Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையில் இந்த 5 விஷயங்கள் இருந்தால் நீங்க கடவுளுக்கு ரொம்ப பிரியமானவராம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். அவரது கொள்கைகளின் வலிமையால், ஒரு சாமானியராக இருந்த சந்திரகுப்தர், மௌரியப் பேரரசின் மாமன்னராக மாறினார். சாணக்கியரின் கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக் கூடியவை. இன்றும் சாணக்கியரின் கொள்கைகளும், சாணக்கிய நீதியும் பிரபலமாக இருக்க இதுவே காரணம்.
ஒரு மனிதன் பெரிய மனிதராக மாறுவது அவர்களின் குணத்தால் மட்டுல்ல, அவர்களின் செயல்களால் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு மனிதனின் செயல்களே அவருடைய வாழ்க்கை நிலையையும் திசையையும் தீர்மானிக்கிறது.

ஒரு மனிதன் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலனை நிகழ்காலத்தில் மட்டுமல்ல, அடுத்த ஜென்மத்திலும் பெறுகிறார். வாழ்க்கையில் சில விஷயங்களை பெற்றவர்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நல்ல வாழ்க்கைத்துணையைப் பெற்றவர்கள்
நல்ல புரிதலுடைய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கக்கூடிய வாழ்க்கைத்துணை அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. போன ஜென்மத்தில் செய்த நற்செயல்களின் அடிப்படையில் தான் இந்த வரம் கிடைக்கிறது. நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணையை பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அதேசமயம் உங்கள் வாழ்க்கைத்துணை எப்போதும் சண்டையிடுவராக இருந்தால், வீடு இரவும் பகலும் குழப்பமாக இருக்கும். சாணக்கியர் கூறுகிறார், பெண்களை மதிப்பவர்கள், அவர்களின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் அவர்களுடன் இருப்பவர்கள், ஒவ்வொரு பிறவியிலும் புண்ணிய பலன்களைப் பெறுவார்கள்.
நிறைவான செல்வம்
பணம் இல்லாத வாழ்க்கை நரகம் போன்றது, எனவே மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அனைவருக்கும் பணம் வேண்டும். சிலரிடம் பணம் குறைவாகவும் சிலரிடம் அதிகமாகவும் உள்ளது. ஆனால், பணத்தைச் சரியாகப் பயன்படுத்தும் திறன் எல்லாருக்கும் இருப்பதில்லை.
லட்சுமி தேவியை ஒருபோதும் அவமரியாதை செய்யாமல் செல்வத்தின் மதிப்பைப் புரிந்துகொள்பவர்கள் மட்டுமே பணத்தை சரியாகப் பயன்படுத்திய பலனைப் பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். நீங்கள் நிதி விஷயத்தில் தன்னிறைவு பெற்றவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். அத்தகையவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சாணக்கியர் நம்பினார்.
தாராள மனப்பான்மை
நிறைந்த மனதுடன் தானம் கொடுப்பது ஏழைகளையும் பணக்காரர் ஆக்குகிறது. தொண்டு செய்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வேகமாக முன்னேறுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். ஏனெனில் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதில்லை.
மற்றவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. தர்மம் செய்பவர்கள் பிறர் வாழ்க்கையை அழகுபடுத்துவது மட்டுமின்றி, தன் குடும்பத்தையும் வளமாக்குகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இரண்டு வேலை உணவு உண்பவர்கள்
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைப் பெறுபவர் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால் நம் உலகில் தினம்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை உணவுக் கூட கிடைக்காதவர்கள் உலகில் ஏராளம். அந்தச் சூழலில், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைத் தவறாமல் சாப்பிடும் ஒருவர் தன்னை அதிர்ஷ்டசாலி என்று கருத வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
தொழில் திறமை
தொழில் நல்ல திறமை கொண்ட ஒரு நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் ஒருவர் தன் திறமையை நினைத்து ஒருபோதும் தற்பெருமை கொள்ளவே கூடாது. ஏனெனில் நமது விதி எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று சாணக்கியர் எச்சரித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
