For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க திருமணம் நல்லா கிராண்ட்டா இருக்கணுமா? அப்ப முதல்ல இத பாருங்க...

By Maha
|

திருமணம் என்று வந்தாலே நிறைய செலவுகள், டென்சன் என்றெல்லாம் இருக்கும். அந்த நேரத்தில் எந்த ஒரு செயலையும் மிகவும் திட்டமிட்டு, யோசித்து, பொறுமையோடு செயல்பட வேண்டும். மேலும் யாராலும் தங்களது திருமண நாளை மறக்கவே முடியாது. வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்கும். அதிலும் அப்போது நிறைய உறவினர்கள் வந்து, வாழ்த்துவார்கள். அப்படி வாழ்த்தும் அந்த இடமானது மிகவும் அழகாக, மகிழ்ச்சியை தரும் வகையிலும், தங்களுக்கு பிடித்த வகையிலும் அலங்கரித்திருந்தால் எப்படியிருக்கும்.

சிலர் தங்கள் திருமணத்தை மிகவும் பிரமாதமாக நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனெனில் தங்கள் திருமணத்திற்கு வந்து ஆசீர்வதிப்பவர்கள், தன் திருமண அலங்கராத்தைப் பார்த்து, ஆச்சரியமுற வேண்டும் என்றெல்லாம் எண்ணுவார்கள். சிலரோ சாதாரணமாக நடத்தினாலும், நன்கு அழகாக காணப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவ்வாறெல்லாம் உறவினர்கள் பேசுவதற்கு முதலில் நாம் எந்த மாதிரியான மண்டபத்தை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்று முதலில் யோசிக்க வேண்டும். ஏனெனில் மண்டபம் தானே மிகவும் முக்கியமானது.

ஆகவே அத்தகைய திருமண மண்டபத்தை எப்படி தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? அப்படியெனில் உங்களுக்காவே திருமண மண்டப டிசைன்களில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் பார்த்து, உங்கள் திருமணத்திற்கு எந்த மாதிரியான மண்டபத்தை அமைக்க விரும்புகிறீர்களோ, அப்படி அமைத்து, வாழ்க்கையை இனிமையாக தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூ மண்டபம்

பூ மண்டபம்

இந்த மாதிரியான திருமண மண்டபத்தில் நான்கு தூண்களுடன், அழகான பூக்களான மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்றவற்றை வைத்து அலங்கரித்தால், நன்கு மங்களகரமாகவும், பிரமாதமாகவும் காணப்படும்.

திறந்தவெளி மண்டபம்

திறந்தவெளி மண்டபம்

இதில் மண்டபம் முழுவதும் பூக்களால் அலங்கரிப்பதோடு, விருந்தினர்களை அழைத்து, அவர்கள் சுற்றி இருக்க, நடுவே தம்பதியர்களை அமர்த்தி திருமணம் நடத்தும் படியாக உள்ளது.

மேடை மண்டபம்

மேடை மண்டபம்

பொதுவாக இந்த மாதிரி மேடை போன்று அமைத்து, அதை அலங்கரித்து, அங்கு திருமணத்தை நடத்தினால், உறவினர்கள் அனைவருமே நன்கு பார்க்கும் படியாக இருக்கும்.

வெளிப்புற மண்டபம்

வெளிப்புற மண்டபம்

இந்த மாதிரியான மண்டமானது, வெளிப்புறத்தில் தம்பதியர்கள் மட்டும் அமரும் வகையில் துணியால் மண்டபம் போன்று அமைத்து, அவற்றை அலங்கரித்து, உறவினர்கள் அனைவரும் முன்னும், புரோகிதர் மந்திரம் படிக்க திருமணம் நடத்தினால் அருமையாக இருக்கும்.

கோவில்

கோவில்

நிறைய தென்னிந்திய மக்கள் திருமணத்தை கோவிலில் தான் நடத்துவார்கள். அதுவும் அவ்வாறு நடத்தும் போது கோவிலை பூக்களால் அலங்கரித்து நடத்தினால், நம்பமாட்டீர்கள் மற்ற மண்டபங்களை விட, இது பார்ப்பதற்கே அவ்வளவு சூப்பராக இருக்கும்.

மெட்டல் தூண் மண்டபம்

மெட்டல் தூண் மண்டபம்

நிறைய திருமண மண்டபங்களில் தூண்களானது தங்க முலாம் பூசிய மெட்டலால் வைத்திருப்பதோடு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பார்ப்பதற்கு ஒரு பாரம்பரிய தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mandap Themes For A Grand Wedding! | உங்க திருமணம் நல்லா கிராண்ட்டா இருக்கணுமா? அப்ப முதல்ல இத பாருங்க...

In wedding theme, mandap plays a very significant role. Mandap decorations can be done with flowers, curtains or net drapes. Depending on personal choice and wedding theme, you can pick up a mandap design. Lets take a look at few Indian wedding mandap decoration themes.
Story first published: Wednesday, December 5, 2012, 12:33 [IST]
Desktop Bottom Promotion