For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

அனைவரும் ஹோலி பண்டிகை வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடும் ஒரு பண்டிகை என்று தான் நினைக்கிறோம். ஆனால் எப்படி இந்துக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும், ஒரு கதை மற்றும் முக்கியத்துவம் உள்ளதோ, அதேப் போல் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னாலும், ஒருசில கதைகள் மற்றும் காரணங்கள் இருக்கின்றன.

ஹோலி பண்டிகையின் போது இரண்டு சடங்குகள் முக்கியமானது. ஒன்று "ஹோலிகா தகன்" என்னும் ஹோலி நெருப்பு மூட்டுவது, மற்றொன்று வண்ணப் பொடிகள் அல்லது நீர்ப்பாய்ச்சும் துப்பாக்கிகளில் வண்ணப் பொடி கலந்து நீரினை நிரப்பி, மற்றவர்கள் மீது தெளித்து விளையாடுவது. இத்தகைய இரண்டு சடங்குகள் மேற்கொள்வதற்கு பின்னால், சில கதைகளும், நம்பிக்கைகளும் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போமா!!!

Colourful Holi Rituals & Their Significance

ஹோலிகா தகன் அல்லது ஹோலி நெருப்பு

பொதுவாக இந்த சடங்கின் போது, ஒரு வாரத்திற்கு முன்பே, குழந்தைகளை ஆங்காங்கு இருக்கும் மரக்குச்சிகள் அல்லது சிறிய மரக்கட்டைகளை சேகரிக்க சொல்வார்கள். பின் அதனை ஹோலி பண்டிகையின் முதல் நாள், எரித்துவிடுவார்கள். இதற்கு காரணம், இவ்வாறு எரிப்பதால், நன்மைச் சுற்றியிருக்கும் பீடைகள் அகலும் என்பதாலேயே.

ஆனால் இந்த "ஹோலிகா தகன்" கொண்டாடப்படுவதற்கு பின் ஒரு கதையே உள்ளது. கதை உள்ளது. அது என்னவென்றால், அரக்கர்களின் அரசனான ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன், கடவுள் விஷ்ணுவின் மீது பக்தியுடையவனாக இருந்தான். ஆனால் அவனது தந்தைக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. ஆகவே விஷ்ணுவை வணங்குவதை தவிர்க்குமாறு, அவனது தந்தை கூறினார். இருப்பினும் பிரஹலாதன் விஷ்ணுவின் மீதுள்ள பக்தியை சிறிதும் தவிர்க்காமல் இருந்தான். ஆகவே ஹிரண்யகசிபு பிரஹலாதனை அழிக்க பலவாறு முயன்றார்.

அந்த முயற்சியில் ஒன்றாக தனது சகோதரி ஹோலிகாவின் மடியில் அமர வைத்து, நெருப்பூட்டி பிரஹலாதனை கொல்ல முயன்றார். அவ்வாறு நெருப்பூட்டும் போது, சகோதரி மேல் ஹிரண்யகசிபு நெருப்பினால் சாவு ஏற்படாத ஒரு சால்வையினை அவள் மேல் போர்த்திவிட்டார். இருப்பினும் அவனது சகோதரியின் தீய எண்ணத்தால், ஹோலிகா சாம்பலானாள். பிரஹலாதன் விஷ்ணுவின் மீது கொண்ட பக்தியினால், சிறு காயமின்றி தப்பினான். எனவே தான், இந்த ஹோலிகா தகன் கொண்டாடப்படுகிறது.

வண்ணப் பொடி விளையாட்டு

ஹோலி பண்டிகையின் இரண்டாம் நாள் கொண்டாடப்படுவது தான் வண்ணப் பொடி விளையாட்டு. இந்த விளையாட்டு கொண்டாடப்படுவதற்கு, பெண்களிடம் குறும்புத்தனமாக இருக்கும் கிருஷ்ண பகவான், கருமை நிறத்தில் இருப்பார். அப்போது கிருஷ்ண பகவான் தனது தாயிடம், தான் கரிய நிறத்திலும், ராதா அழகான நிறத்திலும் இருப்பதாக கூறுவதைக் சொல்வதைக் கேட்டு, கிருஷ்ண பகவானின் தாய் ராதா மீது வண்ணம் பூச முடிவு செய்தார்.

அப்போது கிருஷ்ணன் ராதா மீது நீல நிறப் பொடியை பூசி விளையாடியதால், இந்த வண்ணப் பொடி விளையாட்டு கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.

இவையே ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் மற்றும் நம்பிக்கைகள். வேறு ஏதாவது ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

English summary

Colourful Holi Rituals & Their Significance | ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்கள்!!!

The rituals associated with Holi are just as colourful as the festival itself. There is indeed deep significance behind Holi customs and traditions. Most of the Holi rituals are based on two main points. The first is the Holika Dahan, the second is play of colours. Here are some of the main rituals associated with Holi and their significance.
Story first published: Tuesday, March 26, 2013, 15:49 [IST]
Desktop Bottom Promotion