இந்தியாவின் முதல் கார்ப்பரேட் சாமியார் இறப்பிற்கு பின் இருக்கும் மர்மம் என்ன?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

புரட்சிகர ஆன்மீக தத்துவ சிந்தனைகளால், அவர் காலத்தில் சிலரால் கொண்டாடப்பட்டு, உலகெங்கும் கிளைகள் பரப்பி, புகழின் உச்சியில் அமெரிக்காவில் இருந்தவரை அந்த புதிய எழுச்சியில் பயங்கொண்ட மேலைநாட்டு சதியில் சிக்கி, சிறைகளில் வாடி, இறுதியில் தாயகம் அடைந்து, கோடானுகோடி சொத்துக்கள் பக்தர்கள் கொண்டிருந்த 1990ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓஷோவின் மரணம் இன்னும் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதும், இறந்த சில மணிநேரங்களில் சிதையூட்டப்பட்டதும் மர்மமாக நீடித்து, அவர் இறப்பின் சர்ச்சைகள், 27 ஆண்டுகள் கடந்தபின்னும் இன்னும் ஓயவில்லை.

ஜென் தத்துவம்

அவர் பெருநம்பிக்கை கொண்ட சீடர்களில் இருவர், இன்று உலகில் பலகோடிகள் மதிப்புமிக்க வணிகநிறுவனங்கள் கொண்டவர்கள் என்பதை நீங்கள் அறிய நேர்ந்து, உங்கள் மனதில் ஏதேதோ நிகழ்கால சிந்தனைகள் ஓடினால், சற்றுநேரம் அவற்றைக் கட்டுபடுத்திவிட்டு, ஓஷோவைப்பற்றிய இந்தக்கட்டுரையைத் தொடர்ந்து வாசியுங்கள், வாசகர்களே!

Osho India's first crorepati saamiyar - the end of fame - life and rumors of his death.

ரஜ்னீஷ் சந்திரமோகன் !!

ரஜ்னீஷ் சந்திரமோகன் எனும் பெயருடைய ஓஷோ மத்தியப் பிரதேசத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தார். சிறுவயது முதல் தியானஈடுபாடு கொண்ட ஓஷோ தன்னுடைய 21ஆம் வயதில், தன்னுணர்வு விழிப்புநிலை மூலமாக, ஞானமடைந்து தத்துவவியல்பேராசிரியராக பத்தாண்டுகள் பணியாற்றி, மக்களின் விழிப்புணர்வுக்காக, தன்னுடைய புதுபாணி தியானமுறைகளில்,தத்துவங்களில் மக்களை ஈடுபடுத்தியதாக அவருடைய வாழ்க்கைக்குறிப்புகளிலிருந்து, அறியமுடிகிறது.

பகவான் ஸ்ரீரஜ்னீஷ் என்றழைக்கப்பட்டவர், உருவாக்கிய "புதிய சன்னியாசம்" எனும் தன்னை கண்டறியும் தியான நிலையில் ஈடுபட, குடும்ப வாழ்வை,பொது வாழ்வை விலக்கவேண்டிய அவசியமில்லை, தலைமுறைகளின் வழிசார்ந்த கடந்தகாலத்தை கொண்டு நம்மை அடிமையாக்கும் விசயங்களிலிருந்து மட்டும், விலக வேண்டுமென அவர் கூறியவை, அன்று வெகு பிரபலமாகி, அவர்பால் பல்லாயிரம் மக்களை ஈர்த்தது.

ரஜ்னீஷ்புரம் !!

இவர் புதிதாக உருவாக்கிய ரஜ்னீஷ்புரம் எனும் நகரம் பல்லாயிரக்கணக்கான இவரின் வழி வாழும் மக்களின் வசிப்பிடமாக மாறி, அங்கு நடக்கும் வருடாந்திரக் கொண்டாட்டங்களில் உலகெங்கிலுமுள்ள பக்தர்கள் கலந்துகொள்ள, அதன் பலனாக அமெரிக்காவில் மிகப்பெரும் குடியிருப்பு இதே பெயரில் ஆரம்பிக்க, அதிகஅளவில் குவிந்த அமெரிக்கர்களின் ஆர்வத்தில் அதன் அதீதவளர்ச்சியில் அமைப்பின் செல்வச்செழிப்பில் அமெரிக்காவே ஆடிப்போனது என்பதுதான் உண்மை.

Osho India's first crorepati saamiyar - the end of fame - life and rumors of his death.

ரஜ்னீஷ்புரம் என்ற அமெரிக்க குடியிருப்பு, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை, தியான மண்டபங்கள் கொண்ட ஒருநகராக உருவெடுத்து ஆசிரமத்துக்கு தங்கள் சொத்துக்களை அளித்து, ஆசிரமத்தில் நிரந்தரமாக தங்க வந்த அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆசிரமத்துக்கு கொடையாகத்தந்த நூற்றுக்கணக்கான ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் ஓஷோ பவனிவர, அனைத்திலும் சிகரமாய் ஓஷோவிற்கு என்று தனியாக ஒரு விமானமும் அதற்கு ஒரு விமான நிலையமும் இந்த நகரில் கட்டப்பட்டதால் அமெரிக்கா வெகுண்டது.

ஓஷோவின் வளர்ச்சி! மேலை நாட்டாரின் கிலி!

அமெரிக்கர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் எளிய உபதேசங்கள் மற்றும் புதிய தத்துவங்கள் மூலம் மாற்று மதமாக உருவெடுத்து, அசுர வளர்ச்சி கண்டுவரும் ஓஷோ அமைப்பைத் தடைசெய்ய, அமெரிக்கா முடிவெடுத்தது.

அதே சமயம் ஆசிரமம் சென்ற பாதையும் அத்தனை உயர்வில்லை என்பதை அங்கு நிகழ இருந்த ஆயிரக்கணக்கான சீடர்களின் கூட்டு தற்கொலை முயற்சியும், போதைப்பொருள் புழக்கமும், சமூகவிரோத செயல்களும் அன்றைய உலகம் அறிந்தே இருந்தது.

அந்த சமயத்தில் ஆசிரம நிர்வாகி ஒருவர் பெரும் சொத்துக்களை கொள்ளையடித்து தலைமறைவாக, அவரை கண்டுபிடிக்க ஓஷோ அளித்த புகாரை, அவருக்கு எதிராகத் திருப்பியது போலிஸ். அவர் புரட்சியை மக்களிடம் விதைத்து, ஆசிரமத்தில் ஊழல் புரிந்ததாகக்கூறி அவரை சிறையில் அடைத்தது.

நாடு கடத்துதல் :

ஓஷோ புகார் அளித்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரியதை அதிகாரத்தில் இருந்த சிலர் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கிடைத்த பொன்னான வாய்ப்பாக கருதி ஓஷோ மையத்தை அழிக்க திட்டமிடுகின்றனர். மேலும் அவருக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறையில் இருந்து விடுதலை செய்து அவரை வலுக்கட்டாயமாக நாடு கடத்துகிறது அமெரிக்கா.

பின்னர் ஜெர்மனி, கிரீஸ்,நேபாளம் உள்ளிட்ட பெரும்பான்மை நாடுகள் அவரை நாட்டுக்குள் வரவிடாமல் தடைசெய்த பின், அனைத்து நாடுகளும், ரஜ்னீஷ் விமானம் கூட தரையிறங்க விடாமல் அவருக்கு விசா தர மறுக்க, இதனால் மீண்டும் இந்தியா வருகிறார் ஓஷோ.

Osho India's first crorepati saamiyar - the end of fame - life and rumors of his death.

பெருநம்பிக்கைக்குரிய சீடர்கள்

ஓஷோவின் நம்பிக்கைக்குரிய சீடர்களாக இருந்த ஜான் மற்றும் ஜெயேஷ் என்ற இரு சீடர்களும், ஓஷோவின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டு அவரைக் கொன்றதாக, மற்ற ஒரு சீடர் சென்ற வருடம் 2016ல், மும்பையில் புகார் அளித்துள்ளார். அதற்கு சான்றாக அவர் அளித்தது ஓஷோவின் மரணத்துக்கு மரண சான்றிதழ் வழங்கிய டாக்டர் கோகனி ஓஷோவின் மரணத்தில் கொண்ட சந்தேகங்கள்.

