Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி இந்த கணபதி போட்டோவை வீட்டு வாசலில் வெச்சா.. பண பிரச்சனை நீங்கி செல்வம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே வீட்டை அழகாக வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்காக பல்வேறு பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிப்போம். ஆனால் இதில் நிறைய பேர் செய்யும் தவறு, வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது. நம்பிக்கைகளின் படி, வாஸ்து சாஸ்திரத்தை உருவாக்கியவர் பிரம்ம தேவர். மனித நல்வாழ்வுக்காக இதை பிரம்மர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
எனவே ஒருவர் தங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பம் நல்ல ஆரோக்கியத்துடனும், நிதி பிரச்சனைகளின்றி செழிப்புடனும் இருக்க வேண்டுமானால், வாஸ்து விதிகளைப் பின்பற்ற வேண்டும். தெய்வங்களுள் முதன்மை கடவுளாக கருதப்படுபவர் விநாயக பெருமான்.

விநாயகரை விக்னகர்த்தா என்றும் அழைப்பர். ஏனெனில் இவர் அனைத்து விதமான தடைகள் மற்றும் பிரச்சனைகளை நீக்குவதோடு, வாஸ்து தோஷங்களையும் நீக்கக்கூடியவர். ஆகவே ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் விநாயகர் இருப்பதோடு, வீட்டு வாசலிலும் விநாயகரின் போட்டோக்கள் வைக்கப்படுகின்றன.
அதுவும் திருஷ்டி விநாயகரை வீட்டு வாசலில் தொங்கவிடும் போது, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படுவதோடு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களும் நீங்கும். ஆனால் விநாயகரின் பலவிதமான போட்டோக்கள் தற்போது விற்கப்படுகின்றன. சரியான போட்டோவை வாங்கி வைத்தால் தான், நற்பலனைப் பெற முடியும். இப்போது திருஷ்டி விநாயகரை வீட்டு வாசலில் வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் குறித்து காண்போம்.
வீட்டில் விநாயகர் சிலை அல்லது போட்டோவை வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள்:
* வாஸ்துப்படி, வீடு அல்லது அலுவலகத்தில் ஏதேனும் வாஸ்து குறைபாடு அல்லது தோஷம் இருந்தால், அதை நீக்க விநாயகர் சிலை அல்லது போட்டோவை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் விநாயகர் சிலையை வைப்பதாக இருந்தால், அதை தரையில் வைக்கக்கூடாது. விநாயகர் சிலையானது நம் கண் மட்டத்திற்கு சமமாக இருக்க வேண்டும்.
* வீட்டில் விநாயகரின் சிலை அல்லது போட்டோவை வைக்கும் போது, விநாயகரின் முகம் தெற்கு திசையையும், தென்மேற்கு கோணத்தையும் பார்த்தவாறு இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
* வீட்டில் விநாயகர் சிலை அல்லது போட்டோவை வைப்பதாக இருந்தால், உட்கார்ந்தவாறான விநாயகரையும், பணியிடம் அல்லது அலுவலகத்தில் வைப்பதாக இருந்தால் நின்ற நிலையில் உள்ள விநாயகரையும் வைக்க வேண்டும்.
* வீட்டின் மையப்பகுதி, வடகிழக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விநாயகர் சிலையை வைத்திருப்பது மங்களகரமானதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் வெள்ளை நிற விநாயகர் சிலையை வைத்தால், அது மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றை கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
* வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட விநாயகர் சிலையை வைத்திருப்பதால் எவ்வித தீங்கும் நேராது. ஆனால் ஒரே இடத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட விநாயகர் சிலை இருக்கக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
எந்த மாதிரியான விநாயகரை வைக்க வேண்டும்?
வீட்டில் விநாயகரின் சிலையை வைப்பதாக இருந்தால், எப்போது உட்கார்ந்த அல்லது படுத்த நிலையிலான விநாயகரைத் தான் வைக்க வேண்டும். வாஸ்துப்படி, லலிதாசனத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் சிலை சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது அமைதியைக் குறிக்கிறது. இது தவிர, படுத்த நிலையிலான விநாயகர் சிலையையும் வைக்கலாம். இது அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஏனெனில் இந்த நிலையிலான விநாயகர் ஆடம்பரம், வசதி மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது.
விநாயகரின் துதிக்கை எந்த திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்?
விநாயகர் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால், முதலில் விநாயகரின் துதிக்கை எந்த திசையில் உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் வாஸ்துப்படி, வீட்டில் இடது பக்கம் துதிக்கையை வைத்துள்ள விநாயகரை வைத்திருப்பது தான் நல்லது. ஏனெனில் இந்த நிலையில் உள்ள விநாயகர் வெற்றி மற்றும் நேர்மறையைக் குறிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications