Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
நகைச்சுவைத் திறனை அதிகரிப்பதற்கான சில வழிகள்!!!
'சிரிப்பே மருந்தாகும்' என்பது பழமொழி. நாம் நம் வாழ்நாளில் எவ்வளவு காலம் சிரிக்கின்றோமோ, அவ்வளவு காலம் கூடுதலாக வாழ்கின்றோம். சிரிப்பு இல்லாத வாழ்க்கை வெறும் செயற்கையான வாழ்க்கை ஆகிவிடும். அதனால் நம்மால் இயன்ற வரை சிரித்து வாழ்ந்து, நமது ஆயுள் காலத்தை அதிகரிப்போம்.
நகைச்சுவை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்? நீங்கள் இவ்வாறு நினைத்தால், உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நகைச்சுவையை நீங்களே சிறிதளவு சேர்த்து பாருங்கள். நகைச்சுவை என்பது பரவக்கூடியது. இது உங்களை மற்றவருடனும், சுற்றுசூழலுடனும் சேர்க்க உதவும். நகைச்சுவை சிரிப்பை வரவழைக்கும் அதுவே முடிவான மருந்தாகும். நகைச்சுவையானது உங்களை மற்றவருடன் இணைக்கவும் நண்பராக்குவதற்கும் உதவி புரியும். இது மட்டுமல்லாது இந்த நகைச்சுவையின் வெளிப்பாடு, நமது தடுப்பாற்றல் திறனை அதிகரித்து, உடல் நலத்தை நன்றாக வைக்க உதவும். இந்த நகைச்சுவையும், சிரிப்பும் விலை இல்லாத ஒன்றாகும். விலைமதிக்கத்தக்கதும் கூட!
உங்கள் அன்றாட வாழ்க்கையில் உள்ள மனஅழுத்தத்தில் இருந்து விடுபடவும் சற்று ஓய்வெடுக்கவும் இந்த நகைச்சுவை உதவுகின்றது. சுறுசுறுப்பாக இருக்கும் உங்கள் வாழ்க்கையில் சிறிதளவு ஓய்வு நேரம் ஒதுக்குவது என்பது கடினமான ஒன்றாகும். அப்படி கிடைக்கும் ஓய்வு நேரத்தை நகைச்சுவையாக செலவிட்டால் நமது எண்ணங்களில் எப்பொழுதும் நிறைந்து இருக்கும். நகைச்சுவை நமது உள்மனத்தின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும். இதுவே நம் அனைவருக்கும் தேவைப்படும் ஒன்றாகும். வாழ்க்கை என்பது பணம் மற்றும் வேலை என்பது மட்டுமல்ல வேறு சிலவும் இருக்கின்றன. நகைச்சுவை என்பது ஒரு கலை, அது ஒரு சிலர்க்கு இயல்பாகவே வரும் ஒரு சிலர்க்கு சில காலங்களுக்கு பிறகு வரும். சிறிது உழைத்தால், உண்மையான நகைச்சுவை உணர்வை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். நகைச்சுவை உணர்வு என்பது வரம். உங்கள் நகைச்சுவை உணர்வை அதிகரிப்பதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

வேறு கோணத்தில் பார்ப்பது
உங்கள் நகைச்சுவை உணர்வை அதிகரிக்க எல்லாவற்றையும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். அதன் நகைச்சுவை கலந்த புறத்தையும் பார்க்க வேண்டும். நீங்கள் உங்கள் நகைச்சுவை திறனை வளர்க்கும் பாதையில் இருந்தால், சாதாரண பொருளைப் பற்றியும் நகைச்சுவையாக பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒளிந்திருக்கும் நகைச்சுவையை புரிந்து கொள்ள வேண்டும்.

கவனித்தல்
அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது நகைச்சுவை நிகழ்ச்சிகளை மேலும் மேலும் பார்ப்பதுதான். இது உங்கள் திறனை ஆராய்ந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஜோக் அடிப்பதற்கான ஐடியாக்களை கொடுக்கும். நகைச்சுவையாக பேசுவது என்பது மிகவும் எளிதான ஒன்றல்ல. அதற்கு சிறிது உழைப்பு தேவை.

விடா முயற்சி
நீங்கள் நகைச்சுவை செய்யும்போது, சில நேரங்களில் எவருமே சிரிக்காமல் இருக்கும் சந்தர்ப்பம் கூட நிகழலாம். எனினும், நகைச்சுவை உணர்வுடன் இருப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறிது காலம் தேவைப்படும். அதனால் விட்டு விடாதீர்கள். அறிவுரைகளை ஏற்று முயற்சி செய்யுங்கள்.

இயற்கையாக வருவது
நகைச்சுவை தானாக வருவது தான் அதனை அதிகரிக்க சிறந்த வழியாகும். சந்தர்ப்பத்தை கவனமாக கையாளுங்கள். நீங்கள் பயப்பட்டால் அது உங்களின் நகைச்சுவை உணர்வை அழித்து விடும். அதனால் சற்று ஓய்வு எடுத்து முயற்சி செய்யுங்கள்.

கற்றல்
நகைச்சுவையாக இருப்பதற்கு சிறந்த வழி கற்றல் தான். உங்கள் குழந்தைகளிடமும் நண்பர்களிடமும் கற்றுக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஒதுக்கி அவர்கள் எவ்வாறு நகைச்சுவையை வெளிக்கொணருகின்றனர் என்பதை கவனிக்க வேண்டும். மேலும் , அவர்கள் எவ்வாறு சந்தர்பங்களை கையாளுகின்றனர் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இது உங்கள் நகைச்சுவை திறனை அதிகரிக்க சிறந்த வழியாகும்.

சிரிப்பு
உங்கள் நகைச்சுவை திறனை அதிகரிக்க வேண்டுமானால், சிரிப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு, மற்றவர்களை சிரிக்க வைக்கக் கூடாது. நீங்கள் செய்யும் நகைச்சுவையை நீங்கள் பின்பற்றினால் தான், நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும்.

மற்றவர்களுக்கும் பரப்புதல்
நேர்மறையாக சிந்தித்து சிரித்த முகத்துடன் நகைச்சுவையை பரப்புங்கள். சிரித்த முகத்துடன் நீங்கள் நகைச்சுவை செய்தால் தான் அதனை மற்றவர்கள் ரசிப்பார்கள். சோகமாக முகத்தை வைத்து கொண்டு ,நகைச்சுவை செய்தால் உங்கள் நகைச்சுவையை யாராவது விரும்புவார்களா?

பயிற்சி
இறுதியாக, ஒருவர் தனது நகைச்சுவை திறனை வளர்க்க பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் நகைச்சுவை திறனை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பரிசோதித்து நீங்கள் எவ்வளவு நகைச்சுவை உணர்வுடன் இருகின்றீர்கள் என்பதை அறியலாம்.



Click it and Unblock the Notifications
