தூங்க போறீங்களா? இந்த நாவல்களை படிக்காதீங்க...

By Maha

பொதுவாக புத்தகம் படிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கும். அத்தகையவர்கள் பல கதையாசிரியர்களின் கதையை தொடர்ந்து படித்து வருவார்கள். அது கதையாசிரியர்களின் சொல்லும் விதம் பிடிப்பதாலோ அல்லது அவர்களின் கதை பிடிப்பதானாலோ இருக்கலாம். ஆனால் பலருக்கு புத்தகத்தை தொட்டாலே போதும், தூக்கம் வந்துவிடும். அதிலும் மற்றவர்கள் புத்தகம் படிப்பதை பார்த்தாலே, இங்கு இவர்களுக்கு தூக்கம் சொக்கும். ஆனால் என்ன தான் புத்தகம் படிக்க பிடிக்காவிட்டாலும், பேய் கதை என்றால் அதனைப் படிக்க பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள்.

அதிலும் இரத்தக்காட்டேரி கதை என்றால் பலர் விரும்பி படிப்பார்கள். அத்தகைய பயமூட்டும் வகையில் இருக்கும் நாவல் பல உள்ளன. எனவே இந்த மாதிரியான இரத்தக் காட்டெரி நாவல்கள் எவைவென்று தெரியாமலே பலர் உள்ளனர். அத்தகையவர்களுக்கு இரத்தக் காட்டேரி நாவல்களுள் மிகவும் பிரபலமான மற்றும் பலரும் படிக்க விரும்பும் நாவல்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். இந்த நாவல்களை படிக்க படிக்க, அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் இருக்கும். மேலும் இவற்றை இரவு நேரங்களில் படித்து விட்டு தூங்க வேண்டாம். ஏனெனில் பின் நிம்மதியான தூக்கத்தை பெற முடியாமல் தவிக்க நேரிடும்.

சரி, இப்போது அந்த வாம்பயர் நாவல்கள் எனப்படும் இரத்தக் காட்டேரி நாவல்களில் மிகவும் பிரபலமானவற்றை பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Dracula: Bram Stoker

Dracula: Bram Stoker

இரவில் மனித இரத்தத்தையே உணவாக கொள்ளும் ஆஸ்திரிய கடவுளான டிராகுலாவின் இந்த கதை எப்போதும் அனைவரது மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது.

Twilight Series: Stephene Meyer

Twilight Series: Stephene Meyer

இது சைவ காட்டேரியான எட்வர்ட் கல்லனுக்கும், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பெண் பெல்லாவிற்கும் இடையே மலரும் ஒரு திகில் நிறைந்த காதல் கதை. உதாரணமாக, ஒரு சிங்கம், ஆட்டுக்குட்டியின் மீது காதல் கொள்ளும் மாதிரியான கதை.

The Queen Of The Damned: Anne Rice

The Queen Of The Damned: Anne Rice

இந்த நாவல், உலகை காக்கும் ஒரு பெண் தெய்வத்தை, காட்டேரி கவர்ந்து கொண்டு, அழித்து, உலகையே தன்னுள் கொள்ள வேண்டும் என்று அந்த பெண் தெய்வத்துடன் போராடும் ஒரு காட்டேரியின் கதையாகும். இது மிகவும் ஆர்வமாக இருக்கும்.

Blood Sucking Fiends: Christopher Moore

Blood Sucking Fiends: Christopher Moore

இந்த நாவலின் சிறப்பு என்னவென்றால் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் உண்மையாக நடந்தது போன்ற அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோடி என்னும் பெண் காலையில் எழும் போது காட்டேரியாக மாறிவிடுவதோடு, தன்னை மாற்றியவரை தேடும் படியான ஒரு கதையாகும்.

Vampire Diaries: L. J. Smith

Vampire Diaries: L. J. Smith

இந்த தொடரில், இரண்டு காட்டேரி சகோதரர்கள், எலெனா கில்பர்ட் என்னும் சாதாரண பெண் மீது காதல் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் எலெனா, கேத்தரின் என்னும் காட்டேரியின் மறு அவதாரம் என்று பல திருப்புமுனைகளுடன் திகிலாக இருக்கும்.

I Am Legend: Richard Matheson

I Am Legend: Richard Matheson

இந்த நாவல் படமாக கூட எடுக்கப்பட்டுள்ளது. இந்த நாவலைப் பார்த்தால், ஒரு நோய் பரவுவது போன்று இருக்கும். அதுவும் ஒருவர் மற்றவரைக் கடித்து விட்டால், அவர்களும் இரத்தக் காட்டேரியாக மாறிவிடுவர் என்ற கதையாகும்.

Interview With The Vampire: Anne Rice

Interview With The Vampire: Anne Rice

இந்த புகழ்பெற்ற நாவலும் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிராட் பிட் அழகான காட்டேரியாக நடித்துள்ளார். இதுவும் யாராலும் மறக்க முடியாத, ஒரு சிறந்த பேய் நாவல்.

House Of Night: P C Cast

House Of Night: P C Cast

இந்த நாவலில் ஒரு காட்டேரிகளுக்கான பள்ளியில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை எதிர்காலத்தில் ஒரு சிறந்த காட்டேரியாக்குவது போன்ற கதை.

Salem's Lot: Stephen King

Salem's Lot: Stephen King

இந்த நாவலில் ஒரு நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் எப்படி காட்டேரிகளாக மாறுகின்றனர் என்பது பற்றியது. இதுவும் ஒரு புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று.

Dead To The World: Charliane Harris

Dead To The World: Charliane Harris

இந்த புத்தகம் காட்டேரிகள் மற்றும் மேலாதிக்கத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் மந்திரவாதிகளுக்கு இடையிலான போராட்டைப் பற்றிய கதை. இது ஒரு தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டுள்ளது.

Guilty Pleasures: Laurell K Hamilton

Guilty Pleasures: Laurell K Hamilton

இந்த நாவலில் காட்டேரிகளை வேட்டையாடுவதில் சிறந்தவராக இருக்கும் அனிதா, ஒரு காட்டேரி மாஸ்டரிடம் சிக்கிக் கொண்டு, மனித வேலையாளாக பணிபுரியும் படியான கதை. இது மிகவும் பயங்கரமாகவும், திரில்லாகவும் இருக்கும் ஒரு நாவல்.

Sunshine: Robin Mckinley

Sunshine: Robin Mckinley

இந்த கதை சற்று வித்தியாசமான ஒரு கனவு வளிமண்டலத்தில் அமைந்த ஒரு கற்பனையான கதை. இதில் உலகமானது மனிதர்கள் மற்றும் மற்றவர்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

Living Dead In Dalla: Charliane Harris

Living Dead In Dalla: Charliane Harris

தெற்கு வாம்பயர் இரகசியங்கள் தொடரில் வந்த முதல் நாவல் தான் லிவ்விங் டெட் இன் டெல்லா. இது சற்று வித்தியாசமான கதையைக் கொண்டது.

The Vampire Lestat: Anne Rice

The Vampire Lestat: Anne Rice

இது மிகவும் பிரபலமான வாம்பயர் அறிவியல் எழுத்தாளர் அன்னே ரைஸ் என்பவரின் வித்தியாசமான நாவல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion