Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
திருப்பதியில் பக்தர்கள் முடி காணிக்கை செய்வது ஏன் தெரியுமா? சுவராஸ்யமான விஷயம் இதுதான்..!
உலகளவில் பணக்கார கோவில்களில் திருமலை திருப்பதி ஆலயமும் ஒன்று. ஸ்ரீஹரி விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் இந்த ஆலயத்தில் வணங்கப்படுகிறார். அந்த விஷ்ணுவே இங்கு வெங்கடேஸ்வரர் வடிவில் வசிப்பதாக மக்களால் நம்பப்படுகிறது.
இந்த புனிதமான கோவிலில் பல சடங்குகள் மற்றும் மரபுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று தலை முடி காணிக்கை செய்வது ஆகும். இங்கு முடி காணிக்கை செய்வது ஏன்? அதன் முக்கியத்துவம் என்ன? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

திருப்பதியில் முடி காணிக்கை ஏன் கொடுக்கப்படுகிறது..?
திருப்பதி கோயிலில் முடி காணிக்கை செய்யும் பாரம்பரியம் 12ம் நூற்றாண்டில் இருந்தே வருகிறது. புராணத்தின் படி, இளவரசி பத்மாவதி மற்றும் பக்தர்கள் குழு வெங்கடேஸ்வராவின் ஆசீர்வாதத்தைப் பெற திருப்பதிக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை வழியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இளவரசி உதவிக்காக வெங்கடேசப் பெருமானிடம் பிரார்த்தனை செய்து, தான் காப்பாற்றப்பட்டால் தனது தலைமுடியை பலியாக கொடுப்பதாக வேண்டிக்கொண்டாள்.. அவளின் வேண்டுதலைக் கேட்ட வெங்கடேஸ்வரர் அவளைக் காப்பாற்ற வந்தார்.
உடனே அதன் நன்றியுணர்வாக, இளவரசி தனது தலைமுடியை வெட்டி ஏழுமலையானுக்கு வழங்கினார். இந்தச் செயல் மற்ற பக்தர்களையும் தங்கள் தலைமுடியை காணிக்கையாக அளிக்க தூண்டியது. இந்த திருப்பதி பாலாஜி முடி தானம் செய்த கதையால் பக்தர்கள் ஈர்க்கப்பட்டு, முடி தானம் செய்ய தொடங்கினர்.. தற்போது அதுவே ஒரு பெரிய சடங்காகிவிட்டது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த சடங்கை தவறாமல் செய்து வருகின்றனர்..
முடி தானத்தின் பின்னணியில் உள்ள மற்றொரு புராணக்கதை
ஸ்வாமி ஏழுமலையான் பத்மாவதியை திருமண மரபுப்படி திருமணம் செய்தபோது, முன் பணம் செலுத்துதல் திருமண கட்டணம் கட்டாயமாக்கப்பட்டது. இதனாலேயே, குபேரனின் கடனை அடைப்பதாக வெங்கடேஸ்வரா உறுதியளிக்கிறார். அதே சமயம் வெங்கடேசப் பெருமானின் கடனை அடைப்பவர் யார் உதவுகிறார்களோ அவருடைய செல்வமும் ஆரோக்கியமும் 10 மடங்கு பெருகும் என்று லட்சுமி தேவி கூறியுள்ளார். இந்த காரணத்திற்காக பக்தர்கள் இந்த சன்னிதானத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் தானம் செய்கிறார்கள். அதானாலயே பணம் ,பொருள் ஆகியவற்றைக் காணிக்கை அளிப்பதைவிட முடி காணிக்கை அளிப்பது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
பக்தர்கள் முடியை காணிக்கை செய்வதன் முக்கியத்துவம் என்ன?
திருப்பதியில் பக்தர்கள் முடி தானம் செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. வெங்கடேசப் பெருமானிடம் தங்கள் பக்தியைக் காட்டுவதற்கு முக்கியக் காரணங்களில் இதுவும் ஒன்று. தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவதன் மூலம், தெய்வத்திடம் சரணடைவதற்கான செயலை செய்கிறோம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். பலர் தங்கள் விருப்பம் நிறைவேறினால் தங்கள் தலைமுடியைக் காணிக்கையாக்குவதாக வேண்டிக்கொள்கின்றனர்.. மேலும் முடி காணிக்கை என்பது தன்னைத் தானே சுத்திகரிக்கும் ஒரு வழியாகவும் கருதப்படுகிறது.
திருப்பதியில் முடி தானம்
முடி தானம் செய்ய விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள பல முடி தான மையங்களுக்குச் செல்லலாம். இந்த மையங்கள் முடி தானம் செய்யும் செயல்முறைக்கு சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழலை வழங்குகின்றன. இந்த செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், பக்தர்களின் தலைமுடியைக் கழுவி, சிக்கல்கள் அல்லது முடிச்சுகளை அகற்ற வேண்டும். பின்னர், முடி வெட்டப்பட்டு, ஒரு துணியில் சேகரிக்கப்பட்டு, கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.. கோயில் அதிகாரிகள் தானமாக அளிக்கப்பட்ட முடியை விக் மற்றும் முடி நீட்டிப்பு செய்ய பயன்படுத்துகின்றனர், பின்னர் அவை கோயிலின் தொண்டு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்ட விற்கப்படுகின்றன. திருப்பதி தேவஸ்தானம் குறைந்த பட்சமாக ரூ. 143.9 டன் முடியை ஏலம் விட்டு 11.17 கோடி வருமானத்தை பெற்று வருகிறது.. இது வருடா வருடம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது..
திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதன் பலன்கள் என்ன?
1. திருப்பதி பாலாஜி கோவிலில் ஒருவருக்கு மெட்டை அடித்து முடி தானம் செய்தால் அவர் சம்பாதித்த பணத்தில் 10 மடங்கு அதிகமான பணம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனை இன்றும் பக்தர்கள் தவறாமல் செய்து வருகின்றனர்..
2. அதுமட்டுமல்லாமல் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.
3. விஷ்ணுவின் அருள் நேரடியாக கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்..
4. மேலும் இத்தலத்தில் யார் தன் முடியை காணிக்கை செய்கின்றாரோ, அவரது அனைத்து பாவங்களும் நீங்கும், அவரது வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.
5. இதன் காரணமாகவே ஏழுமலையானை பக்தர்கள் திருப்பதிக்கு வரும்போதெல்லாம் தங்கள் முடியை தானமாக வழங்குகின்றனர். இதனால் பாவங்கள் நீங்கி லக்ஷ்மி வெங்கடேஸ்வரரின் அருளைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications













