Latest Updates
-
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம் -
வெயில் காலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க - இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க -
மங்களூர் ஸ்பெஷல் முளைகட்டிய பாசிப்பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் குருமா மாதிரியே இருக்கும் -
தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் வைத்ருதி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு மோசமான பலன்களை தரப்போகுது -
இந்தியாவின் முதல் திரைப்படத்தை உருவாக்கியது யார்? அந்த திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா? -
இட்லி, தோசைக்கு ஏற்ற பச்ச மாங்கா வேர்க்கடலை சட்னி - சிம்பிளா எப்படி செய்யணும் தெரியுமா?
GOAT Movie: தளபதி விஜய் பற்றி ரசிகர்களுடன் சில சுவாரஸ்யமான கேள்விப்பதில்கள்..உங்க பதில்களையும் பதிவு பண்ணுங்க!
GOAT Movie: தளபதி விஜய் நடித்த திரைப்படமான GOAT செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுக்க கிட்டதட்ட 5000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது. விஜய் மற்றும் வெங்கட் பிரபு முதல் முறை இணையும் GOAT திரைப்படம் இதுவரை விஜய் நடிக்காத புதிய கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை கவராத நிலையில் சமீபத்தில் ரிலீஸான ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தந்தை மற்றும் De-Ageing தொழில்நுட்பத்தில் மகன் விஜய் என இரண்டு விஜய் கலக்கியிருக்கும் டிரைலர் இந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட ட்ரைலராக உள்ளது. GOAT திரைப்படத்திற்கு பிறகு விஜய் இன்னும் ஒரேயொரு படத்தில் மட்டுமே நடிக்கப்போகிறார் என்பது அவரது ரசிகர்களாலேயே பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத துக்க செய்தியாக உள்ளது.

GOAT திரைப்படத்தின் மீது குறிப்பிட்ட அளவு எதிர்பார்ப்பு இருந்தாலும் நிச்சயம் LEO திரைப்படத்திற்கு இருந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்னும் ஒரே திரைப்படத்துடன் அரசியல் களமாட விஜய் தயாராகி வரும் நிலையில் GOAT திரைப்படத்தின் ரிலீஸ் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்களிடம் விஜய்-ன் திரை அனுபவம் பற்றியும், GOAT திரைப்படம் பற்றியும் சில கேள்விகளை நாம் கேட்டுள்ளோம், அதற்கான ரசிகர்களின் பதில்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
கேள்வி 1: சிறந்த தியேட்டர் அனுபவம் கொடுத்த விஜய் படம் எது?
கேள்வி 2: அதிக முறை பார்த்த விஜய் படம் எது தெரியுமா?
கேள்வி 3: GOAT திரைப்படத்தில் எதிர்பார்ப்பது என்ன?
கேள்வி 4: தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகுவது பற்றி நினைப்பது என்ன?
நந்தினி, திருப்பூர்
தமிழ் சினிமாவில் அதிகளவு குடும்ப மற்றும் பெண் ரசிகைகள் இருக்கும் நடிகர் என்றால் அது தளபதி விஜய்தான். குழந்தை முதலே தளபதி விஜய்- ரசிகையாக இருக்கும் நந்தினி நமது கேள்விகளுக்கு அளித்த பதில்கள் என்னவெனில்,
பதில் 1: அனைத்து விஜய் படங்களும் பிடிக்குமென்றாலும் 200% திருப்தியை தியேட்டரில் கொடுத்த படமென்றால் அது துப்பாக்கிதான்.
பதில் 2: தியேட்டரிலும் சரி, வீட்டிலும் சரி மொத்தமாக அதிக முறை பார்த்த விஜய் படம் கில்லி.
பதில் 3: மங்காத்தாவும், கில்லியும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கணும்.
பதில் 4: அரசியலுக்கு வரது நல்லதா இருந்தாலும் அதுக்காக சினிமாவை விடணும்னு அவசியம் இல்ல.
பாலாஜி, கோயம்புத்தூர்
பதில் 1: தியேட்டரில் பார்க்கும்போதும் சரி, டிவி-ல பார்க்கும் போதும் சரி பெஸ்ட் விஜய் படம் கில்லி.
பதில் 2: கேக்கறதுக்கு இது கொஞ்சம் வித்தியாசமா இருந்தாலும் அதிக முறை பார்த்த விஜய் படம் துள்ளாத மனமும் துள்ளும்.
பதில் 3: படம் நிச்சயம் தாறுமாறா இருக்கும், ஆனால் வாரிசு, பீஸ்ட் மாதிரி இருந்துறக்கூடாது.(இந்த பயம் எல்லாருக்குமே இருக்கு)
பதில் 4: அரசியலுக்கு வரது பிடிக்கல, சினிமால ராஜா மாதிரியே இருந்துட்டு போயிரலாம்.
