Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
2024-ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் புற்றுநோய்க்கான மருந்து பற்றிய கணிப்பு நடக்கப்போகுது...
Baba Vanga 2024 Predictions: உலகில் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஏராளமான தீர்க்கத்தரசிகள் உள்ளனர். அதில் பாபா வாங்கா மற்றும் நோஸ்ட்ரடாமஸ் ஆகியோரின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனெனில் இவர்கள் இருவரது கணிப்புக்கள் பல நடந்துள்ளன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் நடக்கவிருப்பதை பாபா வாங்காவும், நோஸ்ட்ரடாமஸ் அவர்களும் கணித்துள்ளனர்.
நாம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதத்தில் தான் இருந்தாலும், பாபா வாங்கா 2024-ல் நடக்கவிருப்பதாக கணித்த ஒரு கணிப்பு நடக்கவுள்ளதாக பேசப்படுகிறது. அது என்னவெனில் 2024 ஆம் ஆண்டில் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களான புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்றவற்றிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதாக பாபா வாங்கா கணித்திருந்தார்.

புற்றுநோய் தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படுமா?
ரஷ்ய அதிபர் புடின் காதலர் தினத்தன்று ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால், ரஷ்யாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மிகவும் கொடிய நோயான புற்றுநோய்க்கு தடுப்பூசிகளை தயாரிப்பதில் மிகவும் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசிகள் விரைவில் தயாராகி புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படலாம். புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவும் புதிய மருந்துகளுடன் ரஷ்யா விரைவில் வெளியிடும் என்று புடின் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் புடின் அறிவித்தார். ஆனால் இந்த புற்றுநோய் தடுப்பூசி எந்த வகையான புற்றுநோய்களுக்கு வேலை செய்யும் மற்றும் அது எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
2024-ல் புற்றுநோய் குறித்த பாபா வாங்காவின் கணிப்பு
ஒவ்வொரு ஆண்டும் நடக்கப் போவதை பாபா வாங்கா பல ஆண்டுகளுக்கு முன்னரே கணித்துள்ளார். அதில் 2023 ஆம் ஆண்டில் சூரிய புயல்கள் மற்றும் AI பயன்பாட்டின் அதிகரிப்பு குறித்த இவரது கணிப்புகள் உண்மையாகிவிட்டன. மேலும் 2024 ஆம் ஆண்டிற்கான இவரது 7 அதிர்ச்சியூட்டும் கணிப்புக்களில் ஒன்று மிகவும் கொடிய புற்றுநோய் மற்றும் அல்சைமர் நோய் ஆகிய இரண்டிற்கும் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பது.
இப்படி பாபா வாங்கா கூறியிருக்கையில், ரஷ்யாவின் அதிபர் புடின் புற்றுநோய் தடுப்பூசிகளைப் பற்றி பேசுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவுள்ள நிலையில், அடுத்ததாக அல்சைமருக்கும் மருந்துகளை கண்டுபிடித்துவிடுவார்களோ? கண்டுபிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
பாபா வாங்காவின் 2024 கணிப்புகள்
பாபா வாங்கா 2024 ஆம் ஆண்டில் புற்றுநோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று கணித்திருப்பதைத் தவிர, இன்னும் சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களையும் கணித்துள்ளார். அதில் ரஷ்ய அதிபர் புடின் படுகொலை, ஐரோப்பாவில் பயங்கரவாதம், காலநிலை பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி, இணைய தாக்குதல்கள், AI-ல் முன்னேற்றங்கள் போன்றவை அடங்கும்.
பாபா வாங்கா என்பவர் யார்?
பல்கேரியாவைச் சேர்ந்த தீர்க்கதரசி தான் பாபா வாங்கா. இவர் 1996 ம் ஆண்டில் இறந்தார். இவர் தனது 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வையை இழந்த பின் அவருக்கு எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை கணித்து கூறும் ஆற்றல் கிடைத்தது. இவரது பல கணிப்புகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.
இவரது கணிப்புகள் சரியாக நடந்ததால், மக்கள் அவரை பல்கேரியாவின் நோஸ்ட்ராமஸ் என்று அழைக்கத் தொடங்கினர். இவர் 9/11, கோவிட், வடகொரியா பதட்டங்கள், ஒபாமாவின் ஜனாதிபதி பதவி, இளவரசி டயானாவின் மரணம், ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பலவற்றை கணித்துள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவர் 5079-ல் உலகம் அழியப் போவதாகவும் கணித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