ஓஷோ இறந்த அன்று மதியம், புனாவில் உள்ள ஆசிரமத்திலிருந்து போன்செய்து டாக்டரை வரவழைத்த ஓஷோவின் சீடர்கள் ஜான் மற்றும் ஜெயேஷ், ஓஷோ இறந்து கொண்டிருக்கிறார்  சீக்கிரம் மரண சான்றிதழ் எழுதுங்கள் என வற்புறுத்தினர் என்றும்,அப்போது ஓஷோ இறக்கும் தருவாயில் இருந்தார் என்றும் மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்வதைத்தவிர்க்க, இதயம் தொடர்பான காரணத்தால் இறப்பு என சான்றிதழில் குறிப்பிட வலியுறுத்தினர் எனவும் கூறியிருக்கிறார் டாக்டர் கோகனி.

வழக்கு போட்ட யோகேஷ் தாக்கர் எனும் அந்த சீடர், அவர்களுக்கு உண்மையிலேயே ஓஷோவின் உயிர்மேல் அக்கறை இருந்திருந்தால், ஆசிரமத்தில் இருந்த மருத்துவர்களைக்கொண்டு ஓஷோ உயிரைக்காப்பாற்றி இருக்கலாம்.

ஆயினும் அவர்கள் அதைச்செய்யாமல், மருத்துவரிடம் மரண சான்றிதழ் வாங்கவே, முனைப்பு காட்டினர். பின் அன்று மாலை அவர் இறந்ததாகக்கூறி, இரவே, இறப்பிற்கு வந்த அனைத்து தரப்பினரையும் அவர் உடல் அருகே நெருங்கக்கூட விடாமல் உடலை எரித்துவிட்டனர் என்கிறார்.

ஓஷோ சொத்துக்கள் யார் பெயரில் இருக்கிறது.. அவர் பெயரில் உள்ள கணக்கில் வராத சொத்துக்களின் விபரம் என்ன, அவர் எழுதிய உயில் எங்கே எனக்கேட்ட காரணத்தால், என்னை ஆசிரமத்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர் என்கிறார் வழக்கு போட்ட சீடரான யோகேஷ் தாக்கர்.

ஓஷோவின் புனே ஆசிரமத்தின் மதிப்பு ஆயிரம் கோடிக்கும் மேல். இதன் மூலம் ஆண்டுக்கு நூறு கோடி வருமானம் வருகிறது. வெளிநாடுகளில் உள்ள சொத்து விபரம் தெரியவில்லை, ஆனால் இந்த சீடர்கள் வெளி நாடுகளில் பல நிறுவனங்கள் தொடங்கி, உலகம் முழுவதும் உள்ள ஓஷோவின் பெருமளவு சொத்துக்களை அபகரித்துவிட்டதாக குற்றஞ்சாட்டுகிறார் இந்த சீடர்.

ஆயினும், ஓஷோ என் உயிரைக்காப்பாற்ற முயலாதீர்கள்.. நான் மரணத்தை அணு அணுவாக இரசித்து, இறக்க விரும்புகிறேன் என சீடர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக சில பதிவுகள் மூலம் நாம் அறியமுடிகின்றன.

இந்த வழக்கை ஏற்ற மும்பை உயர்நீதிமன்றம், ஓஷோவின் உயிலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவர உத்தரவிட்டிருக்கிறது.

புதிய மதவாதியோ என மேலை நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்திய ஓசோ, அவருடைய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அடைய அவருடைய நம்பிக்கைக்குரிய சீடர்களாலேயே மர்ம மரணத்தை அடைந்தார் என 26 வருடங்கள் கழித்து வேறு ஒரு சீடர் வழக்கு தொடர்ந்திருப்பது காலவினோதம்தான்.

மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.. இதைப்படித்தவுடன் வேறு எந்த ஒரு நிகழ்கால சிந்தனை வந்தாலும், அதற்கு நாம் பொறுப்பல்ல!.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Osho India's first crorepati saamiyar - the end of fame - life and rumors of his death.

    Osho,India's first crorepati saamiyar - the end of fame - life and rumors of his death.
    Story first published: Tuesday, July 25, 2017, 19:00 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more