Latest Updates
-
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம் -
மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!
பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் பூமியில் நடக்கப்போகும் 4 ஆபத்தான பேரழிவுகள் என்னென்ன தெரியுமா?
எதிர்காலம் பற்றி தெரிந்து கொள்வது என்பது எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். இப்படி எதிர்காலத்தைப் பற்றி கணித்துக் கூறுபவர்கள் எப்போதும் மிகப்பெரிய புகழை அடைவார்கள். அப்படி தனது தீர்க்கதரிசனங்களுக்காக உலகப்புகழ் பெற்றவர்தான் பாபா வாங்கா.
'பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் பாபா வாங்கா, அவரது எதிர்காலம் பற்றிய தீர்க்கதரிசனங்களுக்காக புகழ் பெற்றவர். இளவரசி டயானாவின் மரணம் முதல் கோவிட்-19 தொற்றுநோய் வரை, அவர் அனைத்தையும் சரியாக கணித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டு பிறக்கும்போதும் அந்த வருடத்திற்கான பாபா வாங்காவின் கணிப்பு என்னவாக இருக்கும் என்றுதான் பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

2026-ஆம் ஆண்டுக்கான பாபா வாங்காவின் கணிப்புகள் கடந்த கால கணிப்புகளை விட மிகவும் ஆபத்தானதாகவும், அச்சறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. வரப்போகிற 2026-ல் உலகில் என்னென்ன ஆபத்தான சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக பாபா வாங்கா கணித்துள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
2026-ல் நடக்கப்போகும் பேரழிவு
பாபா வாங்கா 2026-இல் பூமியில் பல பேரழிவுகள் நடைபெறலாம் என்று கணித்துள்ளார். பூமியின் மேற்பரப்பில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கைப் பாதிக்கும் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களை அவர் கணித்துள்ளார். இது திரைப்படங்களில் வரும் பூமியின் பேரழிவு போன்றதல்ல, இது கற்பனைக்கு எட்டாத வகையில் உண்மையானது. காலநிலை மாற்றம் ஏற்கனவே உலகிற்கு ஆபத்தாக மாறிவரும் சூழலில், இது போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும், இந்த தீர்க்கதரிசனம் இப்போது அனைவரையும் அச்சுறுத்துவதாக மாறியுள்ளது.
உலகப்போர் அச்சுறுத்தல்கள்
பூமியில் நடக்கப்போகும் பேரழிவுக்கு சில அரசியல் சூழல்களும் காரணமாக இருக்கலாம். வாங்காவின் கூற்றுப்படி, உலகம் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் உள்ளது. உலக நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், தைவானை சீனா கைப்பற்றுவதற்கான ஆபத்து மற்றும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நேரடி மோதல் ஆகியவை வரவிருக்கும் ஆண்டில் உலகில் மிகவும் பதட்டமான சூழலை உருவாக்கலாம். மேலும் பல நாடுகளிடையே நிலவி வரும் அதிகாரப் போட்டிகள் உலகை ஆபத்தான நிலைக்கு தள்ளியுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் ஆபத்து
2026 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவில் (AI) குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படக்கூடும் என்றும், இது மனித கட்டுப்பாட்டை மீறி, அன்றாட வாழ்க்கையை கடந்த காலங்களில் இல்லாத வகையில் பாதிக்கக்கூடும் என்றும் பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதால், அவரது கணிப்பு AI நெறிமுறைகள், பாதுகாப்பு மற்றும் அனைத்து வேலைகளுக்கும்இயந்திரங்களை அதிகமாக நம்பியிருத்தல் போன்ற அச்சுறுத்தல்களை அதிகரிக்கக்கூடும்.
ஏலியன்களின் படையெடுப்பு
2026-ல் ஏற்கனவே உள்ள ஆபத்துகளை மேலும் அதிகரிக்கும் வகையில், பாபா வாங்கா 2026 நவம்பரில் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் ஒரு பெரிய விண்கலம் பற்றி அவர் கணித்துள்ளார், இந்த கூற்று மனிதர்களிடையே ஆர்வத்தையும், பயத்தையும் தூண்டியுள்ளது. உடனடி வேற்றுகிரகவாசி தொடர்பு குறித்து உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லையென்றாலும், இந்தத் தீர்க்கதரிசனம் பிரபஞ்சம் மற்றும் பூமிக்கு அப்பால் அறிவார்ந்த வாழ்க்கையின் சாத்தியக்கூறுகள் குறித்த தொடர்ச்சியான ஆர்வத்தைத் தூண்டுகிறது.



Click it and Unblock the Notifications
