Latest Updates
-
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!
சாணக்கிய நீதி படி இந்த 5 ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுபவர்கள் நிம்மதியாகவே வாழமுடியதாம்... ஜாக்கிரதை...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியா மட்டுமின்றி உலகின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். வாழ்க்கையின் அனைத்து துறைகளைப் பற்றியும் அவருக்கு ஆழமான புரிதல் இருந்தது. அவர்களின் அறிவுரைகள் இன்றும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. வாழ்க்கையில் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை அடைவதற்கான பல ரகசியங்களை ஆச்சார்ய சாணக்கியர் சாணக்கிய நீதியில் வெளிப்படுத்தியுள்ளார்.
வாழ்க்கையில் ஒருவர் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்களைப் பற்றி சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பல வகையான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வாழ்க்கையில் சில விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும். சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் வாழ்க்கையில் யாரிடமும் சொல்லக்கூடாத சில ரகசியங்கள் உள்ளன. அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உங்களின் பலவீனம்
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமாவது சொன்னால், அது உங்களுக்கே எதிராக மாறலாம். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் தனது பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. உங்கள் பலவீனத்தை மற்றவர்கள் தெரிந்து கொண்டால், அவர்கள் அவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்தி உங்களை வீழ்த்தி விடலாம்.
குடும்பம் பற்றிய ரகசியங்கள்
உங்கள் குடும்பத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், உங்களின் குடும்ப விஷயங்களைப் பற்றி தெரியாமல் கூட யாரிடமும் சொல்லக்கூடாது. இதன் காரணமாக, நீங்களும் உங்கள் குடும்பமும் அவமானத்தை சந்திக்க நேரிடலாம். உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை மற்றவர்கள் தேவையில்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உங்கள் குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கலாம்.
சோகத்திற்கான காரணம்
பொதுவாக மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, மக்கள் தங்கள் துக்கத்தை நண்பர்கள் அல்லது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் சாணக்கிய நீதியின்படி, இதைச் செய்வது தவறு. நாம் நம் துயரங்களை யாரிடமாவது பகிர்ந்து கொண்டால், மற்றவர்கள் அதை கேலி செய்யலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி சாணக்கிய நீதியின் படி, நீங்கள் நல்லவர் என்று நினைக்கும் பலர் உங்கள் தோல்வியடைய வேண்டுமென்று விரும்புவார்கள். அதனால் உங்கள் துக்கங்களை உள்ளே வைத்திருப்பது நல்லது. எனவே உங்கள் பிரச்சினைகளை முடிந்தவரை நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்.
மனைவியின் குணங்கள்
சாணக்கிய நீதியின்படி, ஒரு கணவன் தன் மனைவியைப் பற்றிய மோசமான விஷயங்களை ஒருபோதும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இப்படி செய்வது உங்கள் மனைவியை அவமானப்படுத்தக்கூடும். மேலும், இதனால் அவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வீட்டு விஷயங்களை வீட்டிற்குள் வைத்திருப்பவரே உண்மையான புத்திசாலி.
உங்களுக்குள் நடக்கும் சண்டைகள், துக்கங்கள் மற்றும் கோபத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொன்னால், எதிர்காலத்தில் நீங்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். பெண்களோ அல்லது ஆண்களோ தங்கள் துணையைப் பற்றி மற்றவர்களிடம் ஒருபோதும் தவறாகப் பேசக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
நிதிநிலை
சாணக்கிய நீதியின்படி, ஒருவர் பணத்தை இழந்த விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பெரும்பாலும் நிதி இழப்பின் போது பெரும்பாலான மக்கள் சோகமாகி மற்றவர்களிடம் கூறுகிறார்கள். இதைச் செய்வது மிகவும் தவறு. ஏனென்றால், உங்கள் நிதி நிலைமை மோசமடைந்து வருவதாக யாராவது அறிந்தால், யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் நிதிநிலை மற்றும் கடன் தொடர்பான விஷயங்கள் எப்போதும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்.



Click it and Unblock the Notifications
