For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதன்மைக் கடவுளான விநாயகருக்கு மிகவும் பிடித்த மலர்கள் மற்றும் இலைகள்!!!

By Maha
|

இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூக்கள் உகந்ததாக இருக்கும். அந்ததந்த கடவுளுக்கு ஏற்ற பூக்களைக் கொண்டு பூஜைகளை செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் முதன்மைக் கடவுளான விநாயகருக்கும் ஒருசில பூக்கள் மட்டுமின்றி, இலைகளும் உள்ளன. பொதுவாக அனைவருக்கும் பிடித்த கடவுளும் இவரேயாவார்.

ஒன்பது நாட்கள் வரை கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான விநாயகருக்கு பிடித்தமான பூக்கள் மற்றும் இலைகளால் அலங்கரித்து பூஜைகளை மேற்கொள்ளலாம். இதுவரை விநாயகருக்கு பிடித்த அனைத்து பூக்கள் மற்றும் இலைகளை கொண்டு தான் விநாயகரை அலங்கரிப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூக்கள் அல்லது இலைகளைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

இப்போது விநாயகருக்கு மிகவும் பிடிக்கும் பூக்கள் மற்றும் இலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைக் கொண்டு விநாயகரை அலங்கரித்து, விருப்பப்பட்டதை நினைத்து விநாயகருக்கு பூஜை செய்து, நன்மைகளைப் பெற்று நலமுடன் வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு மலர்கள்

சிவப்பு மலர்கள்

பொதுவாக விநாயகருக்கு சிவப்பு நிற பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிவப்பு நிற செம்பருத்தி என்றால் ரொம்ப பிடிக்கும்.

அருகம்புல்

அருகம்புல்

அனைவருக்குமே விநாயகருக்கு அருகம்புல் மிகவும் பிடிக்கும் என்று தெரியும். மேலும் எந்த ஒரு பூஜையின் போதும், இந்த அருகம்புல் இல்லாமல் பூஜை நடந்ததில்லை.

எருக்கம் பூ

எருக்கம் பூ

விநாயகருக்கு பிடித்த மற்றொரு பூ தான் எருக்கம் பூ.

மாதுளையின் இலைகள்

மாதுளையின் இலைகள்

இந்தியாவின் சில பகுதிகளில் மாதுளையின் இலைகள் மற்றும் பூக்களைக் கொண்டு பூஜைகள் செய்வார்கள். அதிலும் விநாயகர் சதுர்த்தியன்று சில இடங்களில் இந்த பூ மற்றும் இலைகளைக் கொண்டு பூஜைகளை மேற்கொள்வார்கள்.

துளசி

துளசி

துளசி என்று சொல்லும் போது அனைவருக்கும் கடவுள் பெருமாள் தான் ஞாபம் வருவார். ஆனால் இந்த துளசியும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். எனவே இந்த விநாயகர் சதுர்த்திக்கு துளசி அலங்காரம் மேற்கொண்டு, நன்மையைப் பெறுங்கள்.

சங்குப்பூ

சங்குப்பூ

விநாயகருக்கு சங்குப்பூ என்றாலும் மிகவும் இஷ்டம். பொதுவாக சங்குப்பூவில் வெள்ளை மற்றும் நீலம் என இரண்டு உள்ளது. இவை இரண்டுமே விநாயகருக்கு உகந்த பூக்களாகும்.

ஸ்க்ரூ பைன் (Screw Pine)

ஸ்க்ரூ பைன் (Screw Pine)

இந்த மரத்தின் மலர்கள் மற்றும் இலைகளும் விநாயகருக்கு பிடித்தமானவைகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Favourite Flowers Of Lord Ganesha

In Hinduism, every deity has His/Her favourite flower. Flowers have a very crucial role to play in the Hindu way of worship. It is said that if you worship the deity by offering His/Her favourite flower, all your wishes will be fulfilled. Here are some favourite flowers and leaves of Lord Ganesha.
Desktop Bottom Promotion