கையை இதயத்தில் வைத்தபடி, வலது பாதத்தை மடக்கி, யோகபட்டையுடன் அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் சிறுபிள்ளை போலவும் பின்னர் முதியவர் போலவும் வழிமறித்த பின்பும் அவர் உணராததால் வெள்ளைப் பசு வடிவங் கொண்டு கோயிலை நோக்கிச் சென்று மறைந்தார் என்பது தொன்நம்பிக்கை.
சிம்மம்
சிம்ம ராசியினர் திருப்புலிவனம் சென்று குருவை வணங்கி வரலாம்.. உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனத்தில், 1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், அனைத்து ராசியினருக்கும் பரிகார ஸ்தலமாக உள்ளது. இதனால், திருமணம், பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், நவக்கிரக தோஷம், நாகதோஷம் நீங்க என, பல்வேறு விதமான பரிகாரத்திற்காக, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து, தினமும், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிம்ம ராசியினர் இங்குள்ள குருவை வணங்கினால் நல்லது நடக்கும்...
கன்னி
கன்னி ராசியினர் பாடி (சென்னை) தலத்திற்கு சென்று குரு பகவானை வணங்கி வரலாம்... புண்ணிய தலங்களில் ஒன்று திருவலிதாயம் எனப்படும் பாடி. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு திருவலிதாய சுவாமி சமேத ஜகதாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள் புரியும் குரு பகவானுக்கு மஞ்சளாடை சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கி சந்தோஷம் ஆட்கொள்ளும் என்று தலபுராணம் கூறுகிறது
துலாம்
துலாம் ராசியினர் பெரிய பாளையம் அருகே சுருட்டப்பள்ளி கோயிலுக்கு சென்று வரலாம்..பரந்தாமன் என்று போற்றப்படும் பத்து அவதாரம் எடுத்த விஷ்ணுவைப் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஸ்ரீரங்கத்தில் தரிசிக்கலாம். இப்பெருமாளே பாம்பணையில் பள்ளி கொண்டு இருப்பது பாற்கடலில். அலை கடலைக் கடைந்தபோது, திரண்டு வந்த ஆலாகால விஷத்தை உண்ட சிவ பெருமான் திருநீலகண்டனாக சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை இன்றும் காணலாம். இந்த தலத்தில் உள்ள குருவை வணங்கி வர நல்ல பலன் கிடைக்கும்...
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் புளியரை தலத்துக்கு சென்று வரலாம்.. சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சன்னதிகளுக்கும் இடையே திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் வடக்குபுறமும் அம்பாள் தெற்குபுறமும் நின்று அருள் பாலிக்கின்றனர்.. சிவன் சன்னதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சன்னதி அமைந்துள்ளது. சிவனையும் தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக தரிசிக்கலாம்.குரு பகவானின் அருள் நிறைந்த புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் செங்கோட்டையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தனுசு
தனசு ராசியினர் உத்தமர்கோவிலுக்கு சொன்று வணங்கலாம்.. ஒரே கோவிலில் ஏழு குருக்கள் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருச்சியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள உத்தமர் கோவில் ஆகும். இது 'சப்தகுருத்தலம்' என்று போற்றப்படுகிறது. தேவகுருவான பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சாரியார், தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மதேவன், விஷ்ணு குரு வரதராஜப் பெருமாள், சக்திகுரு சௌந்தர்ய நாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒருங்கே அருள்பாலிக்கும் உத்தமர் கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வங்களை ஒருமுறை தரிசித்தாலே கோடி புண்ணியம் கிட்டும்.
மகம்
மகர ராசியினர் கோவிந்தவாடி (அகரம்) தலத்துக்கு சென்று வரலாம். இந்த கோயில் கோஷ்டப் பகுதியில், சுமார் ஆறடி உயரத்தில் அழகிய திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் கண்களை அமைத்திருக்கும் விதம், கொள்ளை அழகு. குரு தட்சிணாமூர்த்தியின் கண்கள், நம்மைப் பார்ப்பது போலவும் இருக்கும். எவரையும் பார்க்காதது மாதிரியும் இருக்கும். இவரை வியாக்யான தட்சிணாமூர்த்தி என்கிறார்கள். வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிந்தவாடி தலத்துக்கு வரும் பக்தர்கள் அதிகம். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம்!
கும்பம்
கும்ப ராசியினர் திருவொற்றியூருக்கு சென்று குருவை வழிபடலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். கோயில்களில் தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை, திருவொற்றியூரில் வடக்கு பார்த்த கோலத்தில் தரிசிக்கலாம். பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்த தலம் இது. இங்கு மூலவராக தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். வழக்கமாக சுவாமி பீடத்தில் நான்கு சனகாதி முனிவர்கள் மட்டுமே இருப்பர். ஆனால், இவரது பீடத்தின் கீழ் 18 மகரிஷிகள் உள்ளனர். இவருக்கு இங்கு உற்சவர் வடிவமும் உள்ளது. இச்சிலையின் கீழ் ஒரு யானை வடிவமும் உள்ளது. குரு பெயர்ச்சிக்கு இங்கு விசேஷ பூஜைகளும், ஹோமங்களும் நடக்கும்.
மீனம்
மீன ராசியினர் மயிலை தட்சிணாமூர்த்தி திருக்கோவிலுக்கும் சென்று வழிபட சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள். கயிலையே மயிலை; மயிலையே கயிலை' எனப் புகழப்படுகிறது, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவன் கபாலீசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.பிரம்ம சிரச்சேத மூர்த்தியாக, பிரம்ம கபாலத்துடன், தாருகா வனத்து ரிஷிகளின் இல்லம் சென்று பிச்சை ஏற்ற காரணத்தால் கபாலீசுவரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications