Latest Updates
-
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
மறந்தும் வீட்டின் வடக்கு திசையில் இந்த பொருட்களை வெக்காதீங்க... இல்லன்னா பண கஷ்டம் அதிகரிக்கும்...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் ஒவ்வொரு திசையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. ஆகவே தான் வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஏனெனில் வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிரம்பி வழியும். இதன் விளைவாக அந்த வீட்டில் உள்ளோர் வறுமையால் வாட வேண்டியிருக்கும். அதேப் போல் வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுமே அந்த வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் அந்த பொருட்களை தவறான திசையில் வைக்கும் போது, அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, குடும்பத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அந்த வகையில் வாஸ்துவில் குபேரர் குடியிருக்கும் திசையான வடக்கு திசை மிகவும் முக்கியமான திசையாகும்.
இந்த வடக்கு திசையில் இருந்து தான் அந்த வீட்டில் பணம் அதிகம் சேர்கிறது. எனவே உங்கள் வீட்டில் பணம் அதிக சேர வேண்டுமென்று விரும்பினால், வடக்கு திசையில் ஒருசில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது பண பிரச்சனையை ஏற்படுத்துவதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். இப்போது வாஸ்துப்படி எந்த பொருட்களை வீட்டின் வடக்கு திசையில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
காலணிகள்
எப்போதுமே வீட்டின் வடக்கு திசையில் காலணிகளை வைக்கக்கூடாது. செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரன் குடியிருக்கும் வடக்கு திசையில் அழுக்குகள் நிறைந்த காலணிகளை வைத்தால், அது அந்த குபேரனை அவமரியாதை செய்வதற்கு சமம். இதன் விளைவாக வீட்டின் செல்வத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
குப்பைத் தொட்டி
அனைவரது வீட்டிலுமே குப்பைத் தொட்டியை வைத்திருப்போம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, அந்த குப்பைத் தொட்டியை எக்காரணம் கொண்டும் வடக்கு திசையில் வைக்கக்கூடாது. அதேப் போல் இந்த திசையை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது. இப்படி வைத்தால், அது வீட்டின் நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
புத்தகங்கள்
எடை அதிகமாக இருக்கும் புத்தகங்களை வீட்டின் வடக்கு திசையில் வைக்கக்கூடாது. ஏனெனில் பருமனான எந்த வகை பொருட்களையும் வடக்கு திசையில் வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடையை ஏற்படுத்தி, ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பர்னிச்சர்கள்
பர்னிச்சர்களும் கனமானவை. எனவே இந்த பர்னிச்சர்களை வடக்கு திசையில் வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடையை ஏற்படுத்தும். இதன் காரணமாக அந்த வீட்டில் பணம் சேராமல் இருப்பதோடு, வருமானத்தில் இடையூறு ஏற்பட்டு, பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
இறகுகள்
இறகுகளை வீட்டில் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகம் நிரம்பியிருக்கச் செய்யும். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும். எனவே உங்கள் வீட்டின் வடக்கு திசையில் இறகுகள் இருந்தால், அவற்றை உடனே அகற்றுங்கள்.
கருப்பு நிற கிரிஸ்டல்கள்
குபேரர் குடியிருக்கும் வடக்கு திசையில் கருப்பு நிற கிரிஸ்டல்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது அந்த திசையில் பாயும் நேர்மறை ஆற்றலில் தடைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் செல்வம் பெருக கருப்பு நிற கிரிஸ்டல்களை வாஸ்துப்படி வடக்கு திசையில் வைக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications