Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
வாஸ்துப்படி வீட்டின் எந்த இடத்தில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மற்றும் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் எந்த இடத்தில் இருக்க வேண்டும், எங்கு இருக்கக்கூடாது என்பது குறித்த சில விதிமுறைகள் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன. சொல்லப்போனால், வாஸ்துவின் உதவியுடன், ஒருவரின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம். பண பிரச்சனைகளைத் தடுக்கலாம். வீட்டில் செல்வத்தை அதிகரிக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுமே சரியான இடத்தில், சரியான திசையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மேலும் வீட்டில் உள்ளோரின் வாழ்விலும் முன்னேற்றம் ஏற்படும்.

அந்த வகையில் அனைவரது வீட்டிலுமே குப்பைத் தொட்டி இருக்கும். பலரும் இதை குப்பை போடும் ஒன்றாக மட்டுமே பார்க்கலாம். ஆனால் அந்த குப்பைத் தொட்டியும் வாஸ்துப்படி சரியான இடத்தில் இருக்க வேண்டும்.
தவறான திசையில் இருந்தால் லட்சுமி தேவி கோபமடைந்து அந்த வீட்டிற்கு நிதி நெருக்கடியைத் தருவார். இப்போது வாஸ்துப்படி குப்பைத் தொட்டியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
வடகிழக்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டியை வீட்டின் வடகிழக்கு திசையில் எப்போதும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் மன ஆரோக்கியத்தை பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு, அந்த குடும்பத்தின் தலைவர் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
தென்கிழக்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குப்பைத் தொட்டியை தென்கிழக்கு திசையை நோக்கி வைத்தால், அந்த வீட்டில் பணம் சேர்வதில் சிக்கல் ஏற்படும். மேலும் வீட்டில் இருக்கும் பணமும் படிப்படியாக காலியாகி, கடைசியில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, கடன் சுமை அதிகரிக்கும்.
கிழக்கு மற்றும் வடக்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டியை கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அந்த வீட்டில் உள்ளோருக்கு இடையே சண்டைகள் அதிகரித்து, பிரிவினை ஏற்படும். மேலும் அந்த வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடைகள் ஏற்படும். அத்துடன் வடக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைத்தால், சிறந்த வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் குறையும்.
எந்த திசையில் குப்பைத் தொட்டியை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் குப்பைத் தொட்டியை வைக்க சிறந்த திசை தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இப்படி வைப்பதனால், வீட்டில் எவ்வித பிரச்சனைகளும் வராது மற்றும் வீட்டிலும் மகிழ்ச்சி பெருகும்.
எந்த இடத்தில் குப்பைத் தொட்டியை வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, குப்பைத் தொட்டியை வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது. குப்பையாக இருந்தாலும், வீட்டின் குப்பைத் தொட்டியை வீட்டிற்குள்ளேயே தான் வைக்க வேண்டும்.
எனவே உங்கள் வீட்டில் குப்பைத் தொட்டி சரியான திசை மற்றும் சரியான இடத்தில் உள்ளதா என்பதைப் பார்த்து, உடனே அதை சரிசெய்து, நற்பலனைப் பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications