Latest Updates
-
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்!
சாணக்கிய நீதி படி இந்த 4 பேருடன் சண்டை போடுவது சொந்த காசுல சூனியம் வைச்சுக்குற மாதிரியாம்...!
Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், தத்துவவாதி, இராஜதந்திரி மற்றும் அரசியலில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் தனது கொள்கைகள் மூலம் சமுதாயத்தின் நன்மைக்காக பல விஷயங்களை செய்துள்ளார். இவர் கூறும் கொள்கைகள் சற்று கடினமானதாக இருந்தாலும், அதனை பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனையிலிருந்தும் விடுபட்டு வெற்றிப் படிக்கட்டில் ஏறலாம்.

சாணக்கியர் தனது சாணக்கிய நீதி மூலம் மனித குலத்தின் நலனுக்காக சில முக்கியமான விஷயங்களை வழங்கியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, பலரால் வாழ்க்கையில் வெற்றி பெற முடிவதில்லை. கடினமான சூழ்நிலை வரும்போது, பெரும்பாலானோர் இலக்கை பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். சிரமங்களுக்கு பயந்து இலக்கை விட்டுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மாட்டார்கள் என்கிறார் சாணக்கியர்.
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, ஒரு புத்திசாலி நபர் தனது நல்லது கெட்டது பற்றிய சரியான அறிவைப் பெற்றிருக்கிறார். அவர் தனது பிரகாசமான எதிர்காலத்திற்காக படித்து தனது இலக்கை அடைய கடினமாக உழைக்கிறார். ஆனால் சில சமயங்களில் தன்னை அறியாமலேயே சில தவறுகளைச் செய்துவிடுவார். எனவே அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருந்தவேண்டியிருக்கும். மனிதர்கள் வளமான எதிர்காலத்திற்கு சிலருடன் எப்போதும் சண்டையிடக்கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
குடும்ப உறுப்பினர்கள்
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். நீங்கள் கெட்ட நேரங்களை எதிர்கொள்ளும் போது அல்லது ஏதாவது உதவி தேவைப்படும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள். தனக்குப் பிடித்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு ஒருவரால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
முட்டாள்கள்
ஒருவர் புத்திசாலித்தனம் இல்லாதவராக இருந்தால் அல்லது அவர் மற்றவரைப் போல முதிர்ச்சியற்றவராக இருந்தால், அத்தகைய நபருடன் ஒருபோதும் சண்டையிட வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அப்படிப்பட்டவர்களுடன் வாக்குவாதம் செய்வது அல்லது சண்டை போடுவது உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
ஒரு முட்டாள் ஒருவர் யாருடைய பேச்சையும் கேட்காமல், எப்போதும் தன் எண்ணத்தை மட்டுமே சொல்வார் மற்றும் செய்வார். எனவே அத்தகையவர்களிடமிருந்து நீங்கள் எப்போதும் தூரத்தை வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுடன் சண்டை போடுவதை விட, அவர்கள் தேவைப்படும் போது அவர்களுக்கு உதவுவது நல்லது என்கிறார் சாணக்கியர்.
நண்பர்கள்
ஒருவரது வாழ்வில் அனைத்து இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்பவர் நண்பர் மட்டுமே என்று சொல்லப்படுகிறது. உங்களைப் பற்றிய அனைத்து ரகசியங்களும் அவருக்குத் தெரியும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நண்பருடன் நீங்கள் சண்டையிட்டால், அவர்கள் உங்களுக்கு எதிராக உங்கள் ரகசியங்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே உங்கள் நண்பருடன் சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு நண்பரைப் பற்றி நீங்கள் அதிருப்தி அடைந்தாலும், வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நண்பர்களை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். ஒரு நண்பரை இழப்பது உங்கள் வாழ்க்கையின் ஒரு உற்ற துணையை இழப்பது போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆசிரியர்
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குருவின் பங்கு மிக முக்கியமானது. ஒருவரை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்வது போல நம் மனதில் உள்ள அறியாமை என்னும் ஒளியை அகற்றி அறிவின் பக்கம் அழைத்துச் செல்பவர் குரு ஒருவரே. எப்போதும் சரியான வழிகாட்டுதலைக் கொடுத்து இலக்கை நோக்கிச் அழைத்துச் செல்வது குருதான். குரு இல்லாமல் ஒருவர் வாழ்வில் சரியான அறிவை பெறவே முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குருவிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்தால் அது உங்கள் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
