Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
700 ஆண்டுகளுக்கு பின் தீபாவளியில் நிகழும் 5 ராஜயோகங்கள்: இந்த 4 ராசிகளுக்கு வெற்றியும், பணமும் குவியப் போகுது.
Five Rajyoga Made On Diwali After 700 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் நிலைகள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் வருகிற தீபாவளி பண்டிகை நாளில் சில மங்களகரமான ராஜயோகங்கள் உருவாகின்றன.
அதுவும் 5 ராஜயோகங்கள் தீபாவளி நாளில் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்கள் சுமார் 700 ஆண்டுகளுக்கு பின் தீபாவளி நாளில் உருவாவதாக கூறப்படுகின்றன. அந்த ராஜயோகங்கள் முறையே கஜகேசரி, ஹர்ஷர், உபிச்சாரி, கஹல் மற்றும் துர்தாரா ஆகியவை. இந்த ராஜயோகங்கள் அனைத்தும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

மேலும் இந்த ராஜயோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்களால் தீபாவளியில் இருந்து மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக இவர்கள் நல்ல பண வரவையும், வெற்றியையும் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் உருவாகும் ராஜயோகங்களால் நற்பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தின் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்க நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் அதற்கான வழிகள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத பணத்தை இக்காலத்தில் பெறலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளியானது மிகவும் சிறப்பாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். தொழில் மற்றும் வேலை ரீதியாக சில நற்செய்திகளைப் பெறக்கூடும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
காதலிப்பவர்களுக்கும் இனிமையாக இருக்கும். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்போருக்கு இக்காலம் நன்றாக இருக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல லாபம் கிடைக்கும். கடன் வாங்கியிருந்தால், அதை இக்காலத்தில் திருப்பி செலுத்திவிடுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தீபாவளி நாளில் உருவாகும் ராஜயோகங்களானது அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. சிலர் சொத்து பரிவர்த்தனையால் நல்ல பலனைப் பெறலாம். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் உருவாகும்.
பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். மேலும் நீங்கள் போடும் திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
தீபாவளியில் உருவாகும் 5 ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகவும் நன்றாக இருக்கப் போகிறது. வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கலாம்.
நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் நீண்ட நாட்களாக உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அதை இந்த தீபாவளியில் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications