Latest Updates
-
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 3 ராசிக்கு தொழில் ரீதியா அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கேரட்டும், ஜவ்வரிசியும் இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. பிள்ளைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Nag Panchami 2026: நாக பஞ்சமியில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
காரசாரமான சிக்கன் ஈரல் வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 7 அறிகுறிகள் அடிக்கடி தெரியுதா? அப்ப அது குடல்வால் புற்றுநோயின் அறிகுறியா இருக்கலாம்.. உஷார்.. -
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் கொண்டவர்களுடன் நட்பாக இருப்பது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் மிகச்சிறந்த தத்துவ ஞானியான சாணக்கியர் உலகளவில் மிகவும் பிரபலானவராக இருந்தார். அவர் சமூகவியல், பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றில் ஆழமான ஞானத்தைக் கொண்டிருந்தார். பழங்காலம் போலவே இப்போதும் சாணக்கியரின் கொள்கைகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அவரது வார்த்தைகள் வாழ்க்கையில் வெற்றிக்காக போராட மக்களை ஊக்குவிக்கின்றன.
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் அவை மனிதர்களுக்கு வாழ்க்கையின் உண்மையை உணர்த்துகின்றன. ஒருவர் சாணக்கிய நீதியில் கூறப்படும் விஷயங்களை மனதில் வைத்திருந்தால், வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும், ஒருவர் வெற்றிகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்த முடியும்.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்ட வகை மக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படிப்பட்டவர்களுடனான நட்பு உங்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
பாவம் செய்பவர்களுடன் பழகாதீர்கள்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பாவிகளுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று விளக்குகிறார். அப்படிப்பட்ட ஒருவருடனான நட்பு எப்போது வேண்டுமானாலும் உங்களை ஆபத்தில் சிக்க வைக்கலாம். பாவம் செய்பவர் உங்கள் குடும்பத்திற்கு நிம்மதியைத் தரமாட்டார். இதன் காரணமாக, உங்கள் பிரச்சினைகள் எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்.
தவறான பழக்கம் உள்ளவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, தவறான பழக்கம் உள்ளவர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். சாணக்கிய நீதியின் படி, கெட்ட பழக்கங்கள் உள்ள ஒருவருடனான நட்பு உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது. அத்தகையவர்களின் கெட்ட பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையையும் பாதிக்கும். தவறான பழக்கம் உள்ள நபர்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் கெட்ட காரியங்களைச் செய்யலாம்.
மோசமான இடங்களில் வாழ்பவர்கள்
சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கெட்ட இடத்தில் அதாவது மோசமான இடத்தில் வாழும் ஒருவருடன் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். ஒரு மோசமான இடத்தில் வாழ்பவர் அந்த இடத்தின் தீமைகளிலிருந்து வெகுகாலம் விலகி இருக்க முடியாது. அத்தகைய நபருடனான நட்பு உங்கள் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எனவே நல்லவர்கள் மத்தியில் நல்ல இடத்தில் வாழ்பவர்களுடன் மட்டுமே நட்பு கொள்ளுங்கள்.
வயதில் மூத்தவர்களை மதிக்காதவர்கள்
சாணக்கியர் தனது நீதி நூலில் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளை மதிக்காத, பெரியவர்களை நன்றாக நடத்தாத ஒருவருடன் ஒருபோதும் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறுகிறார். தனது பெற்றோரைக் கூட மதிக்க முடியாத ஒருவர் எப்படி இன்னொருவருடன் ஆரோக்கியமான நட்பைப் பேண முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
பேராசைக் கொண்டவர்கள்
சாணக்கிய நீதியின் படி, சுயநலவாதிகள் மற்றும் பேராசை கொண்டவர்களிடமிருந்து எப்போதும் விலகியிருக்க வேண்டும். அவர்கள் எப்போதும் தங்கள் நலனைப் பற்றியே சிந்திக்கிறார்கள். சுயநலக்காரர்கள் தங்கள் நலனுக்காக எதையும் செய்வார்கள். அத்தகையவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எனவே நீங்கள் பேராசை மற்றும் சுயநல நண்பர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
