Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
கேன்ஸ் திரைப்பட விழாவில் மீண்டும் கலக்கும் ஐஸ்வர்யா ராய்!!!
ஃபேஷன் என்றாலே ஐஸ்வர்யா ராய் பச்சன் தான் என்பதற்கு உதாரணமாக, 2013 இல் பிரான்ஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் அட்டகாசமாக வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்பவர்களுள் ஒருவர் தான் ஐஸ். ஆனால் திரைப்பட விழாவாக இருக்கும் கேன்ஸ், திரைப்பட விழாவாக மட்டுமின்றி, ஒருவித ஃபேஷனும் நிறைந்துள்ளது.
ஏனெனில் கேன்ஸ் விழாவிற்கு வரும் ஒவ்வொருவரும், விருதினை வாங்குவதற்கு மட்டுமின்றி, அனைவரது கண்களையும் கவரும் வகையில் அழகான ஆடைகளை உடுத்தி வருவார்கள். அந்த வகையில் உலக அழகியாக இருந்த ஐஸ் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன?
ஏற்கனவே ஐஸ்வர்யா கேன்ஸ் 2013 விழாவிற்கு வருகைத் தந்த முதல் நாளே, கருப்பு நிற ஆடையில் அழகான ஒரு ஓவியம் போன்று, குண்டாக தெரியாமல் பழைய ஐஸாகவே தெரிந்தார். அந்த வகையில் அவர் தனது இரண்டாம் நாளில் கருப்புக்கு எதிரான வெள்ளை நிற ஆடையில் மீண்டும் வந்து கலக்கியுள்ளார்.
இப்போது கேன்ஸ் 2013 இல், பங்கு கொண்ட இரண்டாவது நாளிலும் மீண்டும் அனைவரையும் ஈர்த்த ஐஸ்வர்யா ராயின் சில போட்டோக்களைப் பார்ப்போம்.

வெள்ளை அனார்கலி
ஐஸ்வர்யா சிவப்பு கம்பளத்தில் அழகான வெள்ளை பூப்போட்ட அனார்கலியில் நடந்து வந்தது.

அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா
ஐஸ்வர்யா உடுத்திய இந்த வெள்ளை நிற அனார்கலியை டிசைன் செய்தவர்கள் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா என்னும் டிசைனர்கள் தான்.

அழகான நடை
சிவப்பு கம்பளத்தில் தன்னுடைய அழகான சிரிப்பை வெளிப்படுத்தி நடந்தது.

கவர்ச்சியான கண்கள்
ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது கவர்ச்சியான கண்களால் தான் அனைவரையும் ஈர்த்திருப்பாரோ!

பொலிவிழக்காத கூந்தல்
ஐஸ்வர்யா ராயின் கூந்தலின் அழகே அழகு தான். ஏனெனில் கேன்ஸில் பங்கு கொண்ட அவரது கூந்தலானது அவ்வளவு அடர்த்தியாக, அலை போன்று சூப்பராக இன்றும் இருக்கிறது.

இளமை திரும்பிய ஐஸ்வர்யா
கேன்ஸ் 2013 இல், ஐஸ் தனது இரண்டாவது நாளன்று அணிந்திருந்த, இந்த கருப்பு உடையில் மிகவும் அழகாக, தன் பழைய தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

என்ன அழகு...
இரண்டாவது நாளில் அணிந்த கருப்பு உடையில், சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, அழகான பார்வையில் கொடுத்த போஸ்.

எலீ சப் உடை
கேன்ஸில் பங்கு கொண்ட ஐஸ்வர்யான தனது முதல் நாளில், சிவப்பு கம்பளத்தில் கருப்பு நிற எலீ சப் கவுனில் வந்த படம்.

அழகு தேவதை...
வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற நீளமான பாவடையில், ஐஸின் அழகிற்கு அளவே இல்லை. இதில் இவ்வளவு தான் என்று அழகை வர்ணிக்க முடியாத அளவில் தேவதைப் போன்று இருக்கிறார்.

லெஹெங்கா சேலை
ஐஸ்வர்யா, இந்த கருப்பு வெல்வெட் லெஹெங்கா மற்றும் தங்க நிற வேலைபாடுகளுடன் கூடிய சரிகை சேலையில் அழகு ராணி போன்று இருக்கிறார்.



Click it and Unblock the Notifications
