Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புதன் உருவாக்கும் தரித்திர யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க பல மோசமான சம்பவங்களை சந்திக்க போறாங்களாம்...!
ஜோதிடத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு கிரகத்திலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன, அது அனைத்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் உடல்நலம், சொத்து, வேலை மற்றும் குழந்தைகள் இந்த கிரக மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன.
புதன் பொதுவாக கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்காத சில பாதகமான மாற்றங்களை புதன் நமக்குத் தருகிறது. இந்த புதனின் பெயர்ச்சி கடுமையான நிதி இழப்பு மற்றும் பல மோசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். புதன் ஏப்ரல் 9-ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார்.

இதன் பலனாக சில ராசிகளில் தரித்திரயோகம் உருவாகிறது. இந்த பெயர்ச்சியால் அவர்களுக்கு ஏற்படும் முக்கிய விஷயம் நிதி இழப்பு. இது தவிர, மேலும் சில ராசிக்காரர்கள் பாதகமான விளைவுகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்க புதன் பெயர்ச்சியின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம்.
தரித்திரயோகம் என்றால் என்ன?
ஜாதகத்தில் லக்னாதிபதியும் ராகுவும் கூடி கடக ராசியில் அல்லது சந்திரனுடன் வேறு ராசிகளில் அமர்ந்தால் தரித்திரயோகம் உருவாகும். இந்த நேரத்தில், பெயருக்கு ஏற்ப வறுமை நடைமுறைக்கு வருகிறது. தடைபடாத வாழ்வில் ஏற்ற இறக்கம் கூடும்.இந்த யோகம் உள்ளவர்களுக்கு துரதிர்ஷ்டங்கள் தொடர்ச்சியாக வரும், தீராத கடன்களும் உண்டாகும். திருமண தோல்வி, குழந்தை இல்லாமை மற்றும் பொருளாதார பாதிப்பு இவை அனைத்தும் ஒருவரை பாதிக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு, புதனின் இந்தப் பெயர்ச்சி தொடக்கத்தில் சில சிறு அசௌகரியங்களைத் தரும். ஆனால் பின்னர் பிரச்சனைகளின் தீவிரம் அதிகரித்து அதன் மூலம் நெருக்கடிகள் அதிகமாகும். ஆனால் அதே நேரத்தில், அவர்கள் நீச்சபங்கார யோகத்தின் விளைவை அனுபவிக்கலாம்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. இருப்பினும், தொழில் தொடர்பான பிரச்சனைகள் மிதுன ராசியினரைத் தொடரும். அதுமட்டுமின்றி உடல்நல பிரச்சினைகளும் பாடாய்படுத்தும். தந்தையின் உடல்நிலையில் அதிக கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசியினருக்கு புதன் பெயர்ச்சி பல மோசமான பலன்களைத் தரும். உங்கள் நாட்களை தினமும் மோசமான சம்பவங்களுடன் தொடங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பல விஷயங்களில் சக பணியாளர்களுடனும், மேலதிகாரிகளுடனும் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில் புதிய வேலையைத் தேடுவது நல்லதல்ல.. அது உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தனுசு
புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல சாதகமற்ற நிலைமைகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் துணையின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கூட உங்களில் எதிர்மறையான மாற்றங்களோடுதான் வரும். பாதங்கள் மற்றும் தோல் போன்ற பாகங்கள் பெரும்பாலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தும்.
மன இறுக்கம் அதிகரித்து அதன் மூலம் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம். கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையில் மேலும் சவால்களையும் கடமைகளையும் ஏற்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

