Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகள் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதாம்..ஷாக் ஆகாதீங்க!
இந்திய உணவுகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவை, மசாலாக்கள் நிறைந்த இந்த உணவுகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய உணவுகள் அதன் பழங்கால மரபுகளுக்குப் பெயர் பெற்றவை, ஆனால் உண்மையில் இப்போது நாம் அடிக்கடி சாப்பிடும் பல உணவுகள் அவ்வளவு பழமையானவை அல்ல.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் இந்தியா நிர்வாகரீதியான மாற்றங்களை மட்டும் சந்திக்கவில்லை, ஆச்சரியமளிக்கும் விதமாக ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் உணவு முறையிலும் பல் மாற்றங்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய இந்த உணவுகள் இன்று இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த பதிவில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணவுகள் என்னனென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பிரெட் மற்றும் பேக்கிங் கலாச்சாரம்
இந்தியால் பிரெட் புதியதல்ல, பிரெட் மற்றும் நான் முகலாயர்கள் காலம் முதலே இருந்து வந்துள்ளன. ஆனால் துண்டுகளாக்கப்பட்ட பிரெட், பன்கள் மற்றும் பேக்கரி கலாச்சாரம் பற்றிய யோசனை ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது. அவர்கள் வெள்ளை பிரெட்டை ஒரு பிரதான உணவாக பிரபலப்படுத்தினர், குறிப்பாக நகர்ப்புற மையங்களில். இன்று, பாவ் பாஜி, வடை பாவ் மற்றும் மாஸ்கா பாவ் போன்றவற்றை இந்த பேக்கரி கலாச்சாரம் இல்லாமல் கற்பனை கூட செய்ய முடியாது. மும்பை, கொல்கத்தா மற்றும் கோவா போன்ற நகரங்களில் உள்ள பிரபலமான பேக்கரிகள் இன்னும் அந்த காலனித்துவ ஆங்கிலேயர்களின் செல்வாக்கைக் கொண்டுள்ளன.
தேநீர் மீதான ஆர்வம்
இப்போது தேநீர் இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஆனால் ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னால் நிலை வேறுமாதிரியாக இருந்தது. அசாமில் தேயிலை விளைச்சல் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தாலும், அதை நாடு தழுவிய பழக்கமாக மாற்றியவர்கள் ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் தேயிலை விவசாயத்தை தீவிரமாகி, அதை வீட்டு உபயோகப் பானமாக தீவிரமாக சந்தைப்படுத்தினர். பால் மற்றும் சர்க்கரையைச் சேர்ப்பது இந்திய ரசனைகளுக்கு ஏற்றதாக மாறியது, விரைவில் தேநீர் ஒரு தேசிய பானமாக மாறியது. தற்போது இந்தியாவும், தேநீரும் பிரிக்க முடியாததாக மாறிவிட்டது.
தேநீரில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடுவது
சூடான டீயில் பிஸ்கட்டை நனைத்து சாப்பிடும் பழக்கம் ஆங்கிலேயர்களால் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் வெண்ணெய் கலந்த ஷார்ட்பிரெட்கள் மற்றும் மொறுமொறுப்பான பிஸ்கட்களை அறிமுகப்படுத்தினர். குறைவான விலையில் மற்றும் சேமிக்க எளிதான பிஸ்கட், அனைத்து வீடுகளின் சிற்றுண்டியாக மாறியது. பிரிட்டிஷ் தேநீர் நேர பாரம்பரியமாகத் தொடங்கியது இப்போது நாடு முழுவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறியுள்ளது.
உருளைக்கிழங்கு
இன்று நாம் பல்வேறு வழிகளில் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதல்ல. இது ஐரோப்பிய வர்த்தகர்கள் மூலம் வந்து ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் இந்தியா முழுவதும் பரவியது. உருளைக்கிழங்கு விவசாயம் விலை குறைவானதாக இருந்தது, நிறைவானது மற்றும் பல்துறை திறன் கொண்டது என்பதால் ஆங்கிலேயர்கள் அதை ஊக்குவித்தனர். காலப்போக்கில், இந்தியா அதை தனக்கான உணவாக ஏற்றுக்கொண்டது. இப்போது உருளைக்கிழங்கு இந்தியாவின் தவிர்க்க முடியாத உணவாக மாறிவிட்டது.
காலிஃபிளவர்
காலிஃபிளவரும் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இது பிரிட்டிஷ் விவசாய திட்டங்களின் கீழ் பரவலாக வளர்க்கப்பட்டது. முதலில், இது இந்திய சமையலறைகளில் ஒரு ஆடம்பரமான உணவுப்பொருளாக காணப்பட்டது, ஆனால் அது மசாலாப் பொருட்களை எவ்வளவு எளிதில் உறிஞ்சுகிறது என்பதன் காரணமாக அது விரைவில் விருப்பமான உணவாக மாறியது.



Click it and Unblock the Notifications
