Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சாணக்கிய நீதி படி இந்த 5 தவறுகளை பண்றவங்க வாழ்க்கையில் சீக்கிரம் ஏழையாகி விடுவார்களாம்... இனிமே பண்ணாதீங்க...!
Chanakya Niti: தற்போதைய அவரச உலகில் அடிப்படைத் தேவைகளுக்கும் சரி, ஆடம்பரத் தேவைகளுக்கும் சரி பணம் மிகவும் அவசியமானதாகும். சிறந்த பொருளாதார நிபுணராக அறியப்பட்ட சாணக்கியர், தனது சாணக்கிய நீதியில் செல்வத்தைப் பற்றி பல விஷயங்களைக் கூறியுள்ளார். அதன்படி சில விஷயங்களில் கவனம் செலுத்தாவிட்டால், பணக்காரர் கூட ஏழையாகிவிடலாம் என்கிறார் சாணக்கியர்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரை வறுமைக்கு அழைத்துச் செல்லும் பல காரணங்கள் உள்ளன. ஒரு நபரின் நிதி அழிவுக்கு வழிவகுக்கும் சில காரணிகளை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார், மேலும் பணத்தைச் சரியாகப் பயன்படுத்தவும் சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பணத்தை ஒருபோதும் பூட்டி வைக்கக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு பணக்காரர் தனது பணத்தை எப்போதும் பெட்டியில் பூட்டி வைக்கக்கூடாது. மாறாக பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்ய வேண்டும். பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு அதன் மதிப்பு நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்காது. பணத்தின் மதிப்பு காலப்போக்கில் அதனை இழக்கத் தொடங்குகிறது. மறுபுறம், பணத்தை ஒரு நல்ல இடத்தில் முதலீடு செய்வது அதனை பலமடங்கு அதிகரிக்கிறது.
அதர்ம வழியில் செல்லக்கூடாது
சாணக்கியரின் கூற்றுப்படி, அநீதியின் பாதையைப் பின்பற்றும் நபரிடம் பணம் ஒருபோதும் தங்காது. அதர்ம வழியில் செல்பவர்கள் அதிக பணம் பெற ஆரம்பித்தால், அவர்கள் விரைவில் அழிவின் பாதையை செல்வது நிச்சயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிக்கனமாக தானம் செய்ய வேண்டும்
தானம் செய்வது மிகவும் நல்ல விஷயம். ஆனால் சாணக்கியர் ஒரு மனிதன் தனது சக்திக்கு ஏற்ப மட்டுமே தர்மம் செய்ய வேண்டும் என்கிறார். வருமானத்திற்கு அதிகமாக தானம் செய்வது அவர்களை ஏழையாக்கும். எனவே எப்போதும் உங்கள் வருமானத்தை மனதில் வைத்து மட்டுமே செலவு செய்யுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைச் சேமித்து, அதற்கேற்ப மற்றவர்களுக்கு உதவுங்கள்.
அதிக செலவு செய்யக்கூடாது
உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பரவாயில்லை என்கிறார் சாணக்கியர். அதிக பணம் சம்பாதிப்பது உங்களை பணக்காரர்களாக மாற்றாது. பணத்தை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் செல்வத்தின் முக்கியத்துவமும் குறைந்துவிடும் என்கிறார் சாணக்கியர்.
தற்பெருமை கொள்ளக்கூடாது
சாணக்கியர், ஒருவர் தன்னிடம் இருக்கும் அதிகளவு பணத்தைப் பற்றி பெருமை கொள்ளக் கூடாது என்றும், எப்போதும் பணிவுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். பணம் வரும்போது அகங்காரத்தை தங்கள் மனதில் நுழைய விடுபவர்கள் விரைவில் ஏழையாகி விடுவார்கள. ஈகோ உங்கள் புத்தியைக் கெடுக்கிறது. இதன் காரணமாக ஒருவரின் செல்வம் விரைவில் அழிந்து விடுகிறது. எனவே ஆணவத்தைத் தவிர்த்து, உங்கள் நடத்தையில் பணிவுடன் இருங்கள்.



Click it and Unblock the Notifications












