Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
வாஸ்துப்படி, கற்றாழை செடியை வீட்டின் இந்த திசையில் வெச்சா.. தொழிலில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும்..
Vastu Tips In Tamil: இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த செடி தான் கற்றாழை. இந்த கற்றாழை உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும் என்பதை அனைவருமே அறிவோம்.
ஆனால் இந்த கற்றாழை வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைத் தருவதோடு, வீட்டில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கும் என்பது தெரியுமா?

ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், அந்த நன்மைகளைப் பெற கற்றாழை செடியை சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அப்படி வைத்தால் தான் முழு பலன்களும் கிடைக்கும்.
இப்போது கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதையும், எந்த திசையில் கற்றாழை செடியை வைக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் பெறும் நன்மைகள்
1. வாஸ்துப்படி, கற்றாழை செடி வீட்டினுள் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரக்கூடிய ஒரு செடியாக கருதப்படுகிறது. இந்த செடியை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அந்த வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். அதோடு, வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தாலும் நீங்கும்.
2. ஒருவரது வீட்டில் கற்றாழை செடி இருந்தால், அது அந்த வீட்டில் உள்ளோரின் அதிர்ஷ்டத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக அந்த வீட்டில் இருப்போர் எந்த துறையில் வேலை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைப்பதோடு, வேலையில் சந்திக்கும் தடைகளும் நீங்கும்.
3. உங்கள் வீட்டில் சண்டை அதிகமாக ஏற்படுகிறதா? வீட்டில் அமைதியே இல்லையா? அப்படியானால் கற்றாழை செடியை வீட்டில் வளர்த்து வாருங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையேயான பிணைப்பு அதிகரிக்கும்.
4. வீட்டில் கற்றாழை செடி வளர்ப்பதால் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை, பணிபுரிபவர்களுக்கு நல்ல வெற்றியும், நல்ல முன்னேற்றமும் ஏற்படும்.
5. உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்பட நேரிடுகிறதா? அப்படியானால் கற்றாழையை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலும், உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
6. கற்றாழை செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், அது வீட்டினுள் உள்ள காற்றினை சுத்திகரித்து, நல்ல காற்றினை நமக்கு அளிக்கும். அதுவும் இந்த செடியானது கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி, ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும்.
கற்றாழை செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும்?
வாஸ்துப்படி கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதாக இருந்தால், அதை சரியான திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அப்படி வைத்தால் தான் நற்பலனைப் பெறக்கூடும். கற்றாழை செடியை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் அது வடக்கு அல்லது கிழக்கு திசை தான். ஏனெனில் இவ்விரு திசைகளும் மங்களகரமான திசைகளாகும். இது தவிர மேற்கு திசையிலும் கற்றாழை செடியை வைத்து வளர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
