Latest Updates
-
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஒருடைம் இந்த க்ரீமி பாலக் பன்னீர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் அல்ட்டிமேட்டா இருக்கும்... -
பிளாஸ்டிக் நாற்காலிகளின் நடுவில் ஏன் ஒரு துளை உள்ளது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், 1 கப் மைதா மாவும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது!
சாணக்கிய நீதி படி காக்காவிடம் இருக்கும் இந்த 5 குணங்கள் உங்ககிட்ட இருந்தா நீங்கதான் உண்மையான ராஜாவாம்...!
Chanakya Niti: உலகின் மிகச்சிறந் அறிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் சாணக்கியர். மனித வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் தனது கொள்கைகளில் கூறியுள்ளார். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் மனிதன் தனது வாழ்க்கையில் வெற்றிக்கான பல வழிகளைத் திறக்க முடியும்.
பறவைகள் மற்றும் விலங்குகளின் சில குணங்களை சாணக்கியர் தனது சாணக்கிய நீதி குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு மனிதன் வாழ்க்கையில் தன்னுடையஅனைத்து ஆசைகளை நிறைவேற்ற முடியும்.

சாணக்கியரின் கூற்றுப்படி, சில பறவைகளிடமிருந்து சில குணாதிசயங்களைக் கற்றுக்கொள்வது ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். மனிதர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கிய பறவை காகம். காகத்தின் வாழ்க்கையிலிருந்து மனிதன் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்கிறார் சாணக்கியர்.
காகத்திடம் இருந்து இந்த 5 குணங்களை ஒரு மனிதன் கற்றுக்கொண்டால் அவர்து வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும் என்கிறார் சாணக்கியர்.
பிடிவாதம்
காகம் மிகவும் பிடிவாதமான பறவை. எத்தனை தடைகள் வந்தாலும் நினைத்த காரியத்தை அது நிறைவேற்றும். அதேபோல, ஒருவர் தனது வாழ்க்கையில் பிடிவாதமாக இருந்து, தனது இலக்கை அடைய இரவும் பகலும் உழைத்தால், அவர் நிச்சயமாக வாழ்க்கையில் உயரங்களை வெல்ல முடியும்.
எளிதில் யாரையும் நம்பாதிருப்பது
காகம் யாரையும் எளிதில் நம்பாத பறவை. சுற்றுச்சூழலை கண்காணித்து பாதுகாப்பாக உணர்ந்தால் தான் நினைத்த காரியத்தைச் செய்யத் துணியும். மனிதர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்கிறார் சாணக்கியர்.
காக்கையைப் போல் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடாது. யோசிக்காமல் யாரையாவது நம்பி ஒரு வேலையில் குதித்தால் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் ஒருவரை நம்புவதற்கு முன், நீங்கள் அவர்களை முழுமையாக ஆராய வேண்டும்.
எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது
காகம் எந்த இடத்தில் இருந்தாலும் மிகவும் கவனமாக அமர்ந்திருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். காகம் எதிர்கால நிகழ்வுகளை கணிக்கும் திறன் கொண்ட பறவை என்று கூறப்படுகிறது. எங்கிருந்து ஆபத்து வருகிறது என்று காகம் எப்போதும் கவனமாக இருக்கிறது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதேபோல், மனிதனும் தன் சுற்றுப்புறத்தை அறிந்து முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள சூழல் என்ன என்பதை அவர் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றியை அடைய முடியும்.
தொலைநோக்கு பார்வை
காகம் மிகவும் தொலைநோக்கு பார்வை கொண்ட பறவை. அது முன் கூட்டியே உணவை சேகரித்து பஞ்ச காலத்திற்காக கூண்டில் அடைத்து வைக்கிறது. மழை பெய்யும் போதோ அல்லது உணவு கிடைக்காத போதோ அந்த உணவு பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனும் இந்த முறையைப் பின்பற்ற வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து எச்சரிக்கையாக இருங்கள். இப்படியாக, ஒரு மனிதன் தன் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் அல்லது அதற்கு முன்பாக முடித்துவிட்டால், கடைசி நிமிடம் வரை அவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
பொறுமை
வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் என்று சாணக்கியர் கூறியுள்ளார். பொறுமை உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். காகம் கூட கடைசி நேரம் வரை பொறுமையாக உட்கார்ந்து, சரியான நேரம் வந்த பிறகு தான் செயல்படும்.



Click it and Unblock the Notifications

