Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் யார்? டாடா நிறுவனம் எவ்வளவு நிவாரணம் அறிவித்துள்ளது தெரியுமா?
Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்துதான் இன்று இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 230 பயணிகளுடன் கிளமபிய விமானம் கிளம்பிய 3 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளானது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மேலும் விமானம் அருகிலிருந்த விடுதியில் விழுந்து விபத்துக்கு உள்ளானதால் விடுதியிலிருந்த 2 பேர் இறந்துள்ளனர்.
Air India Boeing 787-8 Dreamliner விமானம் விபத்துக்கு உள்ளான பிறகு அதிலிருந்து யாரும் உயிருடன் வெளியே வர முடியும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத விதத்தில், 1ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து 1A இருக்கையில் பயணத்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். நாற்பது வயதான விஸ்வாஷ் குமார் ரமேஷ் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர், அவர் தனது குடும்பத்தைப் பார்க்க சில நாட்கள் இந்தியாவில் இருந்தார், இப்போது அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சமீபத்திய செய்தியின்படி, விஸ்வாஷ் குமார் ரமேஷ் தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் இங்கிலாந்து திரும்பிச் சென்று கொண்டிருந்தார், விஸ்வாஷ் குமார் உயிர் பிழைத்திருக்கும் நிலையில் அவர் சகோதரரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை.
ரமேஷின் வாக்குமூலம்
"நான் எழுந்தபோது, என்னைச் சுற்றி உடல்கள் இருந்தன. நான் பயந்தேன். நான் எழுந்து ஓடிவிட்டேன். என்னைச் சுற்றி விமானத்தின் துண்டுகள் இருந்தன. யாரோ என்னைப் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்கள்", என்று ரமேஷ் தனது விமானத்திலிருந்து உயிர் பிழைத்தது பற்றி கூறியுள்ளார். மேலும் "நாங்கள் அவரைத் தேடுகிறோம். உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் எனக்குத் தெரியப்படுத்துங்கள்", என்று அவர் தனது சகோதரனைப் பற்றி கூறினார்.
அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமான விபத்து
அகமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானம் 230 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற வியாழக்கிழமை பிற்பகல் 1:17 மணிக்கு புறப்பட்ட விமானம் கிளம்பிய 3 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதியது. இதுவரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாக மாறியது. இதுவரை விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நகர சிவில் மருத்துவமனை மற்றும் பிஜே மருத்துவக் கல்லூரியில் போயிங் 787 ட்ரீம்லைனர் (AI171) விபத்துக்குள்ளாகி சில மணி நேரங்களுக்குப் பிறகும், இறந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
எரிந்த இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைக் கண்டுபிடிக்கவும், காயமடைந்தவர்களை வெளியே எடுக்கவும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுடன் இருந்தனர், இந்த கோர விபத்தின் விளைவுகளை மதிப்பிட அதிகாரிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
பயணிகள் விபரம்
ஏர் இந்தியாவின் கூற்றுப்படி, 230 பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ்காரர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியனர். மற்ற 12 பேர் இரண்டு விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள். குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விமான விபத்தில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், இலவச சிகிச்சையையும் அறிவித்துள்ளது.



Click it and Unblock the Notifications