தாரணி, கரூர்
பதில் 1: குழந்தையா இருக்கும் போது ரொம்ப பிடிச்ச விஜய் படம் பிரியமானவளே, அதுக்கப்பறம் தியேட்டரில் பார்த்ததுல பெஸ்ட் கத்தி.
பதில் 2: இப்ப வரைக்கும் அதிக தடவ பார்த்த விஜய் படம் போக்கிரிதான்.
பதில் 3: ட்ரெய்லர்ல பார்த்தத அப்படியே ஸ்க்ரீன்ல கொண்டு வந்துட்டாலே போதும், படம் ப்ளாக்பஸ்டார்தான்.
பதில் 4: சினிமால சாதிச்சது போதும், அரசியலில் ஒரு கலக்கு கலக்கணும்.
சரபோஜி, திருச்செங்கோடு
பதில் 1: கில்லிக்கு அப்புறம் பெஸ்ட் தியேட்டர் அனுபவம் போக்கிரிதான். அதுக்கப்பறம்தான் துப்பாக்கி கூட.
பதில் 2: இப்பவும் போர் அடிச்சா உடனே பாக்குற விஜய் படம்னா அது தெறி தான். அதுல விஜய் ரொம்ப புதுசா இருப்பாரு.
பதில் 3: பாட்டு, ட்ரெய்லர் கொஞ்சம் பயமா இருந்தாலும் வெங்கட் பிரபு மேல நம்பிக்கை இருக்கு, படம் பந்தயம் அடிக்கும்.
பதில் 4: இன்னும் கொஞ்சம் படம் நடிச்சிட்டு அதுக்கப்புறம் அரசியலுக்கு போயிருக்கலாம்.
சந்தியா, சென்னை
பதில் 1: முதல் தடவைப் பார்த்த First Day First Show மெர்சல்தான். அதனாலேயே பெஸ்ட் அனுபவம் மெர்சல் படம்தான் .
பதில் 2: கில்லிய விட அதிக தடவ பார்த்த விஜய் படம்னா அது நண்பன்தான். ஒரு டயலாக் விடாம மனப்பாடமா தெரியும்.
பதில் 3: சம்பவம் உறுதி. தளபதி கடைசி படத்தை விட GOAT தான் மாஸா இருக்கும்.
பதில் 4: அரசியலுக்குப் போனாலும் MGR, விஜயகாந்த் மாதிரி சினிமால நடிக்கிறதா தொடரலாம்.
ஷர்மிளா, தருமபுரி
பதில் 1: படம் கலவையான விமர்சனம் வாங்குனாலும் எனக்கு பெஸ்ட் படம் சர்கார்தான்.
பதில் 2: அதிகமுறை பார்த்த படம்னா அது அழகிய தமிழ் மகன். மத்தவங்களுக்கு எப்படியோ இந்த படம் என்னோட All Time Favourite.
பதில் 3: எவ்வளவு கம்மியா Expectation வைச்சுக்க முடியுமோ அவ்வளவு கம்மியா வைச்சிருக்கேன்.
பதில் 4: அது அவரோட ஆசையா இருந்தாலும் எனக்கு சினிமா விட்டு போறது பெரிய ஏமாற்றம்தான்.
ஹரிபிரசாத், தூத்துக்குடி
பதில் 1: பெஸ்ட் தியேட்டர் அனுபவம் லியோதான். முழுக்க முழுக்க ரசிகரை மனசுல வைச்சு எடுத்த படம்னா அதுல லியோதான் பெஸ்ட்.
பதில் 2: எப்பவுமே டெலிட் பண்ணாம அடிக்கடி பார்க்குற படம்னா அது மாஸ்டர்தான். விஜயோட JD கேரக்டர் One Time Wonder தான்.
பதில் 3: இதுவரைக்கும் இல்லாத தியேட்டர் அனுபவமா GOAT இருக்கப்போகுது.
பதில் 4: இன்னும் 10 படம் நடிச்சிட்டு தாராளமா அரசியலுக்கு போலாம்.
நம்முடைய பதில்
பதில் 1: இன்னும் 100 படம் வந்தாலும் பெஸ்ட் தியேட்டர் அனுபவம் கில்லிதான்.
பதில் 2: அதிக தடவை பார்த்த விஜய் படம் காதலுக்கு மரியாதை, அப்புறம் கில்லி.
பதில் 3: நிச்சயம் பீஸ்ட் மாதிரி மட்டும் இருந்துரக்கூடாது.
பதில் 4: இன்னும் 5 வருஷம் கழிச்சு போயிருக்கலாம்.
உங்களோட பதில்களை கமெண்ட் பண்ணுங்க.



Click it and Unblock the Notifications













