Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
விநாயகர் சதுர்த்தி 2025:தமிழ்நாட்டில் முதல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் எந்த வருடம் நடந்தது தெரியுமா?
Ganesh Chaturthi 2025: முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடாமல் நாம் எந்த நல்ல செயலையும், பூஜையையும் தொடங்க மாட்டோம். ஆனால் விநாயகரை மட்டுமே வழிபடுவதற்கென உள்ள ஒரு முக்கியமான பண்டிகைதான் விநாயகர் சதுர்த்தி. ஈசன் மைந்தன் விநாயகருடைய பிறந்தநாளைக் கொண்டாடும் இந்து பண்டிகைதான் விநாயகர் சதுர்த்தி. அவர் ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கும்ஒரு நட்பான கடவுளாவார்.
இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் இந்தப் பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாநிலங்களிலும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டாலும் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இது மிகவும் பிரபலமான பண்டிகையாகும். இந்த வருடம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன் கிழமை கோலாகலமாக கொண்டப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி 2025 தேதி மற்றும் முகூர்த்தம்
தமிழ் பஞ்சாங்கத்தின்படி, விநாயகர் ஆவணி மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் பிறந்தார், மேலும் இந்த பண்டிகையும் அதே நேரத்தில் வருகிறது. அதேசமயம் கிரிகோரியன் நாட்காட்டியின் படி, இது ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் வருகிறது.
2025 ஆம் ஆண்டில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 27 புதன்கிழமை தொடங்குகிறது. சதுர்த்தி திதி ஆகஸ்ட் 26 அன்று மதியம் 1:54 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 27 அன்று மதியம் 3:44 மணிக்கு முடிவடைகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் முக்கிய நிகழ்வான விநாயகர் சிலையை கடலில் மூழ்கடிக்கும் விழா செப்டெம்பர் மாதம் 6 ஆம் தேதி கொண்டப்படுகிறது. இதற்கான பூஜை முகூர்த்தம் காலை 11:06 மணி முதல் பிற்பகல் 1:40 மணி வரை நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி வரலாறு
இந்து புராணங்களின் படி, விநாயகர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் மகனாக உள்ளார். பார்வதி தேவி தன் உடலில் உள்ள மண்ணிலிருந்து விநாயகரை உருவாக்கி, அவர் குளிக்கும்போது பாதுகாக்க அவரை உயிர்ப்பித்தார் என்று புராணங்கள் கூறுகிறது. அப்போது அங்கு வந்த சிவபெருமானை விநாயகர் தடுத்தபோது இருவருக்கும் இடையில் போர் மூண்டது, இந்த போரில் சிவபெருமான் கோபத்தில் விநாயகரின் தலையை வெட்டினார். மனம் உடைந்த பார்வதி, விநாயகரை உயிர்ப்பிக்குமாறு கெஞ்சினார், சிவன் அவரது தலையை யானையின் தலை கொண்டு மாற்றினார்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் எப்போது தொடங்கியது?
விநாயகரை பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் வழிபட்டு வந்தாலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் வழக்கம் 17 ஆம் நூற்றாண்டில் மராட்டியப் பேரரசில் தொடங்கியது. சத்ரபதி சிவாஜி மகாராஜா தேசியவாதம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக இதைக் கொண்டாடினார்.
எப்போது மக்கள் கொண்டாட்டம் தொடங்கப்பட்டது?
விநாயகர் சதுர்த்தியை மக்களை இணைத்து அனைவரும்கொண்டாடும் தேசிய விழாவாக உயர்த்தியவர் லோகமான்ய திலகர். அவர் ஒரு பொது இடத்தில் விநாயகரின் களிமண் உருவத்தை நிறுவினார், பின்னர் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் கடலில் மூழ்கடித்தார். திலகர் இந்த கொண்டாட்டங்களை உயர் மற்றும் கீழ் சாதியினருக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் விழாவாக உருவாக்கினார்.
தமிழ்நாட்டில் எப்போது தொடங்கப்பட்டது?
தமிழ்நாட்டில் விநாயகரை வழிபடும் முறை இருந்தாலும் சிலை வைத்து ஊர்வலமாக செல்லும் வழக்கம் பல ஆண்டுகள் வழக்கத்தில் இல்லாமல் இருந்தது. தமிழ்நாட்டில் பிரமாண்டமான பொது விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் 1980-கள் மற்றும் 1990-களில் பிரபலமடையத் தொடங்கின, சென்னையில் பொது பந்தல்கலில் விநாயகரை வைத்து ஊர்வலம் செல்லும் வழக்கம் 1983 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் மத தாக்கங்கள் அவற்றின் பிரபலத்துக்கு காரணாமாக இருந்தன.
விநாயகரை கடலில் கரைக்கும் விழா
தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலைகளை கடலில் கரைக்கும் சடங்கு அனந்த சதுர்தசி என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டில் விநாயகருக்கு பல்வேறு இனிப்புகள் படைக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் பிரதானமாக இருப்பது பிள்ளயாருக்கு பிடித்த கொழுக்கட்டையும், வேகவைத்த சுண்டலும்தான். விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது பிரான் பிரதிஷ்டா, ஷோடசோபச்சாரம், உத்தர பூஜை மற்றும் கணபதி விசார்ஜன்.
சிறப்பு விழாக்கள்
திருச்சிராப்பள்ளியில் மலை உச்சியில் அமைந்துள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்களில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.



Click it and Unblock the Notifications












