Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சாணக்கிய நீதி இந்த 4 பழக்கங்கள் இருப்பவர்கள் வாழ்க்கை முழுக்க நிம்மதி இல்லாம கஷ்டப்பட்டுதான் வாழணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானி. சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்லத் தூண்டுவதற்கு இயற்றப்பட்டது. அவர் இராஜதந்திரம் மற்றும் அரசியலில் நிபுணராகக் கருதப்படுகிறார். அவர் தரும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளலாம். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒரு நபரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரிடம் குறிப்பிட்ட பழக்கங்கள் இருந்தால் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை விட்டுவிட்டால் அல்லது மாற்றினால், அவர் அதிக இழப்புகளை சந்திக்க மாட்டார். அந்த பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கட்டுப்பாடில்லாத செலவு
ஒருவர் எப்போதும் தங்கள் தேவைக்கு மீறி செல்வு செய்யக்கூடாது என்று சாணக்கிய கூறுகிறார். அதிகமாக செலவு செய்பவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கத்தால் ஒருவருக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது அது வேறு பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். பணம் இல்லாதவர்கள் எப்போதும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும்.
பலவீனத்தை வெளியே சொல்பவர்கள்
உங்கள் பலவீனத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். கவலையில் இருக்கும் ஒரு நபர் தனது பலவீனத்தை தனக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் பலர் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியற்ற நிலையையும், பாதுகாப்பின்மையையும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் எப்போதும் ஒப்பிட்டு பார்ப்பது
சாணக்கியரின் கூற்றுப்படி, மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்ப்பவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பவர் வாழ்க்கையில் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு தன் வாழ்க்கையையே அழித்துக் கொள்கிறார்.
சோம்பேறித்தனம்
சோம்பல் உள்ளவர்கள் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி அடைய முடியாது. ஏனெனில் சோம்பேறித்தனமே முன்னேற்றத்திற்கான ஒரே எதிரி. சோம்பேறித்தனம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது என்கிறார் சாணக்கியர். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்று ஒத்திவைப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.
கஷ்டத்தை தாங்கும் குணங்கள்
பொறுமை
அதிக பொறுமை உள்ள ஒரு நபர் மிகவும் கடினமான நேரங்களைக் கூட எளிதில் சமாளிக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. எனவே, ஒரு நபர் எப்போதும் தனது நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.
பணம்
துக்கத்தின் போது பணம் ஒரு நபரைப் பாதுகாக்கும் என்று சாணக்கியர் நம்புகிறார். எனவே ஒவ்வொருவரும் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். சம்பாதிக்கும் பழக்கம் உள்ளவர் பற்றாக்குறை காலங்களை எளிதில் சமாளிப்பார்.
முடிவெடுக்கும் திறன்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். அவசரமாக அல்லது மனக்கிளர்ச்சியுடன் எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.



Click it and Unblock the Notifications
